வெள்ளி, 28 டிசம்பர், 2018

தந்தை பெரியார் 45ஆம் நினைவு நாள் சென்னையில் அமைதி ஊர்வலம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர்களுடன்  நடந்து வந்தார்





அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மகளிர் மாணவர்கள் சார்பில் மரியாதை



பெரியார் சுயமரியாதை சுடரொளி நினைவிடத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் மரியாதை

சென்னை, டிச.24 தந்தை பெரியாரின் 45ஆம் நினைவு நாளையொட்டி இன்று (24.12.2018) சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கங்கள் வானைப் பிளந்தன.
திமுக பொறுப்பாளர்கள் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுமான்கான், மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்களும் உடனிருந்தார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம் சென்னை அண்ணாசாலையில்  தொடங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்களுடன் ஊர்வலம் முழுவதுமாக நடந்தே வந்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அமைதி ஊர்வலத்தில்  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன்,  அமைப் புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள், இளைஞரணி பொறுப்பாளர்கள், மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் கலந்துகொண்டனர்.
மே தினப்பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை,  இர்வின் பாலம், பெரியார் ஈ.வெரா. நெடுஞ்சாலை வழியே  பெரியார் திடலை அமைதி ஊர்வலம் அடைந்தது.
பெரியார் ஈ.வெரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார்  சிலைக்கு திராவிடர் கழக மகளிர் அணிப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் மாலை அணி வித்தார்கள்.
பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தைபெரியார் நினைவிடத்தில்  கழகப் பொறுப் பாளர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  உறுதிமொழிகூற அவரைத் தொடர்ந்து, தோழர்கள் அனைவரும் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றுக்கொண்டார்கள்.
உறுதிமொழி

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை,

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

கடவுள் இல்லை, கடவுள் இல்லை,

கடவுள் இல்லவே இல்லை

என்று ஜாதிக்கு, தீண்டாமைக்கு ஆதாரமான கடவுள் மறுப்பை, மத மறுப்பை , சாஸ்திர, புராண, இதிகாச மறுப்பை, பெண்ணடிமை ஒழிப்பை உருவாக்கி  புதிய தோர் சமுதாயம் காண, சுயமரியாதை சூடுபோட்ட எங்கள் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது 45ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அன்னை மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகின்ற காலக்கட்டம் நெருங்குகிற இன்று பெரியார் தொண்டர்களாகிய நாங்கள், பெரியார் பற்றா ளர்களாகிய நாங்கள், பகுத்தறிவாளர்களாகிய நாங்கள், திராவிடப்போராளிகளான நாங்கள் தந்தை பெரியார்   விட்டுச்சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலத்துக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம்.
பெரியார் மண்ணை, பெரியார் மண்ணாகவே காப்ப தற்கு எங்கள் ரத்தத்தையும் சிந்த,உயிரையும் தியாகம் செய்ய தயார், தயார், தயார் என்ற சூளுரையை மேற் கொண்டு இனிவரும் நூற்றாண்டுகள், பெரியார் நூற் றாண்டுகள். பெரியார் காண விரும்பிய புத்துலக நூற் றாண்டு என்பதை நிலைநாட்ட  அயர்வின்றி உழைப் போம். சோர்வின்றி நடப்போம்.
எல்லா பாதைகளும் ஈரோட்டுப்பாதைக்கே!
எல்லாப் பாதைகளும் ஈரோட்டு பாதைகளுக்கே!!’’
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மோகனா அம்மையார், மகளிரணி மாநில செயலாளர் கலைச்செல்வி, க.பார்வதி, கு.தங்கமணி,  சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, சுமதி கணேசன், இறைவி, தங்க.தனலட்சுமி, பொன்னேரி செல்வி, பூவை செல்வி, த.மரகதமணி, வெண்ணிலா கதிரவன், இரா.வளர்மதி, பி.அஜந்தா, இ.ப.சீர்த்தி, தொண்டறம்  உள்ளிட்ட மகளிரணி பொறுப்பாளர்களும், பெரியார் பிஞ்சுகளும் மலர் வளையம் வைத்த மரியாதை செலுத்தினார்கள்.
சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலை வர் த.வீரசேகரன்,  பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக் கனி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் மயிலை நா.கிருஷ்ணன், கி.சத்திய நாராயணன், சேரன், கு.தென் னவன், தெ.மாறன், புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த் தினி, சைதைதென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் கா.அமுதரசன், இருதயராஜ், திராவிட தொழிலாளர் கழகம் சார்பில் பெ.செல்வராசு, நாகரத்தினம், க.தமிழினியன், திராவிடன் நிதி சார்பில் த.க.நடராசன், குடும்பவிளக்கு நிதி சார்பில் சி.அமர்சிங், தலைமை மேலாளர் வேணுகோபால், பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் மீனாம்பாள், பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் மேலாளர் குணசேகரன், மருத்துவர், செவிலியர், ஆய்வக தொழில் நுட்ப பணியாளர் உள்ளிட்டவர்கள்  தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கழகப் பொறுப்பாளர்கள்

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டங் களிலிருந்து பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணியினர் பெருந்திரளாக பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அமைதி ஊர்வலத்தில் கழகக் கொடிகளுடனும், தந்தை பெரியார் பட பதாகை களை ஏந்தியும் தோழர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழக மாநில   இணை செயலாளர் (மகளிர் பிரிவு) பா.மணியம்மை, சென்னை மண்டல   இளைஞரணி செயலாளர்  ஆ.இர.சிவசாமி, அமைப்பாளர் சோ.சுரேஷ், குடந்தை கணக்கு தணிக்கையாளர் சண் முகம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதி ராஜ், கல்லக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், தென்சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்ன ரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன்,   செயலாளர் இரா.இரமேஷ், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், திருவள்ளுவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை நிர்வாகி மாறன், அம்பேத்கர் இயக்க நிர்வாகி திண்டிவனம் சிறீராமுலு, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், கவிஞர் மறைமலையான் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பலரும் கலந்து கொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தார்.
மதிமுக

மதிமுக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஜீவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்  பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீர பாண் டியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ். மூர்த்தி,  ஏ.அய்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் மு.சம்பத், எஸ்.குப்பன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் உதயக்குமார் உள்ளிட்டோர் பெரியார் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார்கள்.
- விடுதலை நாளேடு, 24.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக