தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.1 'ஆன்லைன் சூதாட்டத் தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்காளாகும் மோசமான நிலையில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து இன்று (1.12.20220 காலை 11 மணியளவில் சென்னை சைதாப் பேட்டை பனகல் மாளிகை அருகில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 'ஆன்லைன் ரம்மி' போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி பணத்தை இழந்த துடன், தற்கொலை செய்து கொண்ட - கொள்ளும் நிகழ்வுகள் இடையறாமல் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களில் மட் டும் 32 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தடுக்க 'ஆன்லைன் சூதாட்டங்' களைத் தடை செய்ய வேண்டுமென்று திராவிடர் கழகமும் மற்ற பல அரசியல் கட்சிகளும், மனிதநேய சமூக அமைப்பு களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததினால், இதற்கு ஓர் அவசரச் சட்டத்தை (ளிக்ஷீபீவீஸீணீஸீநீமீ) தமிழ்நாடு அரசு (தி.மு.க.) இயற்றி, கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஆளுநர் அலுவலகத் திற்கு அனுப்பி வைத்து அவரது ஒப்புதல் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில், அமைச்சரவை செய்த முடிவுக்கேற்ப, சட்டமன்றத்தைக் கூட்டி, நிரந்தர தடைச் சட்டத்தைக் கொண்டு வர "தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா" சட்ட மன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதியே தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. அதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார்.
மேலும் இந்த சட்ட மசோதா குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப் பிய நிலையில், தமிழ்நாடு அரசு 24 மணி நேரத்திற்குள், அதற்கு விளக்கம் அளித்தது.
இருந்தும், தமிழ்நாடு அரசின் சட்டத் திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து இன்று (1.12.2022) காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை 'கலைஞர் பொன் விழா வளைவு', பனகல் மாளிகை அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஒத்தக் கருத்துள்ளோர் பெருந் திரளாகத் திரண்ட மாபெரும் அறவழிக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்கவும், அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறி போவதை அகற்றவும் வலியுறுத்தி ஒலி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ப. சுப்ரமணி தொடக்கவுரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆர்ப்பாட்ட தலைமை விளக்கவுரையாற் றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்ற, மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில பொருளாளர் வீ. குமரேசன், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சுஎன்னாரெசு பெரியார், திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் ப.மணியம்மை, வழக்குரைஞர் வீரமர்த்தினி, கல்வியாளர்கள் முனைவர் ந.க. மங்கள முருகேசன், ச. இராஜசேகரன், ஆர்.எஸ்.டி. மருது, மகளிரணியைச் சேர்ந்த அ. கலைச் செல்வி, சி. வெற்றிச்செல்வி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செய லாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செய லாளர் தி.செ. கணேசன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலை வர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர், விஜய். உத்தமன் ராசு, தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், சேலம் மாவட்ட செயலாளர் வைரம், சாமி. திராவிட மணி, ஜெயா திராவிடமணி, என்னாரெசு பிராட்லா, கும்மிண்டிபூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். மாநில மாவட்ட நிர் வாகிகளும், மதிமுகவின் மாநில மாவட்ட நிர்வாகிகளும், பெருந் திரளான தோழர் களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப் பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக