செவ்வாய், 27 அக்டோபர், 2026

இரா.வில்வநாதன் அவர்களின் தாயார் பவுனாம்பாள் படத்திறப்பு (20.02.2008)

 20.02.2008 அன்று மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களின் தாயார் பவுனாம்பாள் படத்தினை சென்னை கடற்கரை சாலை வானொலி நிலையத்திற்கு எதிரில் உள்ள சமூக நலக்கூடத்தில் திறந்து வைத்து உரையாற்றினோம். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். இறுதியாக நாம் உரையாற்றுகையில் பவுனாம்பாள் அவர்கள் நேரடியாக திராவிடர் கழகத்திற்குத் தொடர்பு இல்லை என்றாலும், மறைமுகமாக தோழர் வில்வநாதன் மற்றும் பிரபாகரன் ஆகியோரை இயக்கத்திற்கு வழங்கி உதவியிருக்கிறார் என்றும், வில்வநாதன் இளைஞர் அணியில் சேர்ந்து அமைதியான கட்டுப்பாடான இளைஞராகச் செயல்பட்டு, அவரது உழைப்பால் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதையும் தெரிவித்து உரையாற்றினோம்.

- அய்யாவின்  அடிச்சுவட்டில் -376  கட்டுரையின்  ஒரு பகுதி
- உண்மை  இதழ்,16-28.02.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக