செவ்வாய், 18 அக்டோபர், 2022

மயிலை சேதுராமன் துணைவியார் மறைந்த டி.எஸ். பிரேமா படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்


தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மயிலை சேதுராமனின் துணைவியார் மறைந்த டி.எஸ். பிரேமா அவர்கள் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மயிலை கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் எஸ்.முரளி, மயிலை கிழக்கு பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் மா.பா. அன்பு, தென் சென்னை மாவட்டத்   திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், சைதை மதியழகன், கோவி. இராகவன், அரும்பாக்கம் தாமோதரன் மற்றும் டி.எஸ். ராஜூ, டி.கே. பன்னீர்செல்வம், டி.கே. பிரகாஷ், இ. தணிகாசலம் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளனர். மறைந்த அம்மையார் தனது உடலை மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்கு வழங்க வேண்டும் என அவரது கணவரிடம் வேண்டுகோள் விடுத்ததன்படி அவரது மறைவிற்கு பின் அவரது உடல் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையாக அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (மயிலை, 18.10.2022)

தி.மு.க. பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி,  மா.பா. அன்பு  ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். மயிலை கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் எஸ்.முரளி, அவர்களுக்கும், மயிலை கிழக்கு பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் மா.பா. அன்பு அவர்களுக்கும்  தமிழர் தலைவர் தந்தை பெரியார் சிலையினை வழங்கினார். மயிலை சேதுராமன் விடுதலை சந்தா தொகை ரூ.2,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை மயிலாப்பூர் - 18.10.2022)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக