செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

சூளைமேட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்



திராவிடர் கழகம்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

சூளைமேடு, சென்னை

தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் 23.08.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்; சூளைமேடு, சவுராஷ்டிரா நகர், முதல் தெருவில் சூளைமேடு பகுதி கழகத் தலைவர் நல்.இராமச்சந்திரன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை மற்றும் மாவட்ட இளை ஞரணி செயலாளர்  பெரியார் யுவ ராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவு மாணனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 112ஆவது வட்ட செயலாளர் த.பரி சிறிது நேரம் உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவால் ஏற்பட்ட பயன்களை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

அடுத்து உரையாற்றிய திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகம் போன்றவை மக்களுக்காக ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு கூறினார்.

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தந்தை பெரியாரின் தொண்டினையும், தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தையும், தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு கொள்கையை நீதிக் கட்சி ஏற்றத்தையும், இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்ததையும், முத்தையா அவர்கள் இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்கியதையும் எடுத்துக் கூறி, இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்ட தடைகளையும், போராட்டங்களையும், இட ஒதுக்கீட்டிற் காக இந்திய அரசியல் சட்டம்  திருத்தப் பட்டதையும், படிப்படியாக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட வரலாற்றையும் கூறி, ஆசிரியருக்கு கி.வீரமணி அவர் களால்  69% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாது காக்கப்பட்டதையும் விரிவாக எடுத்துக் கூறி  செங்கல்பட்டு மாநாடு வெற்றி அடைய அனைவருக்கும் அழைப்பு விடுத்து சிறப்பு உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  109 ‘அ’ வட்ட செயலாளர் டேவிட் இன்பராஜ், பொன்சீலன், கிருஷ்ணன், 109 ‘அ’ வட்ட பகுதி பிரதிநிதி ஆர்.சேகர், நீலகண்டன், சிவா, போஸ்டல் பாஸ்கர், பரமேஸ்வரி, சாந்தி, தென்சென்னை மாவட்ட கழக மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, செயலாளர் பி.அஜந்தா, ஆர். தமிழ்ச்செல்வி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஆவடி மாவட்ட கழகத் துணை தலைவர் வை. கலையரசன், எம்ஜிஆர் நகர் வெ.கண்ணன், அரங்க.ராசா, வடசென்னை க.செல்லப்பன், அய்ஸ் அவுஸ் உதயா, சூளைமேடு ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக எம்.டி.சி.பா.இராஜேந் திரன் நன்றியுரையாற்றினார்.

-விடுதலை நாளேடு, 26.08.2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக