ஞாயிறு, 16 ஜூன், 2019

மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் தமிழர் தலைவர் பங்கேற்றார்




சென்னை, ஜூன் 15- மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (15.6.2019) காலை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் தலைமை யேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர் .எஸ்.எஸின் மொழிக் கொள்கையான சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு,  அதன் சமுகநீதிக்கு எதிரான மனப்பான்மைக்கு அடையாள மான 'நீட்' திணிப்பு இவற்றை எதிர்த்து 15.6.2019 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஒத்த கருத்துள்ளவர்களையும் ஆங்காங்கே இணைத்துக் கொண்டு நடத்துமாறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 9.6.2019 அன்று வேண்டுகோள் அறிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி இன்று (15.6.2019) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில், சமஸ்கிருதம், இந்தித்திணிப்பு, நீட்' தேர்வு இவற்றைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசு இவற்றைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன.

தஞ்சை


தஞ்சை தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன  உரை நிகழ்த்தினார்.

சென்னை




சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் வழக் குரைஞர் த.வீரசேகரன், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் கழக மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.செ.மதிவதனி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்ட கண்டன உரை


திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை யாற்றினர். நிறைவாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 15.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக