சென்னை, நவ.2 வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 27.10.2018 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார்திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி கடவுள் மறுப்புக் கூறினார்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்து, வடசென்னை மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன் "விடுதலை" சந்தா சேர்ப்பு, "விடுதலை" சுவர் எழுத்து விளம் பரம், தஞ்சை கழக மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஆகியன குறித்தும், மாவட்ட கழகத் தோழர்கள் ஆற்றிட வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
கூட்டத்திற்கு வருகை தந்த மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், "விடுதலை" சந்தா சேர்ப்புப் பணிகளில் மாவட்டக் கழகத் தோழர்கள் ஊக்கத்தோடு பணியாற்ற வேண்டுமெனவும், மாணவர் கழகத்தினரின் இலக்கை எட்டும் சந்தா சேர்ப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டுமெனவும் குறிப்பிட்டு உரையாற்றி னார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல் வம், மாவட்டக் கழகத் தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், விடுதலை' சந்தா இலக்கினை முடித்துத் தரவேண்டும் எனவும் கேட்டு இணைப்புரை வழங்கினார்.
சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், ப.க. அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், இளை ஞரணி செயலாளர் சோ.சுரேசு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோ தரன், செம்பியம் கழகத் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், கண்ணதாசன்நகர் தலைவர் கு.ஜீவரத்தினம், செயலாளர் கண் மணி துரை, அமைப்பாளர் வி.இரவிக்குமார், புரசை பகுதி தலைவர் சு.அன்புச்செல்வன், வியாசர்பாடி செயலாளர் சு.மும்மூர்த்தி, சி.வெற்றிச்செல்வி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வடசென்னை மகளிர் பாசறை செயலாளர் க.சுமதி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, வை.கலையரசன், புரசை பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா.காரல் மார்க்சு, மாதவரம் பகுதி இளைஞரணி அமைப்பாளர் அ.பிரகாஷ், தங்க.சரவணன், மு.கவுதமன், அயன்புரம் க.துரை, செ.கீதை கண்ணன், சு.சுரேசு ஆகியோர் இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து "விடுதலை" சந்தாக்களை தங்களது சொந்தப்பொறுப்பில் சேர்த்துத் தருவதாகக் கூறினர்.
நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றி னார். தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா, தஞ்சையில் கழக மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா முதலானவைகள் குறித்து கலந்துரையாடி, "விடுதலை" சந்தா சேர்ப்புப் பணியினை முதன்மையானதாகக் கொள்ளுமாறு கேட் டுக் கொண்டார்.
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வடசென்னை மாவட்ட கழக அமைப்புக்கும், கிளைக்கழக அமைப்புகளுக்கும் புதிய பொறுப் பாளர்களை அறிவித்தார்.
வடசென்னை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்
துணைத்தலைவர்: கி.இராமலிங்கம், துணைச்செயலாளர் சு.மும்மூர்த்தி, அமைப் பாளர்: புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர்: ஓட்டேரி சி.பாசுகர்.
கிளைக்கழகப் பொறுப்பாளர்கள்
பெரம்பூர்: தலைவர் & து.தியாகராசன், செயலாளர் & மங்களபுரம் பாசுகர்
செம்பியம்: தலைவர் & பா.கோபால கிருட்டிணன், துணைத்தலைவர் & ச.முகிலரசு, செயலாளர் & டி.ஜி.அரசு
கொடுங்கையூர்: அமைப்பாளர் & கோ.தங்கமணி
வியாசர்பாடி: தலைவர் & ஏ.தணிகாசலம், செயலாளர் & சு.மும்மூர்த்தி
கண்ணதாசன் நகர்: தலைவர் & கு.ஜீவ ரத்தினம், செயலாளர் & கண்மணிதுரை, அமைப்பாளர் & வி.இரவிக்குமார்
புரசைவாக்கம்: அமைப்பாளர் & பால முருகன்
ஓட்டேரி: தலைவர் & க.சிட்டிபாபு, செயலாளர் & எஸ்.வி.சேகர்
எருக்கமாநகர்: தலைவர் & சொ.அன்பு, செயலாளர் &வி.பிரபாகரன், அமைப்பாளர் & ஆர்.மூர்த்தி
மாதவரம்: அமைப்பாளர் & சி.வாசு
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞராகப் பதிவு செய்து & பணி தொடங்கிய வெள்ளி விழா ஆண்டு நிறைவை (27.10.2018) முன்னிட்டு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தோழர்களது கரவொலிக் கிடையே அவருக்குப் பயனாடை அணி வித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாவட்ட கழகப் புதிய பொறுப் பாளர் களாக அறிவிக்கப்பட்ட தி.செ. கணேசன், கி.இராமலிங்கம், சு.மும்மூர்த்தி, சு.அன்புச் செல்வன் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மண்டல கழக சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பய னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஏற்பாட் டில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிறைவாக புரசை சு.அன்புச்செல்வன் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 2.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக