மறைவு
October 10, 2020 • Viduthalai • மற்றவை
செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர் ம.கருணாநிதி அவர்களின் தாயார் ம.அஞ்சலா (வயது 81) அவர்கள் 7.10.2020 அன்று அதிகாலை செங்கல்பட்டு அருகிலுள்ள வல்லம் என்ற ஊரில் காலமானார். மாலை 4 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத்தின் சார்பிலும் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. கலியப்பேட்டை தமிழ் மணி, செங்கல்பட்டு இராஜேந்திரன், தன சேகரன், செம்பியன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பேரமனூர் கழகத் தோழர்கள் சு. விஜயராகவன். கி.நீலகண்டன், கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க தலைவர் த.ரமேஷ், துணைத்தலைவர் கோ.குமாரி மற்றும் கழகத் தோழர்களும் கோத்ரேஜ் தொழிற்சாலை தொழிலாளர்களும் மரியாதை செலுத்தினர்.
October 17, 2020 • Viduthalai •
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக