வங்கித் துறை - இரயில்வே துறை - அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் வடவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து
சென்னை, மே 24 - வங்கித் துறை, இரயில்வே துறை, அஞ்சல் துறை மற்றும் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் வடவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்தும், வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாய மில்லையா? தமிழ்நாடு இளைஞர்களில் வேலை வாய்ப்பை பறிக்கும் சதியை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24.5.2022) தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறையினர் சார்பில் நடைபெற்றது.
இதில் பெரும் திரளான தோழர்கள் பங்கேற்று உரிமைப் போர் முரசு கொட்டினர்.
இதற்கென தமிழர் தலைவர் விடுத்த அறிக்கையில் (20.5.2022),
"2011ஆம் ஆண்டின் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44,60,000 பேர் பிற மாநிலத்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேராவது வெளி மாநிலத்தவர்கள் இருப்பார்கள்.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
இதுதவிர ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 பேர் வெளி மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் பறி போவது மட்டுமல்லாமல், தேர்தல்களிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும் அவர்கள்தான் இருக்கிறார்கள்.
எமது இளைஞர்கள் - படித்து வேலை கிட்டாமல் தற்கொலை முதல் மன அழுத்தம், வேதனை காரணமாக வேறு மார்க்கம் தெரியாமல் போதைப் பொருள்களுக்கு திசை தடுமாறி ஆளாகி இளமை வாழ்வைப் பாழடித்துக் கொள்வதும், சிலர் கொள்ளையடித்தும், கொலைகளில்கூட சில நேரங்ளில் ஈடுபடும் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கேற்ப கூலிப்பட்டாளத் தொழிலுக்கு இரையாகியும் வருகிற கொடுமையை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது. நம் இரத்தம் கொதிக்கிறது!
இவை அத்துணைக் கொடுமைகளுக்கும் காரணம் ஒன்றிய அரசும், அதனிடம் தன்னை மீட்டுக் கொள்ளத் தெரியாது தயவை எதிர்பார்த்தே காலந்தள்ளிய முந்தைய அடமான அரசுமே காரணமாகும்.
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் இப்படி பல்வேறு மாநில மக்களைச் சுரண்டுவதா? அவர்தம் வாழ்வாதாரப் பணிகளைப் பறித்துக் கொள்வது எவ்வகையில்நியாயம்?
முந்தைய பத்து ஆண்டு கால இருண்ட ஆட்சியால் பறிக்கப்பட்ட இத்தகைய உரிமைகளை மீட்டெடுக்க ஒரு அய்ந்தாண்டு போதாது; பல 5 ஆண்டுகள் இன்றைய ஆட்சி போன்ற உரிமை முழக்கச் செயல்பாடு நிறைந்த ஆட்சி தொடர்ந்தே ஆக வேண்டும் என்பதை நாளும் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஒன்றிய அரசின் துறைகளில் எல்லாம் வடநாட்டவர்கள் குவிக்கப்பட்டு, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது - சுரண்டப்படுகிறது. இதனை எதிர்த்து உரிமைப் போர் முரசு கொட்டத்தான் 24.5.2022 அன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் திராவிட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் போராட்ட போர்முரசு கொட்டினார்.
அதன்படி இன்று (24.5.2022) காலை 11 மணியளவில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில், வங்கி எழுத்தர், பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லையா? என்று பல்வேறு துறைகளில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வடவர்கள் ஆதிக்கத்தை எதிர்த்தும் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணியினர், திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள், திராவிட மகளிர் பாசறை தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று உரிமைப் போர்முரசு கொட்டினர்.
சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை தலைமையில் இன்று (24.5.2022) காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்புரையாற்றினார். மாநில இளை ஞரணி துணை செயலாளர் சோ.சுரேசு, திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் செ.பெ.தொண்டறம், மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம் வி.தங்கமணி, தளபதி பாண்டியன், த.மகேந்திரன், தே.சுரேஷ், வெ.கார்வேந்தன், ப.சக்கரவர்த்தி, எம்.நித்தி யானந்தம், ப.அறிவுச்செல்வன், த.மரகதமணி, மு.பவானி, நீ.குணசேகரன், சோ.நதியா, ம.சுபாஸ், செ.அன்புச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக திராவிடர் மாணவர் கழக மண்டல செயலாளர் சு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக