சென்னை,ஏப்.1- தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்ட விளக்கத்துக்கு, தனது பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பான பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். புகாரின்பேரில் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. அதற்கு, மின்னஞ்சல் வழியாக தேர்தல் ஆணையத்துக்கு ஆ.ராசாஅனுப்பி யுள்ள இடைக்கால விளக்க கடிதத்தில் கூறியி ருப்பதாவது: திராவிட இயக்கத்தின் அடித் தளமே மகளிருக்கு அதிகாரம் அளித்தலும், சமுதாயத்தில் அவர்களுக்கு சமஉரிமை வழங்குதலும் தான். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் மாணவனாக, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வழிகாட்டுதலில், திமுக வில் உறுப்பினராக இருக்கும் நான் ஒருபோதும் மகளிர்குறித்து இழிவாக பேசமாட்டேன்.
முதல்வரை நான் இழிவுபடுத்தியதாக அதிமுகவும், பாஜகவும் தேர்தல் ஆதாயத்துக் காக பொய்யான பிரச்சாரத்தை செய்கின்றன.
கடந்த 27ஆம் தேதி பெரம்பலூரில் செய்தி யாளர்களை சந்தித்து, எனது விளக்கத்தை அளித்தேன். அப்படி இருந்தும், முதல்வர் பழனிசாமி, 28ஆம் தேதி சென்னை திருவொற்றியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், எனதுபேச்சை மேற்கோள் காட்டி உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து 29ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, ‘முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் நோக்கில் பேச வில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தேன்.
நான் தேர்தல் விதிகளை மீறி எதுவும் பேச வில்லை. என் மீது அதிமுக சார்பில் எத்தகைய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தெரியாது. எனவே, அதிமுகவின் புகார் மனுவை எனக்கு அளிக்க வேண்டும். அதன் பின்னரே எனது முழு விளக்கத்தை அளிக்க முடியும்.
பொதுமக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கோள்காட்டி முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகி யோர் அரசியலில் உயர்ந்ததை ஒப்பிட்டு பேசினேன். என் முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால், அதில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும். இவ்வாறு அதில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக