ஞாயிறு, 8 மே, 2022

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2022) காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் அவர்தம் சிலைக்கு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் பாபநாசம் மோகன், வழக்குரைஞர் சு. குமாரதேவன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் கோபால், சி.வெற்றிச் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, மு. பவானி, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சு நாதன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணை செயலாளர் கோ.வீ. ராகவன், சைதை மதியழகன், வி. தங்கமணி, சோ. சுரேஷ், கலைமணி, மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், மயிலை சந்திரசேகரன், மு. சண்முகபிரியன், ச.மகேந்திரன், கற்பகம், சின்னராசு ஆகியோர் இந்நிகழ்வில்  பங் கேற்று சிறப்பித்தனர்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புரட்சிக் கவிஞரின் பேரன் கோ. பாரதி, ஜெகதீசன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  தமிழர் தலைவருக்கு கவிஞர் கோ. பாரதி அவர்கள் புரட்சிக் கவிஞரின் புத்தகத்தை அளித்து மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக