ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அறிஞர் அண்ணாவின் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் - சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2019)  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தும், அவர் படத்திற்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2019) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தும், அவர் படத்திற்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், துணைப்பொதுச் செயலா ளர் ச.இன்பக்கனி, திராவிட வர லாற்று ஆய்வு மய்ய செயலாளர் முனைவர் ந.க.மங்கள முருகேசன், மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தைய்யன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் விடுதலை நகர் ஜெயராமன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மயிலை டி.ஆர்.சேதுராமன், சைதை மு.ந.மதியழகன், ஆயிரம் விளக்கு சேகர், அரும்பாக்கம் சா.தாமோதரன், கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, க. கலைமணி, சுதன், உடுமலை வடிவேல், தளபதி பாண்டியன், காரல்மார்க்ஸ், பா.கோபாலகிருஷ்ணன், அமைந்த கரை சாம்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திர ளாகப¢ பங்கேற்று இந்நிகழ்வில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிஞர் அண்ணா அவர்க ளின் அடுத்த ஆண்டு பிறந்த நாள் முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக் கும் அண்ணா சிலைக்குக் கழகத் தின் சார்பில் மாலை அணிவிக்கப் படும்.
- தலைமை நிலையம்
விடுதலை நாளேடு, 15.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக