தாரை தப்பட்டை இசைத்து - இளைஞரணியினர் உற்சாக முழக்கம் எழுப்பி தமிழர் தலைவருக்கு வரவேற்பு
த.சீ. இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர்
சென்னை பெரியார் திட லில் ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை காலை திரா விடர் கழக மாநில இளைஞரணி கலந் துரையாடல் எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில், பெரியார் திடல் நுழைவு வாயி லில் இருந்து இருபுறமும் வரிசையாக நின்ற இளைஞரணித் தோழர்கள் தாரை தப்பட்டை இசைத்து, விண்ணை பிளக்கும் முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற் சாக வரவேற்பளித்தனர்.
திராவிடர் கழக மாநில இளைஞ ரணிக் கலந்துரையாடல் கூட்டம் 30.4.2022 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் எழுச் சியுடன் நடைபெற்றது. அப்போது, பேசிய தமிழர் தலைவர் அவர்கள் எதிர் கால வேலைத்திட்டங்களை வழங்கி நமது தோழர்கள் பொது வாழ்விலும், தனிப் பட்ட வாழ்விலும் சிறந்த கட் டுப்பாட் டுடன் திகழ வேண்டும் எனப் பேசினார். மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ. இளந்திரையன் வரவேற்றுப் பேசினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செய லாளர்கள் முனைவர் துரை. சந்திரசேக ரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேக ரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர். இதனையடுத்து, தென்காசி சவுந்தரபாண்டியன், விழுப்புரம் மண் டல இளைஞரணிச் செயலாளர் தம்பிபிரபாகரன், அரியலூர் மண்டல இளை ஞரணிச் செயலாளர் பொன். செந்தில் குமார், தஞ்சாவூர் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல் ஆகியோர் உரையாற்றினர். அனைத்து மாவட்ட இளைஞரணித் தலைவர், செயலாளர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன் உரையாற்றினார்.
இதனையடுத்து, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் வெள்ள லூர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞர ணிச் செயலாளர் இளந்திரையன் ஆகி யோர் தீர்மானங்களை முன்மொழிந்த னர்.
இதன்பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய இளைஞரணி பொறுப்பாளர்களை அறிவித்தார்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆத்தூர் அ.சுரேஷ், ஈரோடு காமராஜ், பொன்ன மராவதி ஆசைத்தம்பி, பொழிசை கண் ணன், சென்னை மண்டல இளைஞர ணிச் செயலாளர்கள் சிவசாமி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், காஞ்சி மண்டல இளை ஞரணிச் செயலாளர் இளந்திரையன், தருமபுரி மண்டல இளைஞரணிச் செய லாளர் ஆறுமுகம், திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் இராஜ்மோகன், கடலூர் மண்டல இளைஞர ணிச் செயலாளர் பஞ்சமூர்த்தி, சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் கூ.செல்வம், ஈரோடு மண்டல இளை ஞரணிச் செயலாளர் செபராஜ்செல்ல துரை, மதுரை மண்டல இளைஞ ரணிச்செயலாளர் இரா.அழகர், வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், செய லாளர் சதீஷ், அமைப்பாளர் சாம் குமார், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.மணிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சீவசீலன், சோழிங்க நல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம், செயலாளர் குணசேகரன், தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் தே.சுரேஷ், தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சட்டநாதன், கும்மிடிப் பூண்டி மாவட்ட இளைஞரணித் தலை வர் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் இரணியன், அமைப்பாளர் கார்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்குமார், தருமபுரி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறீதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுனன், கிருஷ்ண கிரி மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் திராவிட சக்தி, ஒசூர் மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேர றிவு, விழுப்புரம் மாவட்ட இளைஞர ணித் தலைவர் பகவான்தாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாபு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ரமேஷ், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் செந்தில், கல்லக் குறிச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சரவணன், அமைப்பாளர் முத்துவேல், கடலூர் மாவட்ட இளை ஞரணித் தலைவர் உதயசங்கர், செயலா ளர் வேலு, விருதாச்சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், மாவட்ட செயலாளர் பெரியார் மணி, அமைப்பாளர் வெங்கட.ராசா, சிதம் பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் சுரேஷ், ஆத்தூர் மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் வேல்முருகன், கோபி மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார், கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, துணைச் செயலாளர் மதியரசு, மேட்டுப் பாளையம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரமணி, தாராபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் முனீஸ்வரன், அமைப்பாளர் இளந் தென்றல், திருச்சி மாவட்ட இளைஞ ரணித் தலைவர் தேவா, செயலாளர் மகாமணி, லால்குடி மாவட்ட இளைஞ ரணி தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பனிமலர்ச் செல்வன், கரூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தமிழரசன், அரியலூர் மாவட்ட இளை ஞரணித் தலைவர் அறிவன், செயலாளர் கார்த்திகேயன், அமைப்பாளர் செந்தில், துணைச்செயலாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் தமிழரசன், திருவா ரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பிளாட்டோ, செயலாளர் மனோஜ், அமைப்பாளர் மதன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் வெங்க டேசன், அமைப்பாளர் மணிகண்டன் துணைத்தலைவர் விஜயகுமார், பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணித் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலா ளர் தென்னவன், அமைப்பாளர் சம ரன், மன்னார்குடி மாவட்ட இளைஞ ரணித் தலைவர் வீரத்தமிழன், செயலா ளர் ராஜேஷ்கண்ணா, அமைப்பாளர் இளங்கோவன் குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் சிவகுமார், செயலாளர் சரவணன், அமைப்பாளர் செந்தமிழன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணித் தலைவர் மகாராஜா, தேனி மாவட்ட இளைஞரணிச் செய லாளர் முத்தமிழன், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் கண்ணன், அமைப்பாளர் வேல்துரை, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் முத்துக்கருப்பன், செயலாளர் கணேசன், அமைப்பாளர் பாலா, விருது நகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அலெக்ஸ், புதுச்சேரி மண் டல இளைஞரணித் தலைவர் ராசா, செயலாளர் அல்போன்ஸ், அமைப்பா ளர் இளங்கோவன், காரைக்கால் மண் டல இளைஞரணித் தலைவர் பெரியார் கணபதி, செயலாளர் லூயிஸ் பியர், அமைப்பாளர் ஸ்டாலின் உள்பட
450-க்கும் மேல்பட்ட இளைஞரணித் தோழர்கள் உள்பட 600 க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
தனி வாகனம்:
கூட்டத்தில் தனி வாகனத்தில் வந்து பங்கேற்ற மாவட்டங்கள்:
ஆத்தூர் கழக மாவட்டம் - சிற்றுந்து
தருமபுரி மாவட்டம் - சிற்றுந்து
விருத்தாசலம் கழக மாவட்டம் - வேன்
அரியலூர் மாவட்டம் - வேன், கார்
கடலூர் மாவட்டம் -கார்
திண்டிவனம் கழக மாவட்டம் - 2 கார்
விழுப்புரம் மாவட்டம் - கார்
ஒசூர் - கார்
தொடர்வண்டியில் வருகை தந்த மாவட்டங்கள் :
தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக் கோட்டை,திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை மாநகர், மதுரை புறநகர், திருச்சி, தென்காசி, கோவை, காரைக் கால், புதுச்சேரி, அறந்தாங்கி, நெல்லை, மேட்டுப்பாளையம், இலால்குடி, ஈரோடு, தாராபுரம், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், கோபி, குடந்தை பேருந்தில் வருகை தந்த மாவட்டங்கள்: காஞ்சிபுரம், பெரம்பலூர், சிதம்பரம், கரூர்.
புதிய இளைஞர்கள் பங்கேற்ற மாவட்டம்:
பெரம்பலூர், சேலம், நெல்லை, திண்டுக்கல் , புதுச்சேரி, காரைக்கால். கூட்டத்தின் நிறைவில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் தஞ்சை இரா.வெற்றிக்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக