அரும்பாக்கம், பிப். 19 தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதி பெருமாள் கோயில் தெருவில் 8.2.2019 அன்று மாலை 7 மணி அளவில் திராவிட மாணவர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் தென் சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கு.பா.அறிவழகன் மற்றும் எஸ்.அருட்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், தென் சென்னை) ஆகியோர் முன்னிலையிலும் இந்திய அரசியல் சட்டம் 51கிபின் படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அறிவியல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர் வி.விசுவாசு வரவேற்புரை ஆற்றினார்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சா.தாமோதரன் இணைப்புரை வழங்கினார்.
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி அறிவியல் கருத்துக்களை எடுத்துக்கூறி 'மந்திரமா அறிவியலா' என்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணை தலைவர் அ.த.சண் முகசுந்தரம், திராவிடர் கழக மண்டல தலைவர் தி.இரா.ரத்தினசாமி, திராவிடர் மாணவர் கழக இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அரசு மூட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறது, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது, புராண கதாபாத்திரங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் தொடர்புபடுத்தி மக்களை மடையர்களாக ஆக்க முயற்சிக்கிறது. சிலப்பதிகார கதாபாத்திர கண்ணகியை பற்றி எடுத்துக்கூறி மக்களையும் அவர்களின் உடைமை களையும் தீக்கிரையாக்க கண்ணகிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கொளுத்துவது சரியா? விட்டலாச்சார்யா படத்தில்வரும் காட்சிகள்கூட அறிவியலுக்கு முன் னோடி ஆகிவிடுமா? என கேள்விக்கணைகளை தொடுத்தார். சித்த மருத்துவர்கள் சிலர் தெரிந்தே மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர் என்றும், மனு தர்ம சாஸ்திரம் மனிதர்கள் பிறப்பையும், முனிவர்கள் பிறப்பையும் ஆபாசம் அருவருப்பான முறையிலே அறிவியலுக்கு எதிரான முறையிலேயும், பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் இழிபிறவிகள் என்றும், பெண்களை பாவப் பிறவிகள் என்றும் கூறுகிறது அதனால் தான் அந்த நூலை தீயிட்டு கொளுத்தினோம்! என்றும், மேலும் பல அறிவியல் விளக்கங்களை எடுத்துக் கூறி இரவு 10 மணி அளவில் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் எம். இளங்கோவன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத் தார்.
ஆங்காங்கே நெகிழிகள் வைக்கப்பட்டு கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட ஒருங் கிணைப்பை அரும்பாக்கம் திராவிடர் கழகம் செய்தி ருந்தது.
திராவிடர் கழக மண்டல செயலாளர் தெ.செ.கோபால், தென் சென்னை மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், க.பாலமுரளி கோ.மஞ்சநாதன், மதுரவாயல் சரவணன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக கோ.கோபால், செந்துறை இராசேந் திரன், கோ தங்கமணி, த.தனலட்சுமி, கு.பா. கவிமலர், மா.ராசு, தளபதி பாண்டியன், மு.டில்லிபாபு, எம்.பிரகாசம், ஏ.சுந்தர்,, சி.கார்வேந்தன், பெரு.இளங்கோ, எம்.ஜெயபிரகாஷ், குத்தாலம் கோவிந்தராஜ், வை.கலை யரசன், உடுமலை வடிவேல், கலைமணி, இரா.கோபால், க.இளவரசன், எல்.மகேந்திரன், எம்.சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- விடுதலை நாளேடு, 19.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக