புதன், 28 நவம்பர், 2018

கஜா புயல் இழப்பீடு கோரிய சென்னை ஆர்ப்பாட்டத்தில் உரிமை முழக்கங்கள்


மத்திய அரசே கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை


பேரிடராக அறிவித்து போர்க்கால அடிப்படையில் உதவி செய்க!




சென்னை, நவ.27 கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உடனடி நிவாரணம் தேவை --& பேரிடராக அறிவித்துப் போர்க்கால அடிப் படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் நடத்திட வேண்டும் என்று சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (27.11.2018) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  சென்னையில் சென்னை மண்டல கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்ட கண்டன  உரையாற்றினார்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் கழகத் தோழர்கள் திருவாரூர், நாகப்பட்டினம், வேதா ரண்யம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாக சென்று ஏறத்தாழ  பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். அந்த பகுதிகளிலெல்லாம் மக்கள் பொருளாதார ரீதியாக வாழ் வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே மின்சார மில்லை. சமைப்பதற்கு கூட ஒரு தகுதியான  இடம் இல்லை. கூரைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அவர்களையெல்லாம் சந்திக்க தமிழர் தலைவர் நாளையிலிருந்து இரு நாள்கள் அந்த பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்க  செல்கிறார்கள். கழகத் தோழர்கள் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், நிவாரணப்பொருள்களும் வழங்கி வரு கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்




கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக் கின்ற நிலைமையை நாம் உணர்ந்தது என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை. பத்திரிகைகளில் படிப்பவை, தொலைக்காட்சிகளில் பார்ப்பவை எல்லாம் ஒரு சதவிகித அவலத்தைத்தான் நாம் தெரிந்து வைத்திருக் கின்றோம். நேரிலே அங்கு சென்று பார்த்தால்தான் இப்படி ஒரு இயற்கைப் பாழா? இப்படி ஒரு இயற்கைக் கோரத் தாண்டவமா? என்ற கேள்வி நமக்குள்ளே எழச்செய்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள் உள்ள மக்கள்கூட நடுத்தெருவிலே நிற்கக் கூடிய ஓர் அவலத்தை அங்கே சென்று பார்த்தவர் களுக்குத்தான் தெரியும்.

நாளை என்பது அவர்களைப்பொறுத்தவரையிலே ஒரு பெரிய கேள்விக்குறி. டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழக்கூடியன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக காவிரி நீர்ப் பிரச்சினையின்காரணமாக அந்த பகுதிகளிலே சிறுக சிறுக விவசாயம் அழிந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு காலக்கட்டத்தில், இப்படி ஓர் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு, அந்த மக்களை முழுமையாக சீர்குலைத்து தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டதைப்போன்ற ஒரு துயரமான நிலையை அங்கே பார்க்க முடிகிறது. படிக் கின்ற பிள்ளைகள் புத்தகங்கள்கூட, அங்கே கிடையாது. வீடுகளில்லாமல் எங்கே தங்குவது என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இன்றைக்கு அரசு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் தங்களால் இயன்ற அத்துணை உதவிகளையும் மனச்சான்றோடு, மனிதாபிமானத்தோடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், போர்க்கால அடிப்படையிலே பணிகள் அங்கே நடைபெற வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.  பேரிடராக அறிவிக்க வேண்டும். ஏன் பேரிட ராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம் என்றால், பேரிடர் என்று சொன்னால், அதற்காக ஒதுக்கப்படுகின்ற தொகை, அதற்காக செய்யப்படுகின்ற நிவாரணங்கள் பல வடிவங்களிலே வேகமாக இருக்கும். அந்த முறையில் பேரிடராக அதிகாரபூர்வமாக அறிவித்து, பணிகளைப் போர்க்கால அடிப்படையிலே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்  திருப்பித்திருப்பி இதைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அங்கே அமைச்சர்கள்கூட செல்ல முடியவில்லை.

அப்படி சென்றாலும், மக்கள் அவர்களை முற்றுகையிடுகிறார்கள். இந்த அளவிற்கு மக்களுடைய கோபம் இன்றைக்கு கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், ஏதோ மத்திய அரசு சம்பிர தாயமாக ஒரு குழுவை அனுப்புவது, அதற்குப்பின்னாலே ஆலோசனை செய்வது, அதற்குப்பின்னாலே அரசாங்கம் கேட்ட தொகை ஒன்று, கொடுக்கின்ற தொகை ஒன்று என்கின்ற நிலைதான் கடந்த பல காலக்கட்டங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி எரிகிறது என்று கமிட்டி போட்டு, எதனால் ஏற்படுகிறது என்று கமிட்டி போட்டு, அதற்குப் பின்னாலே அந்த வீட்டை அணைப்பது என்பது எப்படி ஒரு பரிதாப மான நிலையோ, அதேபோல் தான் இன்றைக்கு நேரடியாக பாதிக் கப்பட்ட மக்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன? என்கின்ற ஒரு கேள்விக் குறியோடு பரிதவிக்கக்கூடிய நிலையிலே உடனடியாக இடைக்கால நிதியாவது அறி வித்து, உடனடியாக அந்த மக்களுடைய உயிரைக் காப் பாற்றக்கூடிய ஒரு காரியத்திலே, மாநில அரசாங்கம் ஈடுபட வேண்டும், மத்திய அரசாங்கம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண் டும். இவற்றை எல்லாம் மக்க ளின் குரலை மக்கள் மத்தியிலே எடுத்துச்சொல்லி, உங்கள் மூலமாக மாநில, மத்திய அர சாங்கங்களுடைய காதுகளுக்கு எட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக் காகத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு தழுவிய அளவிலே எல்லா மாவட்டங்களிலும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்கெல்லாம் தெரியும், விவசாய மாவட்டம் என்றால், பயிர் வளர்ப்பது, மரங்கள் வளர்ப்பது, கால் நடைகளை வளர்ப்பது இவைதான்  அவர்களுடைய ஜீவாதார வாழ்க்கைக்கான அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.

அவையெல்லாம், முற்றிலும் அழிந்துவிட்ட பிறகு, அவர்கள் என்ன செய்வார்கள் என்றி நிலைமையை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கெல்லாம் மனிதாபிமானம் இருக்கிறது, மனித நேயம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக ஒரு சரியான சந்தர்ப்பம் இப்போது கிட்டியிருக்கிறது. இந்த சரியான சந்தர்ப்பத்தை தனியார் நிறுவனங்களும், தன்னார்வ நிறுவனங்களும், அதே போல அரசாங்கமும்  ஓடிச்சென்று அவர்களுடைய துயரைத் துடைக்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் நிவாரணப் பணிகள்


திராவிடர் கழகத்தைப்பொறுத்தவரையிலே, அந்த பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. எங்கள் கல்வி நிறுவனங்கள் எல்லாம் நேரடியாக அந்தப்பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்துகொண்டிருக் கிறார்கள். மகளிர் எல்லாம் அந்த கிராமங்களுக்குச் சென்று வேண்டிய உதவிகளை செய்து கொண்டி ருக்கிறார்கள். ஆகவே, இந்த நிலையிலே இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாங்கள் தெரிவித்துக்கொள்வது உடனடிப் பரிகாரம், உடனடி நிவாரணமே!

இரண்டாவதாக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் இப்போது இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் இருப் பார்கள். நேரடியாக பிரச்சினைகளைப்பார்த்து தேவை யான உதவிகளை செய்வதற்கான வாய்ப்புகளெல்லாம் இருக்கும். மாநில அரசாங்கம் கேட்டிருக்கும் நிதியை ஒரு பைசா கூட குறையாமல் மத்திய அரசு கொடுக்க வேண்டும்-.

இவ்வாறு கழகத் துணைத் தலைவர் பேசினார்.

ஆர்ப்பாட்ட முடிவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை க.கண்ணன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலக் கழக மாவட் டங்களிலிருந்து கழகத்தின் பல்வேறு அணியினரும் பெருந்திரளாக கலந்தகொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 27.11.18


சென்னை, நவ.28 கஜா புயலை தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும். மாநில அரசு கோரும் நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சியினரையும் இணைத்த குழுக் களை அமைத்து வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர் தலை உடனடியாக நடத்த வேண்டும் என்னும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (27.11.2018) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றி னார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வரு மாறு: தலைமைச் செயற்குழு உறுப் பினர் ச.இன்பக்கனி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்  களமுருகேசன், புலவர் பா.வீரமணி,  மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், மந்திரமா? தந்தி ரமா? பேராசிரியர் ஈட்டி கணே சன், திருவண்ணாமலை கவுத மன் மற்றும் சென்னை மண்டல கழக மாவட்டங்களிலிருந்து பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மகளிர் அணி: க.பார்வதி, சி.வெற்றிசெல்வி, தங்க.தன லட் சுமி, வி.வளர்மதி, பி.அஜந்தா, சகானப்பிரியா, கற்பகம்

தாம்பரம்: ப.முத்தையன், மா.இராசு, சு.மோகன்ராஜ், இலட் சுமிபதி, பொழிசை க.கண்ணன், மா.குணசேகரன், இராமாபுரம் ஜெனார்த்தன், ஊரப்பாக்கம் பொய்யா மொழி, ஊரப்பாக்கம் சீனிவாசன், மேடவாக்கம் விஜய் ஆனந்த், செஞ்சி ந.கதிரவன், குன்றத்தூர் பரசுராமன்

கும்மிடிப்பூண்டி: புழல் த.ஆனந் தன், இர.ரமேஷ், ந.ஜனாதி பதி, அறிவுமானன், ந.கஜேந் திரன், சோழவரம் சக்கரவர்த்தி, மு.க.தமிழ்செல்வம், செ.உதய குமார்

திருவொற்றியூர்: பா.பாலு, செல் வம், சுதாகர்

ஆவடி: பன்னீர்செல்வம், முத்து கிருஷ்ணன், க.இளவரசன், இரா. கோபால், பெரியார் மாணாக்கன், கலைமணி, உடுமலை வடிவேல்

தென்சென்னை: இரா.வில்வ நாதன், செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், மு.சேகர், அ.பாபு, மு.ஆனந்தன், இரா.ரவி,  பி.டி.சி.இராஜேந்திரன், அரும் பாக்கம் சா.தாமோதரன்

வடசென்னை: கணேசன், சு.அன்புசெல்வன், சோ.சுரேஷ், சி.காமராஜ், வேலவன், கொளத் தூர் பார்த்திபன், தங்கமணி, சுந் தரமூர்த்தி, அம்பேத்கர்,-சிவக் குமார் மகேஷ், சுதன், அருள், ஷாஜகான், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் பரீதின்.

-  விடுதலை நாளேடு, 28.11.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக