செவ்வாய், 25 டிசம்பர், 2018

சென்னை சைதாப்பேட்டையில் தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

சென்னை, டிச.25 தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில் தேரடி அருகில்    24.12.2018 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக மாலை 5 மணியிலிருந்து திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாணவர் கழக இணை செயலாளர் (மகளிர் பிரிவு) பா.மணியம்மை தந்தை பெரியார் குறித்த பாடலைப் பாடினார். பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டத் தில் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் இரா. வில்வநாதன் வர வேற்றார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், சி.செங் குட்டுவன் கு.அய்யாத்துரை, துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோ தரன், இளைஞரணித் தலைவர் ச.மகேந் திரன், செயலாளர் ந.மணித்துரை முன் னிலை வகித்தனர்.

நூல் வெளியீடு


பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டத் தில் இயக்கத்தின் சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. திமுக மாநில மகளிரணி செயலாளர் மாநிலங்களவை திமுக தலைவர் கவிஞர் கனிமொழி புத்தகங்களை வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார். ரூ.380 நன்கொடை மதிப்புள்ள ஆறு புத்தகங்கள்  ரூ.300க்கு வழங்கப் பட்டன.

தலைவர்கள் எழுச்சியுரை


கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, திமுக பொறுப்பாளர்  சைதை குணசேகரன், கழக பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநிலங்களவை திமுக தலைவர்  கவிஞர் கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் நினைவு நாள் எழுச்சியுரையாற்றினார்கள்.

கலந்து கொண்டவர்கள்


கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலா ளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட் டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், ஆயிரம் விளக்கு சேகர் இராயப்பேட்டை ஆனந்தன் சைதை எத்திராஜ் குடும்பத்தினர் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், சைதை தென்றல், திமுக பொறுப்பாளர்கள் சாதிக், கிருஷ்ணமூர்த்தி, சேகர், கீதா, நாகா மற்றும் திமுக மகளிரணித் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்


யாழ்ஒளி, அரும்பாக்கம் சா.தாமோ தரன், தமிழ்செல்வன், மு.ந.மதிய ழகன், சைதை குணசேகரன், த.கு.திவா கரன், எம்.பி.பாலு, வழக்குரைஞர்கள் வீரமர்த் தினி, சி.அமர்சிங், ந.விவேகானந்தன், சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் மகள் அவ்வை, தி.இரா.இரத்தினசாமி, ஆ.வெங்கடேசன், தே.செ.கோபால், டி.ஆர்.சேதுராமன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் ப.முத்தையன், சீ.இலட்சுமிபதி, ச.இன்பக் கனி, செ.பெ.தொண்டறம்  உள்பட ஏராள மானவர்கள் உரிய தொகை கொடுத்து பெருமகிழ்வுடன் கவிஞர் கனிமொழியிடமிருந்து  புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

பொதுக்கூட்ட முடிவில் மாவட்ட அமைப் பாளர் மு.ந.மதியழகன் நன்றி கூறினார்.

மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழி உரிமைப்போராட்டத்தை திராவிடர் கழகம் துவக்கும்

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, டிச.25 சென்னை சைதாப்பேட் டையில் நேற்று (24.12.2018) மாலை நடைபெற்ற  தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  சிறப்புரையாற்றிய பின்னர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

கேரளாவில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். பாஜக வன்முறை செய்வதா?

செய்தியாளர்: தமிழகத்திலிருந்து சபரி மலைக்குப் போன பெண்கள் திருப்பி அனுப் பப்படுகிறார்கள். அவர்கள்மீது கல்வீச்சு இது போன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. தொடர்ச் சியாக இதே மாதிரியான நிலை ஏற்பட்டு வருகிறதே?

தமிழர் தலைவர்: ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் இதில் முதலில் வழக்குத் தொடுத்தவர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண் டும். உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பை அவர்கள் மதிக்காமல், மத்தியில் ஆளுங்கட் சியாக இருந்துகொண்டே  இப்படி அதுவும் பெண்களிடத்திலேகூட மனிதாபிமானம் இல்லாமல் நடப்பது என்பது இருக்கிறதே, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரள அரசாங்கமும் வன்முறையில் ஈடுபடுவோரை அடக்க வேண்டும். இதற்கு மேலும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத   அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இப்போது யார் தடுக்கிறார்களோ, அவர்களே தங்களை மாற்றிக்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும். எனவேதான், உச்சநீதிமன்றத்தினுடைய உத்த ரவை கேரள அரசு கடுமையாக அமல்படுத்த வேண்டியது கட்டாயம்.

சாதாரணமாக ரபேல் விமான வழக்கில் தீர்ப்பைப் பொருத்தவரையிலே,  உச்சநீதி மன்றம் சொல்லிவிட்டது, உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று ஆட்டம் போடுகிறார் களே, அதே உச்சநீதிமன்றம்தான் இதிலே அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குப் போகலாம் என்று சொல்லுகிறது. ஆனால், பெண்களைத் தாக்குவதுதான் ஆர். எஸ்.எஸ்.சினுடைய, பிஜேபியினுடைய முறையா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாக்குவதா?

செய்தியாளர்: சிபிஎஸ்இ பள்ளிப் பாடத் திட்டத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக இந்தி படித்திருக்க வேண்டும். அதேமாதிரி மத்திய அரசுப்பணிகளில் தட்டச்சு பணியிலி ருந்து குறைந்தபட்சம் இந்தி அவசியம் என்று மத்திய அரசு கூறுகிறதே?

தமிழர் தலைவர்: மறுபடியும் ஒரு பெரிய மொழிப்போராட்டத்தை விழிப்பாக நடத் துங்கள் நீங்கள் அதை விடாதீர்கள் என்று இந்தத் தமிழ்நாட்டை கொஞ்சம் எழுப்பிக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற திணிப்புகளைச் செய்கிறார்கள்.

சிபிஎஸ்இயிலே மட்டுமல்ல, தமிழ்நாட் டிலே இருந்து யாராவது நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்கள் இந்தியிலேதான் கையெழுத்துப் போட வேண்டும். இந்தியே படிக்காத நீதிபதிகளாக இருந்தாலும், தமி ழிலோ, ஆங்கிலத்திலோ கையெழுத்துப் போடக்கூடாது என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி களாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளக தமிழ்நாட்டி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் இந்தியிலே கையெழுத்துப் போடுவதற்கு, கையெழுத்து போடப் பழகிக்கொண்டுதான் போகவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

அதுமாத்திரமல்ல, பட்டங்கள், விருதுகள் கொடுக்கிறார்கள் அல்லவா? பத்ம விருதுகள் போன்றவை  அனைத்தும் இந்தியில்தான் இருக்கிறது. ஆங்கிலத்திலோ, மற்ற அவர வர்களுடைய மொழிகளில் இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் களிடம்கூட நாங்கள் சொல்லியிருக்கிறோம், வெளிநாட்டு விமானங்களிலே சென்னையிலிருந்து பயணம் செய்தால், அவர்கள் தமிழிலே அறிவிப்புக் கொடுக்கிறார்கள். வெளிநாட்டுக்கு போகிற விமானங்கள் ஓமன், சிங்கப்பூர் விமானங்கள், பிரிட்டிஷ் ஏர்வேஸ் இவைகளில் எல்லாம் தமிழில் அறிவிப்பு வருகிறது. ஆனால், இந்தியாவிலே இருக்கக்கூடிய ஏர் இந்தியா போன்ற  விமா னங்களில், தமிழ்நாட்டுக்குள்ளேயே போகிற விமானங்களில்  தமிழிலே அறிவிப்புகள் கிடையாது. அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் போது, அந்தந்த மொழிகளிலே சொன்னால் தான்  பயணிகளுக்குப் புரியும். எனவே, இவைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக இணைத்து திராவிடர் கழகம் மீண்டும் ஒரு மொழி உரிமைப்போராட்டத்தைத் துவக்கும்.

ஒரு விரல் புரட்சி

செய்தியாளர்: அய்யா, நீங்கள் பேசும் பொழுது, கடைசியாக ஒரு விரல் புரட்சி என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டு சொன் னீர்கள், எதைக்குறிப்பிட்டு சொல்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஒரு விரல் புரட்சி என்றால் வேறு ஒன்றுமில்லை, புள்ளி வைப்பதுதான். புள்ளிவைப்பது ஒருவிரல் புரட்சி. அதுதான் அமைதியானது. காமராசர் சொல்வதைப்போல, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம், நிம்மதியாக வாக்களித்துவிட்டு (பொத்தானை அழுத்திவிட்டு) போய்த் தூங்குங்கள் என்று சொல்வார். இப்போது பொத்தானை அழுத்தும்போது, சரியாக பதிவாகிறதா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் ஒரு விரல் புரட்சி என்று சொல்கிறோம்.

நோட்டாவோடுதான் பிஜேபி போட்டி

செய்தியாளர்: தமிழிசை இனிமேல்தான் தமிழகத்தில் பாஜக எழுச்சி பெறும் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: ரொம்ப  மகிழ்ச்சி. நோட் டாவைவிட அதிகமாக அவர்கள் எழுச்சி பெறுவது வரவேற்புக்குரியது.

-இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 25.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக