வெள்ளி, 20 மே, 2022

'முகம்' மாமணி மறைவு - கழகத்தின் சார்பில் மரியாதை


எழுத்தாளர் 'முகம்மாமணி அவர்கள்  நேற்று (24.2.2022) மறைவுற்ற செய்தியை அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன்பொருளாளர் வீகுமரேசன்பெருங் கவிக்கோ வா.முசேதுராமன்கவிஞர் கண்மதியன்தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன்,  முரங்கநாதன்சோசுரேஷ்சுதமிழ்ச்செல்வன்பா.சிவகுமார்கலைமணி மற்றும்  தோழர்களும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

அந்தோ, விடுதலைப் பண்ணையின் விளைச்சலான 'முகம்' மாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம்

'விடுதலை' நாளிதழில் தொண்டாற்றி, அதன் வித்தக விளைச்சலாக என்றும் திகழ்ந்த இலட்சிய எழுத் தாளர், தமிழ் இன உணர்வு - திராவிடப் பாரம்பரிய பெருமையின் காப்பாளராக தனது கூர்வாள் வீச்சு போன்ற எழுதுகோலைப் பயன்படுத்திய ஒப்பற்ற ஆசிரியர் 'முகம்' மாமணி (வயது 91) அவர்கள் இன்று (24.2.2022) காலை மறைவுற்றார் என்று செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம்.

தானே உழைத்து, படித்து, பொறுப்பேற்று - எளிமையும், இனிமையும் இணைபிரியா எம் தோழர் என்பதை உலகறியச் செய்தவர்.

அவரது எழுத்துக்கள் சிற்றுளிச் செதுக்கல்கள்!

அவரது 'கிந்தனார்' பதில்கள் என்றென்றும் வாழும் இலக்கிய தென்றலாகும்.

அவருடன் நமக்குள்ள நட்பும், 'விடுதலை' உறவும் பிரிக்க முடியாதவை. அப்படிப்பட்டவர் மறைவு, பேரிழப்பாகும்!

விடுதலை 85ஆம் ஆண்டு விழாவில் (1.6.2019) அவரை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தோம்.

'விடுதலை' அதன் மூத்த குடும்பத்து உறவினை இழந்து தவிக்கிறது.

எது தவிர்க்கவியலாததோ அதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை.

அவரது மறைவால் துயருறும் அவரது குருதிக் குடும்பத்தினர், 'முகம்' ஏட்டு உறவுகளுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

சாகா எழுத்தின் மூலம் என்றும் வாழ்வார்.

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை   

24-2-2022     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக