புதன், 5 ஜூன், 2019

கலைஞர், அண்ணா சிலைகளுக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்புசென்னை, ஜூன் 3 முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2019) சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அவர்களின் சிலைக்கும், அறிஞர் அண்ணா சிலைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் தி.மு.க. முன்னணியினர் கழகத் தலைவரை வரவேற்றனர்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர்  இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பெரியார் சமுகக் காப்பு அணி அமைப்பாளர் சோ.சுரேஷ்,  பயிற்றுநர் சி.காமராஜ், தோழர்கள் தாம்பரம் சுரேஷ், செம்பியம் பா.கோபால கிருஷ்ணன், திருவொற்றியூர் மாவட்டக் கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாணிக்கம், ஆயிரம் விளக்கு மு.சேகர், அரும் பாக்கம் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வன், மயிலாப்பூர் பாலு, தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன், காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா, சேலம் மொட்டையன், பெரியார் திடல் அருள், ஆவடி க.கலைமணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

-விடுதலை நாளேடு, 3.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக