ஞாயிறு, 16 ஜூன், 2019

மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தமிழர் தலைவர் பங்கேற்றார்




சென்னை, ஜூன் 15- மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (15.6.2019) காலை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் தலைமை யேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர் .எஸ்.எஸின் மொழிக் கொள்கையான சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு,  அதன் சமுகநீதிக்கு எதிரான மனப்பான்மைக்கு அடையாள மான 'நீட்' திணிப்பு இவற்றை எதிர்த்து 15.6.2019 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஒத்த கருத்துள்ளவர்களையும் ஆங்காங்கே இணைத்துக் கொண்டு நடத்துமாறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 9.6.2019 அன்று வேண்டுகோள் அறிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி இன்று (15.6.2019) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில், சமஸ்கிருதம், இந்தித்திணிப்பு, நீட்' தேர்வு இவற்றைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசு இவற்றைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன.

தஞ்சை


தஞ்சை தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன  உரை நிகழ்த்தினார்.

சென்னை




சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் வழக் குரைஞர் த.வீரசேகரன், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் கழக மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.செ.மதிவதனி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்ட கண்டன உரை


திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை யாற்றினர். நிறைவாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 15.6.19

புதன், 12 ஜூன், 2019

மு. சண்முகப்பிரியன் - வி. விஜித்ரா சுயமரியாதை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

மு. சண்முகப்பிரியன் - வி. விஜித்ரா ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழாவினை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:  மாநில குழு உறுப்பினர் சி.பி.அய்.(எம்)

கே. பாலபாரதி, மோகனா வீரமணி, பொதுச் செயலாளர்கள்:  வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன்,  அமைப்பு செயலாளர்கள்: வே. செல்வம், வி. பன்னீர்செல்வம்,  இரா. வில்வநாதன், பொறியாளர் ஈ.குமார்  மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை - 8.6.2019)

மணவிழாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் தமிழர் தலைவர்

சென்னை, ஜூன்9, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி.இராமசாமி சாலை மாநக ராட்சி சமுதாயக்கூடத்தில் நேற்று (8.6.2019) மாலை சென்னை முனு சாமி_நானி ஆகியோரின் மகன் சண்முகப் ப்ரியனுக்கும், சென்னை விஜயன்_பாரதி ஆகியோரின் மகள் வி.விஜித்ராவுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழாவை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்.

இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தார். மாநிலம் தழுவிய அளவில்  ஜூன் 15இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து அனைவரும் போராட் டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

விழாத் தொடக்கத்தில் தென் சென்னை இளைஞரணி தோழர் கு. செல்வேந்திரன் வரவேற்றார். கழகப் பேச் சாளர் தமிழ் சாக்ரட்டீஸ் அறிமுக உரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ்,  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் குண சேகரன், அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், வி.பன்னீர்செல் வம்,  சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் உள்பட பலர் வாழ்த் துரையாற்றினர்.

சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வ நாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் ஆனந் தன் உள்பட சென்னை மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

மோகனா அம்மையார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார்,  மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், சமுகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ் மற்றும் சென்னை மண்டல, மாவட் டக்  கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பொறியாளர் குமார், இனியரசன் இணைப்புரை வழங்கினர். விஜய ராஜா நன்றி கூறினார்.

விழாவில் தமிழர் தலைவர் உறுதி மொழி கூற, மணமக்கள் உறுதி மொழியேற்றுக் கொண்டனர்.

சடங்குகள் இல்லாத, தாலி இல் லாத, ஜாதி மறுப்புத் திருமணமாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் கொள்கை வாழ்வு விழாவாக நடை பெற்ற விழாவுக்கு நூற்றுக்கு நூற் றுப்பத்து மதிப்பெண் வழங்கப்பட்ட மண விழாவாக பாராட்டப்பெற்றது.

மணமகன் சண்முகப்பிரியன் பச்சையப்பன் கல்லூரி இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும்போது இயக்கத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் களப்பணியாற்றி வருபவர். திராவிட மாணவர் கழகப் பொறுப்பில் தொடங்கி, மாவட்ட இளைஞரணி செய லாளர் என்று பொறுப்புகளில் பணி யாற்றிவர். இயக்கத்திற்கு புதிய இளை ஞர்களை சேர்த்தவர். கூட்டங்களில் துடிப்பாக உரையாற்றுவதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நமது கருத்துகளை பரப்பியவர்.

ஈரோட்டில் தமிழர் தலைவர் தலை மையில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் 5 ஆண்டு களுக்கு திரு மணத்தை தள்ளிவைத்து இயக்கப் பணிக்கு வருபவர்கள் பட்டியலை வழங்கும்படி வேண்டுகோள் விடுக் கப்பட்டது. அந்த பட்டியலில் ஆர்வத் துடன் பெயரை வழங்கிய இளைஞர் ஏராளமானோர். அவர்களில் நம்முடைய சண்முகப்பிரியனும் ஒருவர் ஆவார். நம்முடைய இளைஞர்கள் சொல்வதை செய்யக்கூடிய கொள்கையாளர்கள். நம் தோழர்கள் செய்யக்கூடிய சிறிய பணி கூட ஆரியத்தை அலறவிடும் என்பதற்கு உதாரணம் என்னவென்றால் சிறிய கரும்பலகையை அவர்கள் வசிக்கும் பகுதியில் வைத்து தினந்தோறும் பகுத் தறிவு கருத்துகளை எழுதி அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கூடியவரில் இவரும் ஒருவர்.

தென்சென்னை மாவட்டத்தில் இருக்கும் இளைஞரணி தோழர்கள் இதனை தொடர்ந்து செய்து வரக் கூடியவர்கள். மிகவும் துடிப்பான இளைஞர் சண்முகப்பிரியன். இயக்கம் அறிவிக்கும் போராட்டங்களில் தவ றாமல் கலந்துக் கொள்வதோடு, நண்பர் களுடன் கூட்டங்களுக்கு வரக்கூடியவர்.

மணமகளும் நமது இயக்க குடும்பத்தை சேர்ந்தவர்தான். மணமகள் விஜித்ரா இளைஞரணித் தோழர் செல்வேந்திரன் சகோதரியின் மகள். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களின் ஈடுபாடுகளை பார்த்து இயக்கத்தின் மீது பற்றுகொண் டவர் மணமகள். இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு அய்.பி.எஸ். தேர்விற்கு முயற்சித்து வருகிறார். அதில் வெற்றியும் பெறுவார் என்று நம்புகிறேன். தந்தை பெரியார் கொள்கையை ஏற்ற வர்கள் - வாழ்வில் வெற்றியின் சிகரத்தை எட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த போராட்டத்தில் மணமக்கள்  பங்கேற்க உள்ளதாக மணவிழா மேடையிலேயே கழகத் தலைவரிடம் உறுதி கூறினார்கள்.



சண்முகப்பிரியனின் குடும்பத்தினர் சு. முனுசுவாமி -மு. ராணி, மு. பிரேம்குமார் - சுமதி ஆகியோர் நாகம்மையார் குழந்தை இல்ல நிதியாக ரூ.5,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை 8.6.2019)

 -  விடுதலை நாளேடு, 9.6.19


புதன், 5 ஜூன், 2019

சுயமரியாதை இணையேற்பு விழா

நாள்: 8.6.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி


இடம்: மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சி.பி.ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை


மணமக்கள்: மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா


வரவேற்புரை: கு.செல்வேந்திரன்


முன்னிலை: வி.பன்னீர்செல்வம், தி.இரா.ரத்தினசாமி, தே,செ.கோபால், சு.குமாரதேவன், இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, ப.முத்தையன், பா.தென்னரசு, வெ.மு.மோகன், ஆர்.டி.வீரபத்திரன், த.ஆனந்தன்


அறிமுகவுரை: செ.தமிழ்சாக்ரடீஸ்


தலைமையேற்று மணவிழாவை


நடத்திவைத்து அறிவுரை வழங்குபவர்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


சிறப்புரை:


வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்)


தோழர் கே.பாலபாரதி (மாநில குழு உறுப்பினர் சி.பி.அய் (எம்))


வாழ்த்துரை:


துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்)


தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)


வீ.குமரேசன் (பொருளாளர்)


உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)


வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்)


வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்)


இணைப்புரை: பொறியாளர் ஈ.குமார், ம.இனியரசன்


நன்றியுரை: க.விஜயராஜா


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ச.மகேந்திரன், ந.மணிதுரை


- - - - -


நாள்: 9.6.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி


இடம்: பாத்திமா அன்னை சமூக நல அரங்கம், வேளச்சேரி மெயின்ரோடு, கிழக்கு தாம்பரம்


மணமக்கள்: மு.மணிமாறன் - அ.ஓவியா


வாழ்க்கை இணையேற்பு விழா தலைமை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


விழைவு: தாம்பரம் ப.முத்தையன்


(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)


விடுதலை நாளேடு, 3.6.19 


கலைஞர், அண்ணா சிலைகளுக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு



சென்னை, ஜூன் 3 முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2019) சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அவர்களின் சிலைக்கும், அறிஞர் அண்ணா சிலைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் தி.மு.க. முன்னணியினர் கழகத் தலைவரை வரவேற்றனர்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர்  இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பெரியார் சமுகக் காப்பு அணி அமைப்பாளர் சோ.சுரேஷ்,  பயிற்றுநர் சி.காமராஜ், தோழர்கள் தாம்பரம் சுரேஷ், செம்பியம் பா.கோபால கிருஷ்ணன், திருவொற்றியூர் மாவட்டக் கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாணிக்கம், ஆயிரம் விளக்கு மு.சேகர், அரும் பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன், மயிலாப்பூர் பாலு, தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, சேலம் மொட்டையன், பெரியார் திடல் அருள், ஆவடி க.கலைமணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

-விடுதலை நாளேடு, 3.6.19

புதன், 29 மே, 2019

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்



திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் மு.சித்தார்த்தன் மற்றும்  பங்கேற்ற கழக வழக்குரைஞர்கள் (சென்னை-பெரியார் திடல், 22.5.2019)

- விடுதலை நாளேடு, 22.5.19

அருந்ததி மக்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்



சென்னை, மே 27 இராம நாதபுரம் மாவட்டம் பாப்பா குடியில் அருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்கு தல் நடத்திய சமூக விரோதி களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப் பாட்டம் சென்னை வள் ளுவர் கோட்டம் அருகே இன்று (27.5.2019) காலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பல் வேறு அமைப்புகளின் சார் பில் பலரும் கலந்து கொண் டனர்.
திராவிடர் கழகம்  சார்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 27. 5 .2019

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

வல்லம், மே 27 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகழகத்திலுள்ள வள்ளுவர் அரங்கில் 18.05.2019 சனிக்கிழமை மாலை 05.15 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ராஜவேல் "கடவுள் மறுப்பு" கூறினார். திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் அனைவரையும் வரவேற்றார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து கருத்துரையாற் றினார்கள்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தே.காமராஜ், அ.சுரேஷ், ப.வெற்றிச் செல்வன், வெ.ஆசைத்தம்பி, க.கண்ணன், பெரியார் சமுகப் பாதுகாப்பு அணியின் மாநில பொறுப்பாளர் சுரேஷ், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.அன்புராஜா, திண்டுக்கல் மண்டல இளைஞ ரணிச் செயலாளர் குணா.அறிவழகன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் கூ.செல்வம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் ந.பஞ்சமூர்த்தி, வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் வீரைய்யா, புதுச்சேரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.முகேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோ.நீலகண்டன் கூட்டத்தில் வடிக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.

பங்கேற்றோர்


தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் ஜெயராமன், செயலாளர் அய்யனார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன், காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் நாத்திக.பொன்முடி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளன், தருமபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், ஒசூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் செ.டார்வின் பேரறிவு, திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் கே.பாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அ.கரிகாலன்,  கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ந.உதயசங்கர், செயலாளர் வேலு, விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சேகர், கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.திராவிடமணி, அமைப்பாளர் விவேக், நீலமலை மாவட்ட இளைஞரணி தலைவர் யா.சத்தியநாதன், செயலாளர் சி.இராவணன், தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் நா.மாயவன், செயலாளர் மா.இராமசாமி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.ரமேஷ்,கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.சின்ன துரை, அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் சி.ராஜமணிகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.வீரத்தமிழன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராஜா, செயலாளர் இரா.யோகராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.கண்ணன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன், செயலாளர் இரா.பிரபாகரன், விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கோபால் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் 250 பேர்,திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் என 300 பேர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019