திங்கள், 23 மே, 2022

ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை சிறப்பாக நடத்த சென்னை மண்டல கலந்துரையாடலில் முடிவு

 

கழகத்துணைத் தலைவரிடம் விடுதலை சந்தாவை துரை ராவணன் வழங்கினார். உடன் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.  திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் (29.4.2022) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கருஞ்சட்டை விருது அளிக்கப்பட்டதன் மகிழ்வாக சென்னை மண்டலத்தின் சார்பில் மு.சண்முகப்ரியன் பயனாடை அணிவித்தார். 

சென்னை,மே 17- சென்னை மண் டல பொறுப்பாளர்கள் கலந் துரையாடல் கூட்டம் 14.5.2022 முற்பகல் 11.00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள சிறு கூட்ட அரங்கில் கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி. பூங்குன்றன் தலைமை யிலும், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வ நாதன் ஆகியோர் முன்னிலை யிலும் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் 4.6.2022 மாலை 6.00மணி அளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக் கும் 'ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை’ சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சில முக்கிய திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.

தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி, ஆர். சேதுராமன், ஆயிரம் விளக்கு மு. சேகர், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், உடுமலை வடிவேலு, தொழி லாளர் அணி ஆ.துரை ராவ ணன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் ச.மகேந்திரன் ஆகியோர் கருத்துகளையும்‌ வழிமுறைகளையும் கூறினர்.  

மாநாட்டை விளக்கி ஆங்காங்கே சுவர் எழுத்துகளை எழுதுவது எனவும், சுவர் பேனர்களை ஒட்டுவது என வும், முடிந்த இடங்களில் நெகிழி பேனர்களை வைப்பது எனவும், மாநாட்டுக்கு முன்ன தாக மாநாடு நடக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்வது எனவும், மாநாட்டிற் கான செலவுக்காக பொருள் உதவியை சிறந்த முறையில் திரட்டிக் கொடுப்பது எனவும், துண்டறிக்கைகளை கொடுத்து கடை வசூல் செய்வது எனவும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கலந்துரையாடல் கூட் டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைச் செயலாளர் கெடார் மும்மூர்த்தி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், இளைஞ ரணி செயலாளர் ந.மணிதுரை, தரமணி கோ.மஞ்சநாதன்,  தி. முரளி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் நன்றி கூறி கலந்துரை யாடல் கூட்டத்தை முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக