8.10.2022 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்
கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளராக பாஸ்கரன், பழனி மாவட்டக் கழகத்திற்கு தலைவராக முருகன், மாவட்ட செயலாளராக பொன். அருண்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
கழகச் சொற்பொழிவாளர் மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுகள்
8.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட பிரச்சாரத் திட்டங்கள் வருமாறு:
அக்டோபர்- 2022 முதல் ஜூன் - 2023 வரை பிரச்சாரத் திட்டங்கள்
1. அக்டோபர் மற்றும் நவம்பர் பிரச்சாரத் திட்டம்
= ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு கூட்டங்கள்
= 64 மாவட்டங்களிலும் - 128 கூட்டங்கள்
= பேச்சாளர்கள் - 25 பேர்கள்
= நிகழ்ச்சிகள் - தெருமுனை அல்லது பொதுக்கூட்டங் களாக நடைபெற வேண்டும்.
= மழை நெருக்கடியிருப்பின் - அரங்க நிகழ்ச்சியாக நடத்தலாம்
2. டிசம்பர் மாத பிரச்சார திட்டம்
= தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு கிராமப் பிரச்சாரத் திட்டம்.
= முதற்சுற்று - 10 மாவட்டங்களில்
= ஒரு மாவட்டத்தில் 10 நாட்கள் மட்டும்.
= ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் - அ) 1 பேச்சாளர் ஆ) 1 மந்திரா? தந்திரமா நிகழ்ச்சியாளர் (அல்லது) (இ) பகுத்தறிவு இசை நிகழ்ச்சி (ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி மட்டும்)
3. புத்தாண்டு - 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள்
= தமிழர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு
= பொதுக்கூட்டம், = பட்டிமன்றம், = வழக்காடு மன்றம்
= சுழலும் சொற்போர்
= கவிஞர் கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அருள்மொழி, அதிரடி அன்பழகன் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள்
= ஒரு மாவட்டத்தில் மேற்கண்ட ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுதல் வேண்டும்.
= பொதுவெளியில் இயன்றவரை நடைபெறுதல் வேண்டும்.
4. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
= மண்டலத்திற்கு ஒரு பயிற்சிப் பட்டறை
= 100 பேர்களுக்கு மிகாமல்
= தலைமைக்கழக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்
= 2023-க்குள் அனைத்து மண்டலத்திலும் பயிற்சிப் பட்டறை நடைபெற்றிடல் வேண்டும்.
5. மந்திரமா? தந்திரமா பயிற்சிப் பட்டறை
இம்மாத (அக்டோபர்) கடைசி வாரத்திற்குள் குறைந்தது 25 - பேர்களுக்கு மந்திரமா-? தந்திரமா? நிகழ்ச்சி செய்வ தற்குரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஜூன் - 2023
ஜூன் - பள்ளி, கல்லூரி வாயிற் கூட்டங்கள் நடத்திடல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக