ஞாயிறு, 11 அக்டோபர், 2026

சுயமரியாதைக் குடும்ப விழா: கழகத் துணைத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்பு (சென்னை, 2.10.2026)

விடுதலை நாளேடு, 3.10.26

சென்னை குடும்ப விழாவில் ‘மரண சாசனம்’ வழங்கிய 50 மகளிர்


திராவிடர் கழகம்



திராவிடர் கழகம்

சென்னை, அக். 7- தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தலின்படி இனிப்புகள் வழங்கியும் புத்தகங்களைப் பரப்பியும் சமூகநீதி ஓட்டம் நடத்தியும் பல்வேறு வகைகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் நீட்சியாக அக்டோபர் இரண்டாம் நாள் அன்று சென்னை பெரியார் திடலில் மகளிர் அணி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல் விருந்து நிகழ்வு மிகச் சிறப்பாக நடை பெற்றது.

காலை 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு வருவோர் பதிவு தொடங்கியது. 10.30 மணிக்குள் 60க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மகளிர் தோழர்கள் என 150 பேர் வருகை புரிந்ததால் 11.00 மணிக்கு தொடங்குவதாக அறிவித்திருந்த விளையாட்டுப் போட்டிகளை சற்று முன்னதாகவே தொடங்கியது.

கழகத்தின் துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கழகக் குடும்பங்களின் உறவாடல் நிகழ்ச்சியின் அவசியத்தை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தந்தை பெரியார் அவர்களின் பணிகளை குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் விளக்கிப் பேசி விளையாட்டுகளை தொடங்கி வைத்தார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஓவியச் செல்வன் குழந்தைகளுக்கும் மகளிருக்கும் விளையாட்டுகளை ஒருங்கிணைத்தார். விளையாட்டுகளை நடத்தி பரிசுக்குரிய வர்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்தனர் பொன்னேரி செல்வி, மாட்சி, தேவி மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள்.

150 பேருடன் தொடங்கிய விளை யாட்டுகள் நிகழ்வு 350 பேராக உயர்ந்து பகல் ஒரு மணி வரை நடைபெற்றது. அனைத்து விளையாட்டுகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் எப்படி பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனரோ அதைப் போன்றே மகளிர் தோழர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

நடுப்பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததற்கும் மேலாக எண்ணிக்கை உயர்ந்ததால் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் தோழர் பசும்பொன்னின் உடனடி நடவடிக்கையால் மாற்று ஏற்பாடு செய்யப் பட்டு அனைத்துத் தோழர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டது.

உணவிற்குப் பின் மூன்று மணிக்கு மாநில மகளிர் பாசறைச் செயலாளர் மணியம்மை ஒருங்கிணைப்புடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்பாடு செய்திருந்த (கஹூத்) டிஜிட்டல் முறையில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் 50 பேர் தங்கள் செல்பேசியில் தனியாகவும் குழுவினராகவும் இணைத்துக் கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகச் சிறப்பானதாக அனைத்துத் துறை அறிவினை வழங்குவதாக இருந்தது. அனைவர் பாராட்டினையும் பெற்றது.

பிற்பகல் 4.00 மணிக்கு பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி இயக்க கொள்கைகளை சிறந்த முறையில் பின்பற்றுபவர்கள் பெற்றோர்களா? குழந்தைகளா? என்ற தலைப்பில் ஒருங்கி ணைத்த பேச்சரங்கம் நம் குழந்தைகளுக்கு இருக்கும் கொள்கைத் தெளிவையும், சமூகப் புரிதலையும் அழகாக நமக்கு உணர்த்தியது.

காலையிலிருந்து திறந்த வெளியிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை நேர தேநீருடன் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டதற்கு பின் பெரியார் மய்யத்தில் உள்ளரங்க நிகழ்ச்சியாக துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலவைத் தலைவர் வீரமர்த்தினி வரவேற்புரை ஆற்றினார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜ் விளையாட்டுகளிலும் பேச்சரங்கத்திலும் விழாவிலும் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளையும் பாராட்டி பரிசுகளும், நினைவுப் பரிசு களும் வழங்கினார்.

பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி நிகழ்ச்சியின் சிறப்பாக அனைவராலும் பாராட்டப் பெற்ற கழகக் குடும்பங்களைச் சேர்ந்த 50 பெண்கள் இறுதி விருப்பச் சான்றிதழில் (மரண சாசனம்) குறிப்பிடப் பட்டுள்ள சொற்களை படித்துக் காட்டி விளக்கி, இந்த முறையில் தமது இறுதி விருப்பத்தினை தெரிவித்த மகளிரின் உள்ளத் துணிவினைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

தலைமை ஏற்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடமிருந்து சட்டம் (Frame) இடப்பட்ட தங்கள் இறுதி விருப்பச் சான்றிதழை மிக மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர் மகளிர் தோழர்கள். தன் தலைமை உரையில் நம் சமுதாயத்தில் இறுதி நிகழ்வுகளில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மூடப் பழக்க வழக்கங்கள் பற்றியும் அதனை ஒழிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் நகைச்சுவையோடு குறிப்பிட்டு மிகத் தெளிவான முறையில் தங்கள் இறுதி நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியுடன் விருப்பம் தெரிவித்துள்ள மகளிர் தோழர்களைப் பாராட்டினார்.

மகளிர் அணி மகளிர் பாசறை தோழர்களின் கூட்டு முயற்சியுடன் திட்டமிடப்பட்ட இந்த நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற உதவிய வெற்றிச்செல்வி, பசும்பொன், இறைவி, பெரியார் செல்வி, ஓவியச் செல்வன், பவானி, மரகதமணி, பொன்னேரி செல்வி, மாட்சி, தேவி, நா,தேன்மொழி, அருணா, உத்ரா ஆகியோருக்கும் நிகழ்ச்சியில் தாங்களும் கலந்து கொண்டு குழந்தைகளையும் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சி சிறக்க உதவிய அனைவருக்கும் நன்றி கூறிட நிகழ்ச்சி நிறைவாக முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக