பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பிறந்தநாள்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2023 நண்பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 91வது பிறந்தநாளை 'கேக்' வெட்டி குதூகலமாக கொண்டாடினார்.
உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர்.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் அவரின் இணையர் தமிழ்மதி, மாவட்ட துணை செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக