செவ்வாய், 11 டிசம்பர், 2018

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து



சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பிற்படுத்தப்பட்டோர் அரசு பணியாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன், பொருளாளர் ச. சேகரன், முன்னாள் பொருளாளர் கு. தென்னவன், வாழ்நாள் உறுப்பினர்கள் கோ. தீனன் மற்றும் க.செல்லப்பன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மயிலை நா. கிருஷ்ணன் அவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். மேலும் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு தனது துணைவியார் திருமதி பரமேஸ்வரி, பெரியார் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர் களுடன் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

- விடுதலை நாளேடு, 11.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக