செவ்வாய், 23 ஜூலை, 2019

சூளைமேட்டில் எழுச்சியுடன் நடந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


சூளைமேடு, ஜூலை 22- தென்சென்னை மாவட்ட  சூளைமேட்டில் எழுச்சியுடன் நடந்தது தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம். 17.7.2019 புதன்கிழமை மாலை 6 மணி அளவில்  தென்சென்னை மாவட்ட சூளைமேடு பகுதி திராவிடர் கழகம் சார்பில், சவுராஷ்டிரா நகர், நூங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில், சூளைமேடு பகுதி தலைவர் ந.ராமச் சந்திரன் தலைமையிலும், இரா.வில்வ நாதன், செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர். சேதுராமன் மற்றும் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும், கோ. வீ.ராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி,   மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மண்டல செயலாளர் தே.செ.கோபால்,  வட சென்னை செயலாளர் தி.செ. கணேசன், கோ.தங்கமணி, த.தனலட்சுமி, கோ.மஞ்சநாதன், க. தமிழ்ச்செல்வன், மு.சேகர், ஈ.குமார், மு.திருமலை, மு.பாலமுரளி, மு.பவானி, பி.டி.சி.இரா சேந்திரன்,  கோபாலகிருஷ்ணன், சு. அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், காரல் மார்க்ஸ் உடுமலை வடிவேலு, பெரியார் மாணாக்கன், அரும்பாக்கம் மகேந்திரன், செகதீசு மற்றும் கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர். மொதுமக்கள் கருத்துகளை செவி மடுத்து எழுச்சி பெற்றனர்.
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.விசுவாசு நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத் தார். முன்னதாக இரண்டு நாள்கள் பகுதி முழுவதும் துண்டறிக்கை வழங்கி கூட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.
- விடுதலை நாளேடு, 22.7.19












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக