செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஏழு தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகைப் போராட்டம்: 53 ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது



சென்னை, டிச.4 கடந்த 28ஆண்டுகளாக சிறை யில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை வேளச்சேரி சாலை சைதாப்பேட்டை பகுதியில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நேற்று (3.12.2018) காலையில் தொடங்கி நடைபெற்றது.

போராட்டத்தினை தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஏராளமானோர்...


மதிமுக, திமுக, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், எஸ்டிபிஅய் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி, தற்சார்பு விவசாய சங்கம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திமுக  மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு,  விடுதலை சிறுத்தைகள் கட் சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பாளர் பாக்கியம், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தற்சார்பு விவசாய சங்கத் தலைவர் பொன்னையன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறு வனர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது, தேசிய லீக் கட்சி பஷீர் அகமத், தியாகு உள்ளிட்ட தலைவர்கள் பொறுப்பாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந் தியத்தேவன், துணைப் பொதுச்செயலாளர்கள்  மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் செக்கடிக்குப்பம் அ.பெரியார் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செல்வம், செல்வதுரை உள்ளிட்ட பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத் திற்குக் கொண்டு சென்றனர்.

53 ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 53 ஆம் முறையாக கைது செய்யப்பட்டார்.

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள்


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாணவரணி மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் யாழ்திலீபன், அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், த.சண் முகம்,  வேலூர் மண்டல செயலாளர் கு.பஞ்சாட்சரம், இல.திருப்பதி, இரா.வில்வநாதன்,  தாம்பரம் ப.முத்தையன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சே.மெ.மதிவதனி, தளபதி பாண்டியன்,  கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், சீ.இலட்சுமிபதி, மா.குணசேகரன், அனகை ஆறுமுகம், போளூர் பன்னீர்செல்வம், கவுதமன், கொடுங்கையூர் கோ. தங்க மணி, சேலம் மொட்டையன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, அருள், சைதை தென்றல்,  கோபால், பவன்குமார், ஸ்டீபன், சீர்த்தி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தங்க.தனலட்சுமி, செஞ்சி ந.கதிரவன், இளைஞரணி க.ச.கஇரணியன் உள்பட ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை  5 மணியளவில் விடுதலை செய்யப் பட்டனர்.

-  விடுதலை நாளேடு, 4.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக