செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

சென்னையில் வருணாசிரம, சனாதனத்தை வலியுறுத்துகின்ற மனுதர்மம் எரிப்பு

சுயமரியாதை உணர்வுத் தீ கொழுந்துவிட்டது!
சென்னை, பிப். 7- திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் எழுச்சியு டன் நடைபெற்றது. சென்னையில் இன்று (7.2.2019) காலை நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தலைமையேற்று   54ஆம் முறையாக கைது செய்யப் பட்டார். கழகத் தலைவருடன் ஏராளமான தோழர்கள் சிறைபுகுந்தனர். தமிழகம் முழுவதும் மனுதர்மத்தை கொளுத்திய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்படம் நேரம் முற்பகல் 11 என்றே குறிப்பிடப்பட்ட நிலையில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அணி அணியாக தோழர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். கழகக் கொடி களுடன் கருஞ்சட்டைப் போர்ப்படையின் சிப்பாய்களாக குடும்பத்துடன் சிறையேக திரண்டார் கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலை முன்பாக குழுமினர்.

மனுதர்மம் எரிப்புப் போராட்டம் குறித்து திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2.2.2019 அன்று அறிக்கை  விடுத்தார். தமிழகமெங்கும் மனுதர்மம் எரிப்போர் பட்டியல் தயாரானது. காவல்துறை அனுமதி மறுத்தாலும், தடையை மீறி, மனுதர்மத்தை எரித்து சிறையேகிட ஆயத்தமானார்கள் இருபால் தோழர்கள்.

சுயமரியாதை உணர்வு கொந்தளிப்பின் வெளிப் பாடாக மனுதர்ம எரிப்புப்போராட்டம் வெடித்துள் ளது. ஆரிய ஆதிக்கத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. தந்தை பெரியார் கொளுத்திய சுயமரியாதைத் தீ கனன்றுகொண்டு  பலமுறை மனுதர்மத்தை எரித்து சாம்பலாக்கி  வருகிறது.  7.2.2019 நாளான மனுதர்மம் இன்றும் சாம்பலாக்கப் பட்டது. சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலையில் அன்னை மணியம்மையார் சிலை அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கழகப்பொறுப்பாளர்கள்,  இருபால் கழகத்தோழர் கள் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு  கைது செய்யப்பட்டு அணிஅணியாக காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். சென்னை மண்டல கழக மாவட்டங்களாகிய தென் சென்னை, வடசென்னை,   தாம்பரம், சோழிங்க நல்லூர், திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களி லிருந்து போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மனுதர்ம எரிப்புப்போராட்டம் அரசியல் ஆதாயத் துக்கான போராட்டமல்ல. சமூகத்தில் மாற்றத்தை ஏற் படுத்துகின்ற உரிமைப்போராட்டம் என்பதை நிரூபிக் கின்ற வகையில், கருப்பு மெழுகுவர்த்திகளாம் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றார்கள்.மனுதர்மத்தை கழகம் கொளுத்திச் சாம்பலாக்குவது முதல் முறையல்ல. மக்களின் தன்மான உணர்வு பொங்க, ஆரிய, சனாதனத்தின் ஆதிக்கத்தை வேரோ டும், வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்திட வேண் டும் என்றால், வருணாசிரமதர்மத்துக்கு அடிப்படை யான மனுதர்மம் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும் என்று களம் கண்டனர் தோழர்கள்.

தமிழர் தம் மான மீட்பு இயக்கத்தின் தலைவர் வன்முறையை தூண்டவில்லை. சுயமரியாதை உணர் வைத் தட்டி எழுப்பியுள்ளார். அறவழியில் போராட் டத்துக்கான அழைப்பை விடுத்தார். கழகத் தலைவரின் ஆணையின்படி, இராணுவத்தையும் தாண்டிய கட் டுப்பாடு காக்கின்ற கழகத் தோழர்கள் பெருவிருப்புடன் சிறையேகப் புறப்பட்டனர். வில்லிலிருந்து புறப்பட்ட கணைகளாக, சீறிப்பாயும் புலியென வீறு கொண்டு புறப்பட்டது இருபால் கருஞ்சட்டைப் பட்டாளம்.

தமிழகம் முழுவதுமிருந்து வருணாசிரம மனுதர் மம் சாம்பலான செய்தி குவிந்துகொண்டிருக்கிறது. ஆரிய சனாதனம் ஆட்டம் கண்டு வருகிறது. கழகத் தோழர் களால் சிறைச்சாலைகள் நிரப்பப்பட்டு வருகிறது. கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க, தன்னல மறுப்புடன் கருப்பு மெழுகுவர்த்திகள் களத்தில் அணி வகுத்தார்கள். மனுதர்ம எரிப்பு ஆரிய ஆதிக்கத்தைத் தகர்த்து, சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை மீட்புக் கான போராட்டம் வெடித்துக்கிளம்பியது.

ஊரெங்கும் இதே பேச்சு. ஆரிய வலையில் சிக்குண் டவர்களுக்கும் சேர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப் பட்டுள்ளது. ஆரிய, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது.

மனு தர்மமா? அது என்ன? என்று கேட்பவர் களுக் கும்  கழகத்தின் போராட்டத்தால்  அனலென சுயமரி யாதை உணர்வுத் தீயாகப் பற்றிக்கொண்டது.

தமிழக மாநில உரிமைகளைப்பறித்து தமிழர்களை வஞ்சித்து வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங் கள்   எதிர்வரும் பொதுத்தேர்தலில் எளிதில் மக்களை சந்தித்துவிட முடியுமா?

ஏமாளிகளாக தமிழர்கள் இறுமாந்து இருந்தால் அரசியலிலும் அறுவடை செய்துவிடலாம் என்று அதற் காக வஞ்சகக் காவிக்கூட்டம் ஆயத்தமாகிவரும் சூழ லில், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் ஆணிவேர் தகர்க்கப்பட் டுள்ளது. கழகத் தலைவரின் கட்டளை யால் மனுதர்மம் சாம்பலாக்கப்பட்டது. மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று கூறும் மனுதர்ம சங்பரிவார் பாஜக கூட்டத்துக்கு இது ஒரு தக்க பதிலடியாகும்.

சென்னை வேப்பேரி பெரியார்  திடலில் அமைந் துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலை அருகிலி ருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கழ கத் தோழர்கள் மனுதர்மத்தை எதிர்த்து முழக்கமிட்ட படி ஊர்வலமாக சென்றனர். ஈ.வெ.கி.சம்பத் சாலை வழியே பெரியார் ஈ.வெ.ரா. சாலையை அடைந்து அன்னை மணியம்மையார் சிலை அருகில் தோழர்கள் குவிந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இ.இன் பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் இயக்க ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், தலைமைக்கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மனுதர்ம நூலில் கூறப்பட்டுள்ள  பெண்களை இழிவு படுத்துகின்ற பகுதிகளையும்,  வருணாசிரம ஜாதி இழிவு களைக் கொண்டுள்ள பகுதிகளையும் சுட்டிக்காட்டி, மனுதர்ம நூல் எரிக்கப்பட வேண்டிய தன் அவசியம் குறித்தும், போராட்ட நோக்கங்கள் குறித்தும் எடுத்து ரைத்தார். அதன்பின்னர் கழகத் தலைவர் மனுதர்ம நூலை எரித்தார். கழகத் தோழர்கள் எழுச்சி முழக்கங் களுடன் மனுதர்மத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் 54ஆம் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறையின் வாகனங்களில் அனைவரும் ஏற் றப்பட்டு, சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளி அருகில் உள்ள கம்மாவர் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர். தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்க ளில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்  நடைபெற்றது. மனுதர்மத்தை எரித்து கழகத் தோழர்கள் கைதாயினர்.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில்  சென்னை மண்டல கழகத்தின் கழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு கைதானார்கள்.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க எழுந்தது காண் கருஞ்சட்டைப் படை!


-  விடுதலை நாளேடு, 7.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக