திங்கள், 17 அக்டோபர், 2022

தென் சென்னையில் விடுதலை வளர்ச்சி குழு -3ன் பொறுப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி

15.10.2022 மாலை 7.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட  திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம்  சைதாப்பேட்டை மானமிகு மு.ந.மதியழகன் இல்லத்தில்  கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன்,  செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.செயராமன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம்,  மண்டல செயலாளர்  தே.செ.கோபால்,  மத்தூர் நிலவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், இளைஞரணி மாவட்ட தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை, திருவல்லிக்கேணி பகுதி தோழர் அப்துல்லா ஆகியோர் கருத்துகளை தெரிவித்தனர்.

8.10.2022இல் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை ஏற்று சிறப்பாக செயல்படுவது என வும் அறிவாசான் தந்தைபெரியார் பிறந்தநாள்விழா, ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோசன்குதிரை நூல்அறிமுகவிழா நடத்துவது என்றும்,
மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயர்நகர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, விருகம்பாக்கம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சந்தாக்களை திரட்டி   வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக   இளைஞர் அணி மாவட்ட தலைவர் ச. மகேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக