ஞாயிறு, 8 மே, 2022

திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் கழகத் தலைவருடன்

திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் கழகத் தலைவருடன் மாவட்ட வாரியாக குழு படம் (1.5.2022, சென்னை, பெரியார் திடல்)


திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப் பெறுக றீஉச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் நடை பாதைக் கோயில்களை அகற்றாதது ஏன்?

மதவாதம், ஜாதி அடையாளக் கயிறுகளை கையில் கட்டுதல், ஷாகா பயிற்சிகளை தடை செய்க

இயக்க வெளியீடுகளைப் பரப்பிடுக, மாணவர் கழகத்தை வலுவாக்குக திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சென்னை, மே 3- திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.5.2022)காலை 10 மணிக்கு பெரியார் திடல் நடிகவேள் எம். ஆர். ராதா மன்றத்தில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் தமிழ்செல்வன் கடவுள் மறுப்பு கூறி கூட்டம் தொடங்கியது. அனைவரையும் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் வரவேற்று உரையாற்றினார். 

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் க ச.அஜிதன், பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி. தங்கமணி, சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் க.கா. வெற்றி, கோவை மண்டல மாணவர் கழக செயலாளர் மு. ராகுல், தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர் இ. சமரசம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாணவர்  புதுக்கோட்டை செல்வ சூர்யா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மாணவர் ஒக்கநாடு மேலையூர் கவிபாரதி, சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர் நாகர்கோயில் இசை செல்வி , பிரசிடன்ஸ்சி கல்லூரி மாணவர் காரமடை அன்புமதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக நாகை இளமாறன், கோவை யாழினி ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந் தனர். அரங்கத்தில் உள்ள அனைத்து மாணவத் தோழர்கள் எழுந்து நின்று கை ஒலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தார்கள். 

திராவிட மாணவர் கழக
மாநில புதிய பொறுப்பாளர்கள்

மாநில செயலாளர்.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில அமைப்பாளர்: இரா.செந்தூர்பாண்டியன்

மாநில துணைச் செயலாளர்: .அஜிதன்

மாநில துணைச் செயலாளர்: நா.ஜீவா

மாநில துணைச் செயலாளர்: .ஜெ.உமாநாத்

மாநில துணைச் செயலாளர்: செ.பெ.தொண்டறம்

மாநில துணைச் செயலாளர்: மு.ராகுல்

மாநில துணைச் செயலாளர்: .மணிமொழி

மாநில துணைச் செயலாளர்: வெ.இளஞ்செழியன்

மாநில துணைச் செயலாளர்: பா.கவிபாரதி

கருநாடக மாநிலம்

தலைவர்மா.முனியப்பன்
செயலாளர்மா.கவியரசன்

திராவிட மாணவர் கழக
மண்டல புதிய பொறுப்பாளர்கள்

சென்னைசு.தமிழ்ச்செல்வன்
காஞ்சிபுரம்: மோ.பகுத்தறிவாளன்
வேலூர்.வெங்கடேசன்
தருமபுரி.சமரசம்
கடலூர்.பண்பாளன்
விழுப்புரம்எஸ்..ஆர்.திராவிடபுகழ்
சேலம்.திராவிட முருகன்
ஈரோடு.சிவபாரதி
கோவைவெ.யாழினி
திருச்சி: .சசிகாந்த்
அரியலூர்சு..திராவிடச்செல்வன்
தஞ்சாவூர்.சற்குணன்
திருவாரூர்மு.இளமாறன்
புதுக்கோட்டைநே.குட்டிவீரமணி
சிவகங்கை.பிரவீன்முத்துவேல்
திண்டுக்கல்வி.சு.பெரியார்மணி
நெல்லைசு.இனியன்

திராவிட மாணவர் கழக மாநிலக் கலந் துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்  எண் 1:

நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, கொளுத்தும் கோடையில் 

21 நாள்கள் பரப்புரைப் பெரும்பயணம் மேற் கொண்டு இந்த முழக்கங்களை மக்களிடம் ஆழ விதைத்து, ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, தமிழர் தலைவரின் இந்த முழக்கங்களை வென்றெடுக்க தலைவர் இடும் ஆணைகளைச் செய்து முடிப்போம் என்று இக் கூட்டம் உறுதி கூறுகிறது.

தீர்மானம் எண் 2: 

பள்ளி மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரை மிகப்பெரிய அளவில் அறிமுகப் படுத்தி, பகுத்தறிவு - இன உணர்வூட்டிய "பெரியார் 1000 வினா‍-விடைப் போட்டி"யை வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் அனைத்துப் பள்ளி களிலும் நடத்தி, பல லட்சம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்திட‌முழு வீச்சில் செயலாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 3:

மாணவர்களின் கல்வி உரிமையை மோச மாகப் பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இக் கூட்டம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ் நாடு அரசு உறுதியாக இருந்திட வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக உருவாக்கப்படும் மாநில கல்விக் கொள்கையில் சமூகநீதி, பாலியல்நீதி, அறிவியல் மனப்பான்மையுடன் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உரு வாக்கவும், கல்வித் துறையில் எந்த வகையிலும் மதவாதச் சக்திகள் நுழைந்துவிடா வண்ணம் எச்சரிக்கையுடன் திட்டம் வகுக்கவும் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4: 

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், இரண் டாம் முறையும் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளுநரின் செயலுக்கு திராவிட மாணவர் கழகம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. எட்டுக் கோடி மக்களின் மன உணர்வை, சட்ட உரிமையை மதிக்காமல், அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் ஆளுநருக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி 'நீட்' விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்றுத் தர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட விரோதமாக நடந்துகொள்ளும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

மாநிலப் பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில், அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் ஆளுநர் களின் செயல் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். இந்நிலையில் தமிழ்நாடு அரசே பல்கலைக்கழகத் துணை வேந்தரை நியமிக்கும் வகையில் சட்டம் நிறை வேற்றப்பட்டிருப்பது பறிக்கப்பட்டிருக்கும் உரி மையை மீட்டெடுக்கும் முக்கியமான பணி என்று இக் கூட்டம் கருதுகிறது. அதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இக் கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

நீட்டைத் தொடர்ந்து கியூட் என்னும் பெயரால் நுழைவுத் தேர்வை, மத்தியப் பல் கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தி, படிப் படியாக அனைத்து நிலைகளிலும் கொண்டுவர நினைக்கும் ஒன்றிய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க தமிழர் தலைவரின் ஆணையேற்று தொடர்ந்து போராடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண் 7:

அ) உக்ரைன்‍- ரஷ்யப் போரின் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளிலும் பாதிக் கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஒன்றிய அரசு எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஆ) கால்நடை மருத்துவப் பல்கலைக் கழ கத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சித் தொகையினை, பிற மருத்துவ மாணவர்களுக்கு இணையாக ரூ.25,000ஆக தமிழ்நாடு உயர்த்தித் தர வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இ) இரு பாலருக்கும் தனித் தனி வகுப்புகள் என்பது, தொடக்க காலத்தில் பெண்களைக் கல்விக் கூடங்களுக்கு அழைத்துவர‌த் தேவைப்பட்டிருந்தாலும், இன்றைய சூழலில் அந்நிலை அவசியமற்றது என்றும், பாலியல் நீதியும், சமத்துவச் சிந்தனையும் வளர அனைத்துப் பாலரும் இணைந்து பயிலும் முறையே சரியானது என்றும் திராவிட மாணவர் கழகம் கருதுகிறது. எனவே அனைத்துப் பாலரும் இணைந்து பயிலும் கல்விச் சூழலையே தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

ஈ) அரசு கடலூர் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ள‌ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே கட்டணத்தை அறிவித்து, அம் மாணவர்களின் கல்வி தடையின்றி தொடர தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8: 

திராவிட மாணவர் கழகத்தை வலுப்படுத்தி, புதிய மாணவர்களை இணைக்கும் வகையில், பள்ளி ‍கல்லூரி மாணவர்களிடையே சந்திப்புக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது என்றும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திராவிட மாணவர் கழகக் கிளை அமைப்புகளை உருவாக்கிடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 9:

விடுதலை ஆசிரியர் பணியில் 60 ஆண்டுகள் என்னும் அரிய சாதனையைப் படைத்திட்ட தமிழர் தலைவர் அவர்களுக்கு நம் நன்றிக் கடனைச் செலுத்திடும் வகையில் 60,000 சந்தாக்கள் திரட்டித் தரும் பெரும் பணியில் திராவிட மாணவர் கழகமும் ஈடுபட்டு நம் பங்கை நிறைவு செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 10:

அறிவைப் பரப்பி வளர்ந்த நம் இயக்கத்தின் ஏடுகளாம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு,The Modern Rationalist, திராவிடப் பொழில், திராவிட நாற்று மின்னிதழ் ஆகியவற்றை வெகு மக்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்வதை முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டுமென திராவிட மாணவர் கழகத் தோழர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 11:

சமூக வலை தளங்களில் தந்தை பெரியார் கருத்துக்களையும், இயக்கச் செயல்பாடுகளையும் மறுக்கப்பட வேண்டியவற்றை மறுக்கும் தகவல்களையும் தவறாது பதிவு செய்யுமாறு கழக மாணவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 12:

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கழக  மாணவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 13:

மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹிப்பொக்ரெடிக் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக மஹரிஷி சரக் சாபக் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணையைத் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். நேற்று (30.4.2022) மதுரை மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், தமிழ்நாடுஅரசின் ஒப்புதலின்றி நடப்பதும், ஒன்றிய அரசின் அத்துமீறிய தலையீடும் தடுக்கப்படவேண்டும், தவறியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(இத் தீர்மானத்தை நிறைவேற்றியபின் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளிவந்தது. எனவே தீர்மானத்தைத் திருத்தி பின் வரும் வரிகளைச் சேர்த்து தமிழர் தலைவர் அவர்களே முன்மொழிந்தார்கள்.)

சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கக் காரணமாக இருந்தவர்கள் மீது விளக்கம் கோரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து, முதல் கட்டமாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் இக் கூட்டம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 14:

கரோனா பெருந்தொற்று முடிந்து மீண்டும் பள்ளிகள் தொடர்ந்து நேரடியாக இயங்கத் தொடங்கியுள்ள சூழலில், மாணவர்கள் - ஆசிரியர் உறவிலும், பள்ளிகளின் அன்றாட நிகழ்வுகளிலும் உளவியல் சிக்கல்கள் எழுவதையும் அக்கறையோடு இக் கூட்டம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நெறிப்படுத்தவும், அதற்குத் தேவையான பயிற்சியையும், விளையாட்டு, கலை நிகழ்வுகள், தனித்திறன் போட்டிகள் மூலம் அவர்களின் பல்துறைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் மூலமும் இந்நிலை சரியாக்கப்படவேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் எவ்வித போதைப் பழக்கங்களுக்கும் ஆளாகிவிடாமலும் அவர்களை நெறிப்படுத்துவதும், அதற்குத் தேவையான அளவில் சமூக விரோத சக்திகளின் செயல்பாட்டை காவல்துறை மூலம் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 15:

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதி - மதவாதச் சிந்தனையையும், அணி திரட்டலையும் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஜாதி அமைப்புகளும், அதன் பின்னணியில் இருக்கும் இந்துத்துவ சக்திகளும் செயலாற்றிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கு ஆபத்தை உருவாக்கக் கூடியதாகும். ஜாதிக் கயிறுகள் கட்டுவதில் நடக்கும் பிரச்சினைகளால் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வருத்தத்திற்கும், ஆழ்ந்த கவனத்திற்கும் உரியதாகும். பள்ளிகளில் ஷாகா, யோகா என்ற பெயர்களில் ஊடுருவ நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கும், பல்வேறு பெயர்களில் இயங்கும் அதன் மறைமுக அமைப்புகளுக்கும் இடம்தந்துவிடாமல் இவர்களின் நடவடிக்கை உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படவேண்டும். மாணவர்கள் மத்தியில் மதரீதியாக பிரிவினையைத் தூண்டிய பிற மாநில சம்பவங்கள் நமக்குத் தரும் எச்சரிக்கைகளை நாம் ஒதுக்கிவிட இயலாது. சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 

தீர்மானம் எண் 16:

உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும், பல முறை கண்டிக்கப்பட்டும் கூட நடைபாதைக் கோயில்கள் இன்னும் நிறையத் தோன்றுவதும், சிறிய பொம்மைகள் வைக்கப்பட்ட இடங்களில் அவை விரிவாக்கப்பட்டு கோயில்களாக உருவாவதும், அரசுக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் கோயில்கள் கட்டப்பட முயற்சிகள் எடுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் கடவுள் பொம்மைகளை வைத்து, அவற்றை வழிபாட்டிடங்களாக மாற்றி மெல்ல மெல்ல மதவெறியாளர்கள் அப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பொது அமைதிக்கு ஆபத்தான சூழலை உருவாக்க முயற்சிப்பதும் கடந்து செல்லக் கூடியவையல்ல. அவற்றை சட்டரீதியாகத் தடுத்திட இருக்கும் வாய்ப்புகளை அரசு பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றும் வண்ணம் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பினர்.

மாநில மாணவர் கழக செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் வருங்காலத்தில் மாணவர்களாக புதிய செயல்பாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளை மற்றும் பெரியார் 1000  நடத்துவது தொடர்பாக  புதிய தொழில்நுட்பம் மூலமாக பிரச்சாரத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் திட்டத்தையும் எளிமையாக எடுத்து உரையாற்றினார். 

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயிற்சி முகாமில் வகுப்புகள் எடுப்பதுபோல் பல வரலாற்று உண்மை செய்திகளை மாணவர்களுக்கு எடுத்து உரையாற்றினார். 

கூட்டத்தில் நிறைவுரையாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாக வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்.

திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் அ.ஜெ.உமாநாத் அனைவருக்கும் நன்றி கூறினார். 

புதிய மாநில,மண்டல பொறுப்பாளர்களை கூட்டத்தில் மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிவித்தார். கூட்டம் மதியம் 3.00 மணி அளவில் நிறைவடைந்து மாவட்டந் தோறும் வருகை புரிந்த மாணவர் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியருடன்  மாவட்ட வாரியாக ஒளிப்படத்தை எடுத்துக் கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக