மு. சண்முகப்பிரியன் - வி. விஜித்ரா ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மாநில குழு உறுப்பினர் சி.பி.அய்.(எம்)
கே. பாலபாரதி, மோகனா வீரமணி, பொதுச் செயலாளர்கள்: வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், அமைப்பு செயலாளர்கள்: வே. செல்வம், வி. பன்னீர்செல்வம், இரா. வில்வநாதன், பொறியாளர் ஈ.குமார் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை - 8.6.2019)
மணவிழாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் தமிழர் தலைவர்
சென்னை, ஜூன்9, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சி.பி.இராமசாமி சாலை மாநக ராட்சி சமுதாயக்கூடத்தில் நேற்று (8.6.2019) மாலை சென்னை முனு சாமி_நானி ஆகியோரின் மகன் சண்முகப் ப்ரியனுக்கும், சென்னை விஜயன்_பாரதி ஆகியோரின் மகள் வி.விஜித்ராவுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழாவை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்.
இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தார். மாநிலம் தழுவிய அளவில் ஜூன் 15இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து அனைவரும் போராட் டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
விழாத் தொடக்கத்தில் தென் சென்னை இளைஞரணி தோழர் கு. செல்வேந்திரன் வரவேற்றார். கழகப் பேச் சாளர் தமிழ் சாக்ரட்டீஸ் அறிமுக உரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் குண சேகரன், அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், வி.பன்னீர்செல் வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் உள்பட பலர் வாழ்த் துரையாற்றினர்.
சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வ நாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் ஆனந் தன் உள்பட சென்னை மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மோகனா அம்மையார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், சமுகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ் மற்றும் சென்னை மண்டல, மாவட் டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
பொறியாளர் குமார், இனியரசன் இணைப்புரை வழங்கினர். விஜய ராஜா நன்றி கூறினார்.
விழாவில் தமிழர் தலைவர் உறுதி மொழி கூற, மணமக்கள் உறுதி மொழியேற்றுக் கொண்டனர்.
சடங்குகள் இல்லாத, தாலி இல் லாத, ஜாதி மறுப்புத் திருமணமாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் கொள்கை வாழ்வு விழாவாக நடை பெற்ற விழாவுக்கு நூற்றுக்கு நூற் றுப்பத்து மதிப்பெண் வழங்கப்பட்ட மண விழாவாக பாராட்டப்பெற்றது.
மணமகன் சண்முகப்பிரியன் பச்சையப்பன் கல்லூரி இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும்போது இயக்கத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டு இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் களப்பணியாற்றி வருபவர். திராவிட மாணவர் கழகப் பொறுப்பில் தொடங்கி, மாவட்ட இளைஞரணி செய லாளர் என்று பொறுப்புகளில் பணி யாற்றிவர். இயக்கத்திற்கு புதிய இளை ஞர்களை சேர்த்தவர். கூட்டங்களில் துடிப்பாக உரையாற்றுவதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நமது கருத்துகளை பரப்பியவர்.
ஈரோட்டில் தமிழர் தலைவர் தலை மையில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் 5 ஆண்டு களுக்கு திரு மணத்தை தள்ளிவைத்து இயக்கப் பணிக்கு வருபவர்கள் பட்டியலை வழங்கும்படி வேண்டுகோள் விடுக் கப்பட்டது. அந்த பட்டியலில் ஆர்வத் துடன் பெயரை வழங்கிய இளைஞர் ஏராளமானோர். அவர்களில் நம்முடைய சண்முகப்பிரியனும் ஒருவர் ஆவார். நம்முடைய இளைஞர்கள் சொல்வதை செய்யக்கூடிய கொள்கையாளர்கள். நம் தோழர்கள் செய்யக்கூடிய சிறிய பணி கூட ஆரியத்தை அலறவிடும் என்பதற்கு உதாரணம் என்னவென்றால் சிறிய கரும்பலகையை அவர்கள் வசிக்கும் பகுதியில் வைத்து தினந்தோறும் பகுத் தறிவு கருத்துகளை எழுதி அறிவியல் சிந்தனைகளை வளர்க்க கூடியவரில் இவரும் ஒருவர்.
தென்சென்னை மாவட்டத்தில் இருக்கும் இளைஞரணி தோழர்கள் இதனை தொடர்ந்து செய்து வரக் கூடியவர்கள். மிகவும் துடிப்பான இளைஞர் சண்முகப்பிரியன். இயக்கம் அறிவிக்கும் போராட்டங்களில் தவ றாமல் கலந்துக் கொள்வதோடு, நண்பர் களுடன் கூட்டங்களுக்கு வரக்கூடியவர்.
மணமகளும் நமது இயக்க குடும்பத்தை சேர்ந்தவர்தான். மணமகள் விஜித்ரா இளைஞரணித் தோழர் செல்வேந்திரன் சகோதரியின் மகள். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களின் ஈடுபாடுகளை பார்த்து இயக்கத்தின் மீது பற்றுகொண் டவர் மணமகள். இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு அய்.பி.எஸ். தேர்விற்கு முயற்சித்து வருகிறார். அதில் வெற்றியும் பெறுவார் என்று நம்புகிறேன். தந்தை பெரியார் கொள்கையை ஏற்ற வர்கள் - வாழ்வில் வெற்றியின் சிகரத்தை எட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த போராட்டத்தில் மணமக்கள் பங்கேற்க உள்ளதாக மணவிழா மேடையிலேயே கழகத் தலைவரிடம் உறுதி கூறினார்கள்.
சண்முகப்பிரியனின் குடும்பத்தினர் சு. முனுசுவாமி -மு. ராணி, மு. பிரேம்குமார் - சுமதி ஆகியோர் நாகம்மையார் குழந்தை இல்ல நிதியாக ரூ.5,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை 8.6.2019)
- விடுதலை நாளேடு, 9.6.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக