ஞாயிறு, 29 அக்டோபர், 2023

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்தது


6

7

சென்னை, சூளைமேடு, கில்நகர் பகுதியில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியின் பெயர் பலகையில் ஹிந்தி முதலிடத்திலும், தமிழ் மூன்றாம் இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி படத்துடன் 30.09.2014 'விடுதலை' நாளேட்டில் நான் அனுப்பிய செய்தி வெளியிடப்பட்டது. அப்போதைய ஆட்சி இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்செய்தியை மீண்டும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் 30.09.2023இல் செய்தி வெளியிட்டு இருந்தேன். தற்போதைய திராவிட மாடல் ஆட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்ததின் விளைவாக அறிவிப்புப் பலகை மாற்றப்பட்டு தமிழ் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட மாடல் ஆட்சிக்கு பாராட்டுகள்!

- செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர், தென் சென்னை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக