• Viduthalai
திருவள்ளுவரின் 2053ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுறவம்- 2 (15.1.2022 ) முற்பகல் 10.30 மணி அளவில் மாலை அணிவிக்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன், இளைஞரணி மாவட்டத் தலைவர் ச.மகேந்திரன், செயலாளர் ந.மணிதுரை, மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அப்துல்லா, பி.டி.சி. இராசேந்திரன், சக்திவேல் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக