சென்னை, ஏப். 14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2022) காலை 9.45 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியம் முகப்பில் உள்ள அண்ணலின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கழக நிர்வாகிகள், தோழர் - தோழியர்கள் அனைவரும் இணைந்து, ‘சமத்துவ நாள்‘ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
‘சமத்துவ நாள்‘ - உறுதிமொழி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.4.2022) அறிவித்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் “சமத்துவ நாள்” உறுதி மொழி வருமாறு:
“ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்
ஜாதிகளின் பெயரால் நடக்கும்
சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,
ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,
ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும்,
வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்பு ணர்வை ஊட்டிய,
நம் அரசமைப்புச் சட்டத்தைச் வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சகமனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும்,
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்!”
"சமத்துவநாள் உறுதி மொழி" வாசகங்களை தமிழர் தலைவர் கூற, தொடர்ந்து அனைவரும் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை, வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, சற்குணம், குட்டி வீரமணி, சாந்தகுமார், அர்ஜுன், அருண், தமிழ்ச்செல்வன், ராஜூ, வழக்குரைஞர் சு.குமார தேவன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கசேடன்,
மாநில மகளிரணி செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.இராகவன், வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் சு.மும் முர்த்தி, அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, த.மரகதமணி, மு.பவானி, டாக்டர் ஆருயிர், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேசு, சி.செங்குட்டுவன், தரமணி மஞ்சுநாதன், பொறியா ளர் சண்முகம், பா.கோபாலகிருஷ்ணன், சொ.அன்பு, டி.ஜி.அரசு, மங்களபுரம் மு.டில்லிபாபு, நா.பார்த்திபன், வ.கலைச்செல்வன், பா.பார்த்திபன், வ.தமிழ்ச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், அ.புகழேந்தி, சிற்றரசு, க.கலைமணி, காரல் மார்க்ஸ், மகேஷ் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக