செவ்வாய், 19 ஜூன், 2018

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை



மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள் எழுதிய ஷிஜீமீணீளீவீஸீரீ ஜிக்ஷீutலீ tஷீ றிஷீஷ்மீக்ஷீ (ஆங்கில நூல்) - அந்நூலின் தமிழாக்கமான ‘‘வாய்மையே வெல்லும்'' ஆகிய இரு நூல்களையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். கவிப்பேரரசு வைரமுத்து இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை வகித்தார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றிட, எழுத்தாளர்

எஸ்.இராமகிருஷ்ணன், முனைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். நூலாசிரியர் ப.சிதம்பரம் ஏற்புரை வழங்கினார். கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். அரங்கம் வழிய பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாக் குழுவின் சார்பில், சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (சென்னை வித்யோதயா பள்ளி அரங்கம், 16.6.2018, மாலை

- விடுதலை நாளேடு, 17.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக