வெள்ளி, 30 ஏப்ரல், 2021

மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள்

நன்கொடை

தென்சென்னை இளைஞரணி தோழர் மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். மு.சண்முகப்பிரியன் - விசித்ரா இணையருக்கு கழகத்  துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

வியாழன், 29 ஏப்ரல், 2021

பகுத்தறிவாளர் கழகத் தோழரும் நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) மறைவு

 பகுத்தறிவாளர் கழகத் தோழரும், தீவிரமான நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) 8.1.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினோம். அவரது இறுதி ஊர்வலத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி 
-உண்மை இதழ், ஏப்ரல் 16 - 30 .21

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்

திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அண்ணா சாலை என்றும் மாற்றப்பட்டு தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய நிலையிலும், வணிக விளம்பரப் பலகைகளில் பழைய பெயர்களே எழுதப்பட்டுள்ளதைக் கண்டித்து 19.12.1995 அன்று தலைவர்களை அவமதிக்கக் கூடியதும், சட்ட விரோதமானதுமான இந்த நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி தோழர்கள் என ஏராளமானோர் அணிவகுப்பாகச் சென்று வணிகர்களைச் சந்தித்து எடுத்துக் கூறினர். 31.12.1995 தேதிக்குள் பெயர்களை மாற்றக் கோரியும், அவ்விதம் செய்யாவிட்டால், சட்ட விரோதமாக எழுதி வைக்கப்பட்டுள்ள பெயர்களை ‘தார்’ கொண்டு அழிக்க நேரிடும் என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சாரத்தினை வணிகர்கள் புரிந்துகொண்டனர். பெயர் மாற்றமும் விரைவாக நடைமுறைக்கு வந்தது.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 1-15.4.21

புதன், 21 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் மறைவுக்கு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை


மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கையினை மறைந்த நடிகர் விவேக் அவர்களின் துணைவியார் மற்றும் மகள்களிடம் கழகத் தோழர்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், துணைத்தலைவர் சி.செங்குட்டுவன், த.கு.திவாகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை. தமிழ்ச்செல்வன், தென்சென்னை இளைஞரணி மு.சண்முகப்பிரியன், மகேந்திரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, பொறியாளர் குமார், பெரியார் சேகர், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணவிழா மகிழ்வாக ஆசிரியரிடம் சந்தாக்கள் வழங்கல்


தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் - வி.வளர்மதி இணையர் 23ஆம் ஆண்டு மண நாள் மகிழ்வாக விடுதலை மற்றும் உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.2100அய் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

(சென்னை, 19.4.2021)

புதன், 7 ஏப்ரல், 2021

தென்சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள்


தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதாப் பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து 30 தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் நடத்தப் பட்டன.

பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடங்களின் பட்டியல்:

29.3.21-சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரித்து  மாலை 5.00 மணி - வி.ஆர்.(பிள்ளை)தெரு, 5.40 மணி - நீலம் பாஷா தர்கா, 6.30 மணி - அனுமந்தபுரம், 7.15 மணி - இருசப்பா தெரு, இரவு 8.00 மணி - ராம் நகர், சிறப்புரை: பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

31.3.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா. வேலுவை ஆதரித்து மாலை 5 .00மணி - நொச்சி நகர், 5 .40 -  நொச்சிக்குப்பம், 6.30 -  டும்மிங்குப்பம், இரவு 7 .15- முல்லை நகர், 8 .00 மணி - சீனிவாசபுரம், சிறப்புரை: பா.மணி யம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

01.04.21 - சைதாப்பேட்டை தொகுதி வேட் பாளர் மா.சுப்ரமணியன் அவர்களை ஆத ரித்து மாலை 5 .00 மணி - கோட்டூர், 5.40 மணி - கோட்டூர்புரம், 6.30 மணி - சித்ரா நகர், இரவு 7.30 மணி - ஜோன்ஸ் சாலை, 8.15 மணி - மேட்டுப்பாளையம் அங்காடி, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்,

02.04.21 - ஆயிரம் விளக்கு தொகுதி வேட் பாளர் மருத்துவர் நா.எழிலன் அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - தேனாம் பேட்டை, இளங்கோ சாலை, 5.45 மணி - ஆலையம்மன் கோயில் அருகில், 6.30 மணி - ஆல் தோட்டம் கு.மா. வாரிய குடியிருப்பு, இரவு 7.30 மணி - திருவள்ளுவர் சாலை, 8.30 மணி - சிஅய்டி நகர், சிறப்புரை: மு. சண்முகப் பிரியன்

03.04.21 - தியாகராயர் நகர் தொகுதி வேட் பாளர் ஜெ.கருணாநிதி அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - அசோக் நகர், 5.45 மணி - 86ஆவது தெரு, 6.30 மணி - முத்துரங்கம் சாலை, இரவு 7 15 மணி - சீனிவாசா திரை யரங்கம், 8.00 மணி- ஜாபர்கான்பேட்டை, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்

04.04.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா.வேலுவை ஆதரித்து மாலை 4.00மணி - பஜார் சாலை, 4.30 மணி -  முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு, 5.00 மணி -  மாதவப் பெருமாள் கோவில் தெரு, 5.30 மணி - டாக்டர் அம்பேத்கர் பாலம், 6.00 மணி‌ - கைலாசபுரம், சிறப்புரை:- மு. சண்முகப்பிரியன்.

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் சிறப் பாக நடைபெற்றது. பரப்புரையின் இறுதியில் (4.4.21,இரவு 7.00 மணி) சிறப்பான ஏற்பாடுகளை செய்து பரப்புரைக்கு வழிவகுத்த தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் அவர்களுக்கு மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பாராட்டி பயனாடை அணிவிக்கப்பட்டது.

பரப்புரையில் கலந்து கொண்டோர் வருமாறு:

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், செயலா ளர் ந.மணித்துரை, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், தரமணி பகுதி பொறுப்பாளர் கோ.மஞ்சநாதன், மாணவர் கழகச் செயலாளர் வி.விசு வாசு, தலைவர் கு.பா.அறிவழகன்,  பி.அஜந்தா, செய. சொப்பன சுந்தரி, ஜெயவேல், அய்ஸ் ஹவுஸ் அன்பு மற்றும் பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை’ தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்

April 01, 2021 • Viduthalai

சென்னை,ஏப்.1- தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்ட விளக்கத்துக்கு, தனது பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பான பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். புகாரின்பேரில் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. அதற்கு, மின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசாஅனுப்பி யுள்ள இடைக்கால விளக்க கடிதத்தில் கூறியி ருப்பதாவது: திராவிட இயக்கத்தின் அடித் தளமே மகளிருக்கு அதிகாரம் அளித்தலும், சமுதாயத்தில் அவர்களுக்கு சமஉரிமை வழங்குதலும் தான். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் மாணவனாக, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின்  வழிகாட்டுதலில், திமுக வில் உறுப்பினராக இருக்கும் நான் ஒருபோதும் மகளிர்குறித்து இழிவாக பேசமாட்டேன்.

முதல்வரை நான் இழிவுபடுத்தியதாக அதிமுகவும், பாஜகவும் தேர்தல் ஆதாயத்துக் காக பொய்யான பிரச்சாரத்தை செய்கின்றன.

கடந்த 27ஆம் தேதி பெரம்பலூரில் செய்தி யாளர்களை சந்தித்து, எனது விளக்கத்தை அளித்தேன். அப்படி இருந்தும், முதல்வர் பழனிசாமி, 28ஆம் தேதி சென்னை திருவொற்றியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், எனதுபேச்சை மேற்கோள் காட்டி உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, ‘முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் நோக்கில் பேச வில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தேன்.

நான் தேர்தல் விதிகளை மீறி எதுவும் பேச வில்லை. என் மீது அதிமுக சார்பில் எத்தகைய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாது. எனவே, அதிமுகவின் புகார் மனுவை எனக்கு அளிக்க வேண்டும். அதன் பின்னரே எனது முழு விளக்கத்தை அளிக்க முடியும்.

பொதுமக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கோள்காட்டி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகி யோர் அரசியலில் உயர்ந்ததை ஒப்பிட்டு பேசினேன். என் முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால், அதில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும். இவ்வாறு அதில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார்.