புதன், 7 ஏப்ரல், 2021

தென்சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள்


தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதாப் பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து 30 தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் நடத்தப் பட்டன.

பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடங்களின் பட்டியல்:

29.3.21-சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆதரித்து  மாலை 5.00 மணி - வி.ஆர்.(பிள்ளை)தெரு, 5.40 மணி - நீலம் பாஷா தர்கா, 6.30 மணி - அனுமந்தபுரம், 7.15 மணி - இருசப்பா தெரு, இரவு 8.00 மணி - ராம் நகர், சிறப்புரை: பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

31.3.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா. வேலுவை ஆதரித்து மாலை 5 .00மணி - நொச்சி நகர், 5 .40 -  நொச்சிக்குப்பம், 6.30 -  டும்மிங்குப்பம், இரவு 7 .15- முல்லை நகர், 8 .00 மணி - சீனிவாசபுரம், சிறப்புரை: பா.மணி யம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர்.

01.04.21 - சைதாப்பேட்டை தொகுதி வேட் பாளர் மா.சுப்ரமணியன் அவர்களை ஆத ரித்து மாலை 5 .00 மணி - கோட்டூர், 5.40 மணி - கோட்டூர்புரம், 6.30 மணி - சித்ரா நகர், இரவு 7.30 மணி - ஜோன்ஸ் சாலை, 8.15 மணி - மேட்டுப்பாளையம் அங்காடி, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்,

02.04.21 - ஆயிரம் விளக்கு தொகுதி வேட் பாளர் மருத்துவர் நா.எழிலன் அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - தேனாம் பேட்டை, இளங்கோ சாலை, 5.45 மணி - ஆலையம்மன் கோயில் அருகில், 6.30 மணி - ஆல் தோட்டம் கு.மா. வாரிய குடியிருப்பு, இரவு 7.30 மணி - திருவள்ளுவர் சாலை, 8.30 மணி - சிஅய்டி நகர், சிறப்புரை: மு. சண்முகப் பிரியன்

03.04.21 - தியாகராயர் நகர் தொகுதி வேட் பாளர் ஜெ.கருணாநிதி அவர்களை ஆதரித்து மாலை 5.00 மணி - அசோக் நகர், 5.45 மணி - 86ஆவது தெரு, 6.30 மணி - முத்துரங்கம் சாலை, இரவு 7 15 மணி - சீனிவாசா திரை யரங்கம், 8.00 மணி- ஜாபர்கான்பேட்டை, சிறப்புரை: மு. சண்முகப்பிரியன்

04.04.21 - மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தா.வேலுவை ஆதரித்து மாலை 4.00மணி - பஜார் சாலை, 4.30 மணி -  முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு, 5.00 மணி -  மாதவப் பெருமாள் கோவில் தெரு, 5.30 மணி - டாக்டர் அம்பேத்கர் பாலம், 6.00 மணி‌ - கைலாசபுரம், சிறப்புரை:- மு. சண்முகப்பிரியன்.

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் சிறப் பாக நடைபெற்றது. பரப்புரையின் இறுதியில் (4.4.21,இரவு 7.00 மணி) சிறப்பான ஏற்பாடுகளை செய்து பரப்புரைக்கு வழிவகுத்த தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் அவர்களுக்கு மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பாராட்டி பயனாடை அணிவிக்கப்பட்டது.

பரப்புரையில் கலந்து கொண்டோர் வருமாறு:

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், செயலா ளர் ந.மணித்துரை, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், தரமணி பகுதி பொறுப்பாளர் கோ.மஞ்சநாதன், மாணவர் கழகச் செயலாளர் வி.விசு வாசு, தலைவர் கு.பா.அறிவழகன்,  பி.அஜந்தா, செய. சொப்பன சுந்தரி, ஜெயவேல், அய்ஸ் ஹவுஸ் அன்பு மற்றும் பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக