• Viduthalai
சென்னை, ஏப். 5- விடுதலை' நாளிதழில் தொண்டாற் றிய, மறைந்த முகம் மாமணி மற்றம் க.ந.அரங்கநாதன் ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 2-.4.-2022 அன்று மாலை 5 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் மகா மகாலில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் பேராசிரி யர் ஆ.இரா. வேங்கடாச லபதி, பொதுப்பள்ளிக்க £ன மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் இரா.தெ. முத்து, முனைவர் அ. பிச்சை, சிவ.காளிதாசன், ஆ. சண்முக வேலாயுதன், பாவலர் ம.கணபதி, கவி ஞர் இரா.பன்னீர்செல் வம், கவிஞர் மணிமேகலை சிவராமன், கி.சி.இராசேந் திரன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் கள் முகம் மாணியின் அருந்தொண்டினையும், விடுதலையில் அவர் பணி யாற்றிய அனுபவங்களை யும் எடுத்துக்கூறினார். பத்திரிகை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கு நன்கு தெரியும், அந்த வகையில் முகம் பத்திரிகைக்கும் நெருக்கடி வந்த போது கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரை நேரில் அழைத்து, தங்களுக்கு என்னனென்ன உதவி வேண்டுமோ அதனை இயக்கம் செய்யும் என்று கூறிய உணர்வுபூர்வமான செய் திகளை நினைவூட்டி அவரது தமிழ்த் தொண் டினை குறிப்பிட்டு நினை வேந்தல் உரையாற்றினார்.
மூத்த வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன், முனைவர் இளமாறன் ஆகி யோர் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தி ருந்தனர். கூட்டத்தில் பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பெரு மளவில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக