சென்னை, மே 6- பெரியார் பெருந் தொண்டர் மு.சந்திரா முனு சாமி அவர்களின் படத்திறப் பும், முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்ச்சியும் நேற்று (5.5.2022) மாலை சென்னை - பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் பெருந்தொண்டர் நா.கலைவீரமணி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந் தோரை மு.பழனிக்குமார் வர வேற்றார். படத்தினைத் திறந்து வைத்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்கள் உரையாற்றுகை யில், மறைந்த பெரியார் பெருந் தொண்டர் பெலாக்குப்பம் முனுசாமி அவர்களும், சந்திரா அவர்களும் இருவருமே தீவிர சுயமரியாதைகாரர்களாக இருந்து மறைந்தவர்கள். தன்னு டைய குடும்பத்து பிள்ளைக ளுக்கு அனைவருக்கும் தமிழில் பெயரைச் சூட்டி மற்றவர்க ளுக்கு வழிகாட்டியவர்கள்.
சூளைமேடு பகுதியில் இருந்த காலத்தில், இயக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரப்பியவர்கள். அந்தப் பகுதியில் சந்திரா முனு சாமி அவர்களை அறியாதவர் கள் யாரும் இருக்க முடியாத அளவுக்கு களப்பணி ஆற்றிய வர்கள்.
இயக்கம் அறிவிக்கும் போராட்டங்களில் தவறாது கலந்து கொண்டு சிறைக்குச் சென்றவர் சந்திரா அவர்கள். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழா -- இயக்கக் கூட்டம் என்றால் அம்மா அவர்கள் அவர் மறை வுக்கு சில வாரங்களுக்கு முன் வரை வில்லிவாக்கத்திலிருந்து பேருந்தில் ஏறி பெரியார் திட லில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்து விடுவார்.
தந்தை பெரியாரின் கொள் கையை முழுமையாக பின்பற் றக்கூடிய வகையில் அவரது மகள் தமிழ்ச்செல்வி பழனிக் குமாரை ஜாதி மறுப்பு திரும ணம் செய்து கொண்டு சிறப்பான வாழ்வு வாழ்ந்து வரு கிறார்கள்.
திராவிடர் கழகத் தோழர் ஒருவரின் மறைவு என்பது ஒரு சமூகப் போராளியின் மறைவு. அந்த மறைவின் தாக்கம் அந் தக் குடும்பத்தைவிட சமூகத் தையே வெகுவாக பாதிக்கிறது. அந்த அடிப்படையில் சுயமரி யாதைச் சுடரொளி அருமை அம்மா சந்திரா முனுசாமி அவர்களின் மறைவு சமூகத் திற்கே பேரிழப்பாகும்.
சுயமரியாதைச் சுடரொளி சந்திரா அவர்களுக்கு தலை மைக் கழகத்தின் சார்பாக வீர வணக்கத்தை செலுத்தி இரங் கலுரை ஆற்றினர்.
திராவிடர் கழக மகளிரணி யின் காப்பாளர் க.பார்வதி, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி, பெரியார் களம் தலைவர் இறைவி ஆகி யோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர்
செ.ர.பார்த்தசாரதி, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலைய இயக் குநர் பசும்பொன் செந்தில் குமாரி, வடசென்னை மாவட் டச் செயலாளர் தி.செ.கணே சன், மாவட்ட துணைத் தலை வர் கி.இராமலிங்கம், வட சென்னை மாவட்ட அமைப் பாளர் புரசை சு.அன்புச் செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி - பெரியார் மாணாக்கன், பூவை க.தமிழ்ச்செல்வன், கொரட்டூர் முத்தழகன், கோ.வி.ராகவன், காரைக்குடி இராமநாதன், சுமதி, பூங்குழலி, பவானி, பெரியார் வலைக்காட்சி முத்து லட்சுமி, வழக்குரைஞர் துரை.அருண், கழகப் பொறுப்பா ளர்கள், குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வினைத் திராவிட மாணவர் கழக மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.
இறுதியில் மு.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக