எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் பெசன்ட் நகர் அந்தோணி கடந்த 51 நாள்களாக பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறார். இன்றைக்கு 52ஆவது நாளாக அடையாறு காந்தி நகரில் உள்ள ஜீவதானம் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இல்லத்தில் தங்கி பயிலக் கூடிய மாணவர்கள் சுமார் 30 பேருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புத்தாடைகள், எழுதுப் பொருள்கள், புத்தகம், நோட்டுகள் வழங்கி காலை உணவினை வழங்கினார். தென் சென்னை மாவட்ட வி.சி.க. துணைச் செயலாளர் பெசன்ட் நகர் அந்தோணி, தொண்டு நிறுவனத்தின் காப்பாளர் சகோதரி லிட்வினா மற்றும் பணியாளர்கள் தமிழர் தலைவரை வரவேற்று பொன்னாடை அணிவித்தனர். உடன்: தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் நா. மணிதுரை, கானத்தூர் அப்பாஸ், செ.லோகு, ஆர்.டி.ஓ. கண்ணன், சூர்யா, தாமு, ஈஞ்சம்பாக்கம் முருகன் சன்ஜெய், ஆகாஷ், ஜோஷ்வா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக