வெள்ளி, 14 டிசம்பர், 2018

பெரியார் பெருந்தொண்டர் காவளூர் சி.தங்கவேல் மறைந்தாரே!தஞ்சாவூர், டிச.14 தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், காவளூர் கிராமத்தில் பிறந்து இந்திய இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெரியார் பெருந் தொண்டர் சி.தங்கவேல், (வயது 84) இவர் சென்னையில் வசித் தார். உடல் நிலை குறைவு காரணமாக கடந்த 04.12.2018 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது உடல் சொந்த கிராமம் காவளூரில் 05.12.2018 அன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவை போற் றும் வகையில் இரங்கல் கூட் டம் காவளூர் கிராமத்தில் நடை பெற்றது. நிகழ்வில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. செயலாளர் ச.அழகிரி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொ.இராஜு, மாவட்ட கழக இளை ஞரணி தலைவர் அ.தனபால், தஞ்சை மாநகர கழக தலைவர் ப.நரேந்திரன், செயலாளர் சு.முருகேசன், அம்மாப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் செ.காத்தையன், பூதலூர் ஒன்றிய கழக தலைவர் அள்ளூர் இரா.பாலு, கழக ஒன்றியச் செயலாளர் ரெ.புகழேந்தி, தஞ்சை மாநகர கழக மகளிரணிச் செயலாளர் அ.சாந்தி மற்றும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள், அவ் வூர்  பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த பெரியார் பெருந் தொண்டர் சி.தங்கவேல் அவர்கள் தனது பெற்றோர்பெயரில்  சின்னையன்- தர்மம்பாள் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்ட ளையின் மூலமாக தன்னுடைய குடும்பத்தின் சார்பில் அப்பகுதி மக்களுக்கும், பகுத்தறிவுப் பிரச் சார பணிக்கும் பெரும் பங்காற்றியவர்.

மேலும், ஒவ்வொரு மாதமும் தனது ஓய்வூதியம் வந்தவுடன் காவளூரைச் சுற்றி யுள்ள கிராமங்களுக்குச் சென்று பெண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப் பட்ட மக்கள் வாழும் பகுதி களுக்குச் சென்று அம்மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும், என்ற நோக்கத்தில் திராவிடர் கழக வெளியீடுகள், திருக்குறள் மற்றும் பள்ளிப் பாடம் தொடர் பான நூல்கள அளித்திடுவார்.

இயக்கப் பிரச்சாரம், மாநாடு, ஆர்பாட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பதுடன் புதிய, புதிய மாணவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர். அப்பேர்பட்ட பெரியார் பெருந்தொண்டர் சி. தங்கவேல் தனது மகன்கள் இருவருக்கும், மகள் ஒருவருக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து பெரியார் நெறி மாறாமல் வாழ்ந்தவர். அவரின் மறைவு இயக்கத்திற்கும், அப் பகுதி மக்களுக்கும் மற்றும் அவரது துணைவியார் அம் மையார் மகேஸ்வரி, மூத்த மகன் தங்க.நடராசமணி  மருமகள் டாக்டர் சசிகலா, கனடா வில் வாழும் மகள் தங்க.கண் மணி  மருமகன் தனசேகரன், இளையமகன் தங்க.பாலசுப் பிரமணி  மருமகள் சுஜாதா ஆகி யோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.  அவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கலும், கொள்கை மறவர் சி.தங்கவேல் அவர் களுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் ஒலிமுழக்கம் எழுப்பி ஊர்வலமாகச் சென்று அவரது  உடல் எரியூட்டப்பட்டது.

- விடுதலை நாளேடு, 14.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக