நீட் - "புதிய கல்விக் கொள்கையை" எதிர்த்து தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்
சென்னை, டிச.18 தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடை பெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) ‘நீட்', ‘புதிய கல்விக் கொள்கையை' எதிர்த்து தெருமு னைப் பரப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.
நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அவர்களின்
தென் சென்னை - கோட்டூர்
தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கோட்டூர் அங் காடி பகுதியில் 07.12.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் தொடங்கி திராவிடர் கழகம் - இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் ந.மணித்துரை (மாவட்ட இளைஞரணி செயலாளர்) தலைமையிலும் இரா.வில்வ நாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செய லாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்), மற்றும் மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென் சென்னை, பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலையிலும் சிறப்புடன் நடை பெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சிவசீலன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக 'இனநலம் கலைக் குழு'வை சேர்ந்த பிரின்சு என்னாரசு பெரியார், இறைவி, து. கலைச்செல்வன், உடுமலை வடிவேலு ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .
ஓவியா அன்புமொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), ஆளூர் ஷாநவாஸ் (துணைப் பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தை கட்சி) ஆகியோர் உரையாற்றியதற்கு பின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி அனைவரும் பேசினர். 31 சி சட்டம் வடிவமைத்துக் கொடுத்து ஒன்பதாவது அட்டவணையில் 69 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மூன்று பார்ப்பனர் களை கொண்டே சேர்க்க வைத்து சாதனை படைத்தவர், ஏராளமான மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி மண்டல் குழு அறிக்கையை அமலாக்க செய்தவர், அரசால் தமிழுக்கு ஆபத்து, இந்தி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு போன்ற தமிழர்களின் உரிமைகள் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படும் நிகழ்வுகளின் போதெல்லாம் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தி தமிழர் தலைவர் என்றென்றும் சாதனை படைத்து வருகிறார், சாதனைகளை பாராட்டும் வகையில் அமெரிக்க மனிதநேய அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என சுட்டிக் காட்டினர். பிஜேபி அரசின் தமிழர் விரோத செயல்களையும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோரின் இட ஒதுக்கீட்டை பறிப்பது குறித்தும் விளக்கி பேசினர்.
வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வட சென்னை மாவட்டத் தலைவர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), அடையாறு த.க.நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் கணேசன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழினியன், வட சென்னை ப.க. அமைப்பு செயலாளர் ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), வடசென்னை இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல் வன், பொழிசை கண்ணன், தரமணி கோ.மஞ்சநாதன், அ. அன்பு, வி.வளர்மதி, வி.தங்கமணி, வி,யாழ்ஒளி, பி.அஜந்தா, மு.பவானி, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், பெரியார் சேகர், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், குன்றத்தூர் சி.பரசுராமன் குன்றத்தூர் மு.திருமலை பூந்தமல்லி க.தமிழ்ச் செல்வன், சோழபுரம் சக்கரவர்த்தி, சோழபுரம் ந.கஜேந்திரன், சு. தமிழ்ச்செல்வன், டி.தமிழ்ச்செல்வன், ஜி.டி.எம்.யாசிர், தமிழ ன் பிரபாகரன்,அ.தில்ரேஸ் பானு, எ.ஜெயவர்மன், சிறுத்தை சாகீர், மு.அய்ஸ்வர்யா, பா.முத்தழகு மற்றும் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பொதுமக்கள் பெருமளவில் வந் திருந்து கருத்துகளைக் கேட்டு பாராட்டு தெரிவித்தனர்.
ஜெயவர்மன் என்பவர் புதிய கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் .
இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக