வியாழன், 22 நவம்பர், 2018

சென்னை மண்டல இளைஞரணி கழக கலந்துரையாடலில் தீர்மானம்


சென்னை மண்டல கழக கலந்துரையாடலில் தீர்மானம்




சென்னை, நவ.22 திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டல இளைஞரணி கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை மண்டல இளை ஞரணி சார்பில் 500   விடுதலை' சந்தாக்களை வழங் குவது என்றும், குருதிக் கொடை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திட லில் அன்னை மணியம்மையார் அரங்கில் 18.11.2018 அன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆவடி வை.கலையரசன் கடவுள் மறுப்பு கூறினார். மண்டல இளைஞரணி அமைப் பாளர் சோ.சுரேஷ் தலைவரை முன்மொழிந்து உரை யாற்றினார். மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி வழிமொழிந்து வரவேற்புரையாற் றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களை யும், அவற்றை செயல்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அணுகுமுறைகளையும் கூறினார். குறிப்பாக விடுதலை சந்தா சேர்ப்பதன் முக்கியத் துவத்தை எடுத்துக் கூறி னார்.

அவரைத் தொடர்ந்து வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் கெ.விஜயகுமார், செயலாளர் சட்டநாதன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், செயலாளர் மணித்துரை, கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், அமைப்பாளர் கார்த்தி கேயன், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கலைமணி, ஆவடி நகர இளைஞரணி தலைவர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.சதீஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நித்தியாநந்தம், வடசென்னை பெரம்பூர் பகுதி திராவிடர் கழக இளைஞரணி இந்திரஜித், புதுவண்ணை இளைஞரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் விடுதலை சந்தா சேகரிப்பில் தங்களது இலக்கு குறித்தும் கையாளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் உரையாற்றினர்.

அவர்களைத் தொடர்ந்து தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மண்டலச் செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் அரிய கருத்துகளை வழங்கி உரை யாற்றினர்.

கூட்டத்தில் பங்கேற்ற புதிய தோழர்களான தாம்பரம் வசந்தகுமார், மயிலாப்பூர் கலையரசன், போரூர் தினேஷ், வடபழனி தினேஷ், வடபழனி இரமேஷ், பூபதி ஆகியோர் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு உரையாற்றினர்.

பின்னர் மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர் மானங்களை முன்மொழிந்தார். தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையை நிறைவுரையாகவும் வழிகாட்டுதல் உரை யாகவும் ஆற்றினார். அவரது உரையில் அரசியல், சமூக சிக்கல்களையும் இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதில் (தந்தை பெரியார் காலம் தொட்டு) இயக்கத்தின் நிலைப்பாட்டையும், விடுதலை ஏட்டின் தேவையையும், அதன் முக்கிய பங்களிப்புகளையும் விளக்கி உரையாற்றினார். இறுதியாக பொன்னேரி நகர மாணவர் கழக பொறுப்பாளர் சுகன்ராஜ் நன்றி யுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வடசென்னை மாவட்ட அமைப் பாளர் புரசை அன்புச் செல்வன், பா.கோபாலகிருஷ்ணன், கா.காரல்மார்க்ஸ், ச.தாஸ், அம்பேத்கர், கோயம்பேடு அண்ணாதுரை, க.தமிழ்ச்செல்வன், தரமணி மஞ்சநாதன், மாணவர் கழகத் தோழர் கு.பா.கவிமலர், எண்ணூர் செல்வா, பெரம்பூர் முரளிகிருஷ்ணன், பெரம்பூர் உமாபதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:



தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்


கடலூர் மாவட்ட முன்னாள் மகளிரணி அமைப் பாளர் இரா.சீனியம்மாள் வயது 70 (20.10.2018), பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் வயது 69 (31.10.2018), ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரரான கூடுவாஞ்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.மன்னார் வயது 85 (2.11.2018) அவர்களின் மறைவிற்கு சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங் கலையும், அவர்களின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

குருதிக்கொடை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) & உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் அயராது உழைத்துவரும் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளான (2.12.2018) அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெறும் மனிதநேயப் பணியான "குருதிக்கொடை" வழங்கும் முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட இளைஞரணித் தோழர்கள் குருதிக்கொடை வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

விடுதலை சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான  விடுதலை' நாளிதழுக்கு சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து "500" விடுதலை சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

"என் கடன் பெரியார் பணிமுடிப்பதே"


திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளை (சுயமரியாதை நாள்) முன்னிட்டு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தினங்களில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட ஏழு மாவட்டங்களில் "என் கடன் பெரியார் பணிமுடிப்பதே" எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கூட்டங்களை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களின் ஆலோசனையினைப் பெற்று சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் 5:

விடுதலை வளர்ச்சி நிதி


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் தங் களுடைய பிறந்த நாள் உட்பட பிற நிகழ்வின்போது கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறும்போதெல்லாம் பயனாடை களுக்குப் பதிலாக "விடுதலை வளர்ச்சி நிதி" வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:

பெரியார் சமூக காப்பணி - மாநில மாநாடு


அ) தஞ்சையில் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கான விளம்பரங் களில் சிறப்பாக இளைஞரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஆ) மாநில மாநாட்டையொட்டி தலைமை நிலை யம் அறிவித்துள்ளபடி பெரியார் சமூக காப்பணி யில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தோழர்கள் பயிற்சி யில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 22.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக