திங்கள், 19 நவம்பர், 2018

தரமணியில் கழக கொடி ஏற்றம்



12.11.18 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி தந்தை பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகில் தரமணி மஞ்சநாதன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் தரமணி எம்.ஜாபர் அலி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார். ச.துணைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-  விடுதலை நாளேடு, 18.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
 தரமணி தந்தை பெரியார் நகர்
17.9.18 காலை 7.00 மணிக்கு தரமணி பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன் மாலை அணிவித்தார்.    துணைச் செயலாளர் சா.தாமோதரன், எ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப்பாளர்கள் ஜி.கண்ணன், கோ.மனோோகர், மீசை டி.சேகர், அ.மகாதேேவன் மற்றும் ச.சந்தோஷ், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கண்ணன் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கினர். 

தியாகராயர் நகர்
காலை 8 .10 மணிக்கு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன்  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலையிலும் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணிவித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மு.சேகர், ந.இராமச்சந்திரன், கோ.மஞ்சநாதன், அய்ஸ் அவுஸ் அன்பு, ந.மணித்துரை, கு.பா.அறிவழகன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். 

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் வழங்க முடிவு



சென்னை, நவ. 12 தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் கூட்டம் 9.11.2018 அன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மேல்மாடி முத்துதெருவில் அமைந் துள்ள மாவட்ட கழக செயலாளர் பார்த்தசாரதி இல்லத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங் கேற்று திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 86ஆவது பிறந்தநாள் மகிழ்வாக வழங்கப்படவுள்ள விடுதலை சந்தா சேகரிப்புப் பணி களையும், ஒவ்வொரு கழகத் தோழர் களும் விடுதலை சந்தா திரட்டும் பணிகளில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் எடுத் துரைத்தார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாண வர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

சந்தா திரட்டித்தர பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்


மாவட்ட தலைவர் வில்வநாதன் 20 சந்தாக்கள், மாவட்ட செயலாளா செ.ரா.பார்த்தசாரதி 20 சந்தாக்கள், மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் 10 சந்தாக்கள், அரும் பாக்கம் க.தமிழ்ச்செல்வன் 10 சந் தாக்கள், மாவட்ட துணைத் தலைவர் கோ.வி.இராகவன் 10 சந்தாக்கள், மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன் 10 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக தலைவர் விஸ்வாசு 5 சந்தாக்கள், மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.ப.அறிவழகன் கவின் மலர் 5 சந்தாக்கள், பகுதி பொறுப் பாளர் க.இராமச்சந்திரன் மாணவர் கழக பொறுப்பாளர்கள், துணை வேந்தன், இரவி 10 சந்தாக்கள்

இறுதியாக கவின்மலர் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 12.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

திருவொற்றியூர் கழக மாவட்ட கலந்துரையாடல்



திருவொற்றியூர், நவ. 5 திரு வொற்றியூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் புதுவண்ணை பெரியார் மாளிகையில் அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையிலும், மாவட்ட தலைவர் வெ.மு. மோகன் மற்றும் மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன் னிலையிலும் 28.10.2018 அன்று மாலை 7 மணியளவில் நடை பெற்றது.

தீர்மானங்கள்


1) கிளை தோறும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுக் கொடிக்கம்பங்கள் நிறுவுவது என தீர்மானிக்கப் பட்டது.

2) புதிய கிளைகள் அமைப் பது

3) அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவுடன் புது வண்ணை பெரியார் பெருந் தொண்டர் க.பலராமன் அவர் களின் நூற்றாண்டு விழாவும் (1.7.1919 & 1.7.2019) சேர்த்து புது வண்ணை பகுதியில் எழுச்சி யுடன் கொண்டாடுவது என தீர் மானிக்கப்பட்டது. தலைமைக் கழகத்தின் அனுமதி கோருவது,

4) விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கமாக நடத்துவது

5) திருவொற்றியூர் பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை மறைத்து அடிக்கடி பேனர்கள் கட்டுவது பற்றி காவல்துறை மற்றும் மாநகராட்சி அமைப்புகளிடம் புகார் தெரிவிப்பது என தீர் மானிக்கப்பட்டது.

6) திருவொற்றியூர் மாவட்ட அமைப்பாளராக செ.நாகேந்தி ரன், மாவட்ட துணைச் செய லாளராக புதுவண்ணை சு.செல்வன் ஆகியோர் நியமிக்கப் பட்டனர். மாவட்ட இளை ஞரணி தலைவராக மு.ரா.

திலீபன் நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளராக இரா.சதீஷ் நியமிக்கப்பட்டார்.

-  விடுதலை நாளேடு, 5.11.18

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் முடிவுகள்

* அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்


* கிரீமிலேயர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!

* தமிழர் தலைவர் பிறந்த டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை அளித்து மகிழ்வோம்!



சென்னை, நவ.3 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக அளிப்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று (3.11.2018) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 : இரங்கல் தீர்மானம்

மானமிகு சுயமரியாதைக்காரன்'' என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங்கலையும், அவரின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்  2:      பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்தல்

06.10.2018 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழா  (சுயமரியாதை நாள்)

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் ஓயாது உழைத்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் விழாவை (சுயமரியாதை நாள்) 2018 டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மனிதநேயப்பணிகளான குருதிக்கொடை வழங்குதல், உடற்கொடை வழங்குதல், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருள்கள் வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல்,  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நமக்கு அளித்த  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல், கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது எனத் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம்  4: உண்மை' சந்தா சேர்ப்புக்குப் பாராட்டு



2017 நவம்பரில் கடலூரில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் கழக இளைஞரணியினர் 2000 உண்மை' சந்தாக்கள் சேர்த்து அளிக்க வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேலாக 2,220 உண்மை' சந்தாக்கள் சேர்த்து வழங்கிய கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு (குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, கோவை மண்டலம்) இக்கூட்டம் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இப்பணியை ஒரு தொடர் பணியாக செய்திடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  5: விடுதலை' சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான, விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து 1,000 விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து 2018 டிசம்பர் 02 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  6: இளைஞரணி அமைப்பைக் கட்டமைத்தல்




திராவிடர் கழக இளைஞரணியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலுவாக கட்டமைக்கும் வகையில், கழக இளைஞரணி அமைப்பை மாவட்டம், ஒன்றியம், கிளைக் கழகம் வரை புதுப்பிப்பதற்கான சுற்றுப்பயணத்தை, கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள்  மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  7: தஞ்சையில்  கழக மாநில மாநாடு விளக்க சுவர் எழுத்துப் பணிகள்

2019 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி, தமிழகம் முழுவதும் உடனடியாக சுவர் எழுத்து விளம்பரப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது. மேலும் மாநாட்டு நன்கொடை வசூல் பணிகள் மற்றும் விளம்பரப் பணிகளில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்  8 : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா


அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்து தன் வாழ்வை இலட்சியத் திற்காக அர்ப்பணித்து அவர் மறைவிற்குப்பின், திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்று 5 ஆண்டு காலம் வழிநடத்திய தொண்டறத்தின் தூய உருவம் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை 2019 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடிட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிவித்த 8 செயல்திட்டங்களை செயல்படுத்திட திராவிடர் கழகம் மற்றும் கழக மகளிரணி பொறுப்பாளர்கள், தோழர்களோடு  இளைஞரணி தோழர்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்  9: கிரீமிலேயர் வருமானக் கணக்கீடு தொடர்பான ஆணையை ரத்து செய்க


கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட, அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்தியப் பணியாளர் நல அமைச்சகத்தின் 06.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாதச் சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆணையை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைக் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்துகொண்டு போராடிட  கிளர்ந்தெழ வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10: சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துக!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாமா? கூடாதா? என்பதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கில் சனாதனிகளும், பழைமை சம்பிரதாய விரும்பிகளும், பிரபல வழக்குரை ஞர்களையெல்லாம் வாதாட வைத்த நிலையில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வில் 4 நீதிபதிகள் பெரும்பான்மை கருத்துகளை தீர்ப்பாக எழுதி, எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லலாம்  என்று உரிமை வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு குறுக்குசால் ஓட்டாமல், கேரள அரசுக்குத் துணை நின்று,  எல்லா வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதிட வகை செய்க!

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்று துணைவேந்தர் அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது.  மாநில அரசு குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர்,  கல்வித்துறைச் செயலாளர் உடனடிகவனம் செலுத்தி,   புதிய ஆணை ஒன்று தேவைப்படின்  நிறைவேற்றி முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள்,  தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவர்களுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இப்பிரச்சினையில் காலம் தாழ்த்தினால்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அனுமதி  பெற்று, கிளர்ச்சியில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

-  விடுதலை நாளேடு, 3.11.18

ஞாயிறு, 4 நவம்பர், 2018

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான இளைஞரணியினர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெறும் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில்


சீருடை அணிவகுப்பை நடத்துவது என தீர்மானம்




சிறப்பு தீர்மானம் 13:
இளைஞரணி சீருடை அணிவகுப்பு நடத்துதல்
2019 பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாட்டில் நடைபெறும் ஊர்வலத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் சீருடை அணிவகுப்பை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.


சென்னை, நவ. 4 திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில்  3.11.2018 அன்று முற்பகல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர் இளைஞரணியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அணுகு முறைகள் குறித்தும், இளைஞரணிப் பொறுப் பாளர்களோடு கலந்துரையாடி தலைமை யுரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரத்தமிழன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை ஆற்றி னார். கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவாக கருத்துரை வழங்கினார். முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு இளைஞரணித் தோழர்களின் பணிகளைப் பாராட்டி, 2019 பிப்ரவரி 2,3 ஆகிய நாள்களில் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாட்டில் இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மிகப்பெரிய அளவில் சீருடை அணி வகுப்பை நடத்திட வேண்டும். இளை ஞரணி தோழர்கள் உடனடியாக அதற்கான செயல்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்னர், விழுப்புரம் மண்டலத் தலை வர் க.மு.தாஸ், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் மோகன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆத்தூர் சுரேஷ், ப.வெற்றிச்செல்வன், தே.காமராஜ், பொழிசை ச.கண்ணன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெயராஜ்செல்லத்துரை, திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் முனைவர் அன்புராஜா, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், திண்டுக்கல் மண்டல இளைஞரணிச் செயலாளர் குண.அறிவழகன், மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், விழுப்புரம்மண்டல இளைஞ ரணிச் செயலாளர் தா.இளம்பரிதி, காஞ்சிபுரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் தி.இளந்திரையன், சேலம் மண்டல இளை ஞரணிச் செயலாளர் கூ.செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.சிவசாமி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆறுமுகம், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் வீ.திராவிடன், புதுச்சேரி  இளைஞரணித் தலைவர் தி.இராசா, காரைக்கால் மண்டல இளை ஞரணி பொறுப்பாளர் பெரியார் கணபதி, தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பழனிச் சாமி, கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் திலீபன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் நாகராசன், திண்டிவனம் மாவட்ட இளைஞரணித் தலைவர் பாபு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ் சாக்ரடீஸ், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக்குமார், ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் பகத்சிங், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் இளைஞரணியின் பணிகள் குறித்தும், எதிர்கால வேலைகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் பார்த்தீபன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், திண்டிவனம் மாவட்டத் தலைவர் கந்தசாமி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், செந்துறை மதியழகன், அரும்பாக்கம் தாமோதரன், மாவட்ட ப.க. செயலாளர் பழனி மெர்சி ஆஞ்சலாமேரி, விருத்தாசலம் மாவட்ட ப.க. செயலாளர் தே.சுதாகர், தஞ்சை யோவான்குமார், குமார் விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடராசா, திண்டிவனம் தம்பிபிரபா கரன், சென்னை சண்முகப்பிரியன், செல் வேந்திரன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் கணேசன், விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் மணி, நாகை திலீபன் சக்ரவர்த்தி, சுரேஷ், வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பரசன், அமைப்பாளர் தயாளன், செந்துறை அறிவன், மத்தூர் இராமஜெயம், தாம்பரம் மாவட்ட இளை ஞரணி செயலாளர் சட்டநாதன், மரக் காணம் அம்சராஜ், திண்டிவனம் தமிழரசு, வடசென்னை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பகலவன், விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், அருப்புக்கோட்டை பெரியார் செல்வம், மரக்காணம் மதிவாணன், விருத்தாசலம், சந்துரு, வீரமுத்து, தீபக்குமார், கல்லக்குறிச்சி சபரிநாதன், விழுப்புரம் கோதண்டராமன், கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழக செயலாளர் இராமராஜ், அசோக் நகர் அகிலன், விருத்தாசலம் வெங்கடேசன், காஞ்சீபுரம் தனுஷ், திருநாவுக்கரசு, குரோம்பேட்டை இனியரசன், தென் சென்னை தாஸ், ஆவடி சரவணன், பெரியார் திடல் கலைமணி, தெய்வசிகாமணி, இன்பரசன், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் பால சுப்பிர மணியன், புழல் அறிவுமானன், வாதுர் அன்பரசன், அர்ச்சுனன், ரேகா உள்பட 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற் றனர்.

நிறைவாக மாநில மாணவர் கழக கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி நன்றி கூறினார்.

திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்


திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: சு.இராஜ்மோகன் வேலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: ந.கண்ணன் (குடியாத்தம்)

அரியலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர்: பொன்.செந்தில்குமார் (செந் துறை) சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்:  சோ.சுரேஷ் அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.அறிவன் (செந்துறை)

வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்: பொ.தயாளன் (காங்கேயநல்லூர்)

மதுரை புறநகர் மாவட்ட இளை ஞரணித் தலைவர்: பா.முத்துக்கருப்பன் (திருமங்கலம்), மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: இரா.பிரபாகரன் (கூடல்நகர்)

காரைக்கால் மண்டல இளைஞரணித் தலைவர்: நாத்திக.பொன்முடி, காரைக்கால் மண்டல இளைஞரணிச் செயலாளர்: கோ.மு.பெரியார்கணபதி

சோழிங்கநல்லூர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: எம்.நித்தியானந்தம் (கேளம்பாக்கம்)

திருவொற்றியூர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர்: சதீஷ் (திருவொற்றியூர்), திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: திலீபன் (திருவொற்றியூர்)

நாகை மாவட்டம்


நாகை மாவட்ட இளைஞரணித் தலை வர்: வெ.தீபன்சக்ரவர்த்தி, நாகை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: பா.பாலாஜி, நாகை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்: கி.சுரேஷ், நாகை மாவட்ட இளை ஞரணித் துணைத்தலைவர்: கா.குமரேசன், நாகை மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர்: இரா.இரமேஷ்

சேலம் மாவட்டம்


ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செய லாளர்: ப.வேல்முருகன்

திண்டிவனம் மாவட்டம்


திண்டிவனம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: ச.செந்தில்

மரக்காணம் வட்டத் தலைவர்: தெ.ஜெகதீசன், மரக்காணம் வட்டச் செயலாளர்: வா.மதிவாணன், மரக்காணம் நகர செயலாளர்: லிகோரி சுரேஷ் வர்சைல், மரக்காணம் நகர அமைப்பாளர்: கா.அம்ச ராஜ், மரக்காணம் நகர துணைத் தலைவர்: பா.மணிகண்டன்

வானூர் வட்டத் தலைவர்: சிவ.கவுரி சிறீதர், வானூர் வட்ட அமைப்பாளர்: மாரிமுத்து

ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தேவராஜ்

ஈரோடு மாவட்டம்


பவானி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்: தே.தேவேந்திரன்

தென்சென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: சி.மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: ந.மணித்துரை, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்: இரா.கதிரவன்.

திருவள்ளூர் மாவட்டம்


மாவட்ட இளைஞரணி தலைவர்: விஸ்வாகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்: மு.ராக்கி

வடசென்னை மாவட்டம்


மாவட்ட இளைஞரணி செயலாளர்: அ.தமிழ்ச்செல்வன் (எருக்கஞ்சேரி), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: கோ.பகலவன்

ஆவடி மாவட்டம்


மாவட்ட இளைஞரணித் தலைவர்: வெ.கார்வேந்தன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.கலைமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: சே.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்: இரா.கலை வேந்தன்.

- விடுதலை நாளேடு, 4.11.18

சென்னை இளைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் இலட்சிய முழக்கம்

2019 பிப்ரவரியில் தஞ்சையில் மாநாடு; மார்ச்சில் அம்மா நூற்றாண்டு


* 2019 செப்டம்பரில் பெரியார் பன்னாட்டு மாநாடு சிகாகோவில்!


* நாடெங்கும் பயிற்சிப் பட்டறைகள் - நூல்கள் பரப்புதல் நடக்கட்டும்!


எனக்குப் பிறந்த நாள் விழா வேண்டாம் -


விடுதலை சந்தாக்களை வாரி வழங்குவீர்!


விஞ்ஞான பூர்வமான நமது இயக்கமே வெற்றி பெறும்!


சென்னை இளைஞரணி கலந்துரையாடலில் தமிழர் தலைவர் இலட்சிய முழக்கம்


நமது சிறப்புச் செய்தியாளர்




சென்னை, நவ.4 எனக்குப் பிறந்த நாள் விழா வேண்டாம்; அதற்குப் பதிலாக இலட்சிய போர்வாளாம் விடுதலை' சந்தாக்களை வாரி வழங்குவீர் என்று வேண்டுகோள் வைத்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2019-2020 ஆம் ஆண்டுக்கான கழக வேலைத் திட்டங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.

சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று முற்பகல் (3.11.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய இலட்சிய முழக்க உரை வருமாறு:

இளைஞர்களின் மாநிலம் தழுவிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைக்காமலேயே இடைச்செருகலாக நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் உணர்ச்சியை நேரில் கண்டு உணர்ச்சி பெற வந்திருக்கிறேன். உங்கள் உற்சாகம் கண்டு நான் உற்சாகம் பெறுகிறேன்.

இளைஞரணி எழுச்சி பெற்றுள்ளது


இளைஞரணியினர் பணி எழுச்சி பெற்று இருப்பதைக் கண்டு இறும்பூதெய்துகிறேன்.

ஊருக்கு நான்கு பேர் இருப்பார்கள் இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் என்று பொதுவாக சொன்னதெல்லாம் ஒரு காலம்.

இளைஞரணி என்பது போன்ற அமைப்புகள் இயக்கத்தில் முன்பு இல்லை. இப்பொழுது அந்த அணி அரிமாவாக இயக்கத்தின் ஆற்றல் படைத்த பெரும் சக்தியாக உருவெடுத்து இருப்பது - புதிய திருப்பமாகும்!

பிறந்த நாள் விழா வேண்டாம் -


விடுதலை' சந்தா தாரீர்!


எனது பிறந்த நாள் என்று கூறி, அதற்காக எந்தவித விழாவும் வேண்டாம். ஆர்ப்பாட்டம் வேண்டாம்.

முக்கியமாக இதைச் சொல்லுவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

அதற்குப் பதிலாக விடுதலை' சந்தாக்களை அள்ளித் தாருங்கள். விடுதலை' பரவினால்தான் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் - இலட்சிய உணர்வை இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஊட்டும்!

உலகிலேயே ஒரே நாத்திக நாளேடு


உலகிலேயே ஒரு நாத்திக ஏடு என்பது விடுதலை' மட்டும்தான். 83 ஆண்டுகளாக வீறு நடை போடுகிறது என்றால், அது நமது விடுதலை' எனும் போர்வாள்தான்.

சினிமா இல்லை, விளம்பரம் இல்லை. எல்லாம் எதிர்நீச்சல்தான். விடுதலை'யின் எதிர்நீச்சலில் விளைந்தவைதான் இந்த இனத்திற்குக் கிடைத்திருக்கும் உரிமைகளும், பலன்களும்!

இந்த இயக்கத்தில் இல்லாமல் அரசியலுக்கு நான் சென்றிருந்தால்...


பத்து வயதில் இந்த இயக்கத்தில் காலடி எடுத்து வைத்தேன். 75 ஆண்டுகால வாழ்க்கை இந்த இயக்கத்தோடு எனது வாழ்க்கை! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இயக்கத்தில் இருப்பதற்காக யாரையும்விட அதிக மன நிறைவு உள்ளவனாக இருக்கிறேன்.


அய்யா தேடி வைத்த கொள்கை சொத்தே நமது மாபெரும் பலம்.


இந்த இயக்கத்தில் இல்லாமல் அரசியலுக்குச் சென்றிருந்தால், என்ன கிடைக்கும்? அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - அமைச்சர் பதவி கிடைத்தால், சிறைவாசமும் கிடைக்கும்.


நாமும் சிறைக்குச் சென்றவர்கள்தான் - இனியும், செல்லக்கூடியவர்கள்தான் - அது இலட்சியத்திற்காக!


- இளைஞரணி கலந்துரையாடலில்  கழகத் தலைவர்

சால்வை வேண்டாம் - சந்தா வேண்டும்!


சால்வை வேண்டாம், ஆடைகள் வேண்டாம் - மக்களுக்கு விடுதலை தரும்  விடுதலை' சந்தாவை வழங்குங்கள் - விடுதலை' வளர்ச்சி நிதியை அளியுங்கள். நமது இயக்க வெளியீடுகளை, நூல்களைப் பரப்புங்கள்.

இளைஞரணியினர் இலக்கையும் தாண்டி உண்மை'க்கான சந்தாக்களை அளித்துள்ளீர்கள் - பாராட்டுகிறேன். அதேபோல, விடுதலை' சந்தாக்களையும் வழங்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் - அந்த நம்பிக்கை எனக்குண்டு.

நமது விடுதலை' ஏட்டுக்குள்ள தனிச் சிறப்பு - ஓர் ஏட்டை குறைந்தபட்சம் பத்து பேர் படிப்பார்கள். புதுப் பாதை வகுக்கும் போர்வாள் விடுதலை' வீட்டுக்கு வீடு செல்லும் ஒரு நிலையை உருவாக்குவோம்! உறுதி எடுப்போம்!!

பிப்ரவரியில் மாநில மாநாடு


வரும் 2019 ஆம் ஆண்டு - இயக்கத்தில் புதுத் திருப்பம் தரும் ஆண்டாக அமையப் போகிறது - அமையவும் வேண்டும்.

பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - திராவிடர் கழகத்தின் பவள விழா ஆண்டில் திராவிடர் கழக மாநில மாநாடு என்பதை நினையுங்கள். இதன் முக்கியத்துவத்தை உணருங்கள் - நாளை முதல் சுவர் எழுத்துப் பணிகள் தொடங்கப்படட்டும் - அதன்மூலம் புதிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கவேண்டும்.

மாநாட்டையொட்டி அந்த இளைஞரணி பேரணி!




மாநாட்டையொட்டி நடத்தப்படவிருக்கும் பேரணி என்பது இயக்கத்தின் வளர்ச்சியை - எழுச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையவேண்டும். இளைஞரணி பேரணியாக, எழுச்சிப் பேரணியாக சீருடையுடன் தஞ்சை மண்ணைக் குலுக்கவேண்டும். நமது இயக்கத்தையும் தாண்டிய இளைஞர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை உருவாக்கவேண்டும். காவி மண்ணாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவோரின் எண்ணங்கள் கருச்சிதைவு ஆகும் வகையில் கருப்புச் சட்டை மாக்கடலாக அந்தப் பேரணியும், மாநாடும் அமையவேண்டும்.

இது பெரியார் மண்தான் என்பதைத் தஞ்சையில் நிரூபித்துக் காட்டுவோம் - இப்பொழுது முதலே அதை நோக்கி நமது சிந்தனையும், செயல்பாடும் அமைய வேண்டும்.

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அணிவகுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.

குடந்தையை விஞ்சியதாக தஞ்சை அமைய வேண்டும்.

பிப்ரவரியில் மாநில மாநாடு என்றால், மார்ச் மாதம் நமது அன்னையார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கம்.

தந்தை பெரியார் 141 ஆம் ஆண்டு - செப்டம்பரில் அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மாநாடு


அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 - தந்தை பெரியார் அவர்களின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் - அமெரிக்காவில் சிகாகோவில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பன்னாட்டு மாநாடாக அமையும். அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

இதற்கிடையே பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். குற்றாலத்தில் 4 நாள்கள் என்றால், ஒகேனக்கல்லில் மூன்று நாள்கள் - இது எல்லா மாவட்டங்களிலும் சனி, ஞாயிறுகளில் நடத்திடத் திட்டமிடல் வேண்டும்.

நூல்கள் பரவல்


ஏராளமான நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறோம். அது இளைஞர்களின் கைகளுக்குச் சென்றடையவேண்டும். கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்து நூல்களை அறிமுகப்படுத்திட வேண்டும்.

2019 - நாடாளுமன்றத் தேர்தலில் நமது பணி


2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரு கிறது. தேர்தலில் போட்டியிடுவோரைவிட, தேர்தலில் போட்டியிடாத நமக்குத்தான் பொறுப்பு அதிகம்.

2014 இல் நடைபெற்ற தேர்தலின்போது, பி.ஜே.பி. பற்றியும், அதன் கொள்கைகள்பற்றியும், பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்ட மோடியின் சிந்தனை, நடவடிக்கைகள், போக்குகள் குறித்தும் நாம் எடுத்து வைத்ததன் அருமையை நாட்டு மக்கள் இப்பொழுது புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

எதையும் தொலைநோக்கோடு சிந்திப்பது, தெரிவிப்பது ஈரோட்டுக் கண்ணாடி அணிந்த நமக்கே உரித்தானதாகும்.

ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் நமது குறி - நமது அணுகு முறையும்கூட!

தேர்தலில் மக்கள் மத்தியில் உண்மைகள் போய்ச் சேரவேண்டும். மதவாத ஆட்சியின் தீய விளைவுகளை எடுத்துரைக்கவேண்டும் - அதில் விடுதலை'க்கு முக்கிய இடம் உண்டு.

போட்டியிருக்கட்டும் - பொறாமை வேண்டாம்!


அருமை இளைஞர்களே, இளைஞர்கள் மத்தியிலே போட்டி இருக்கவேண்டும் - போட்டி என்பது பொறாமையல்ல - ஆரோக்கியமானது. இயக்க வளர்ச்சியில், ஏடுகளைப் பரப்புவதில் அந்தப் போட்டி இருக்கவேண்டும் - தேவையானதும்கூட!

சமூக வலை தளம் - புதிய யுக்திகள் தேவை!


சமூக வலை தளம் என்பது இந்தக் காலகட்டத்தில் முக்கியமான பிரச்சார கருவியாக அமைந்துவிட்டது. அதிலும் நமது இளைஞர்கள் பங்கேற்கவேண்டும். வீண் சொல்லாடல்கள், தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. விடுதலை'யைப் படித்து அதன் அடிப்படையில் கருத்துகளை எடுத்துக் கூறவேண்டும்.

கடைசிவரை இளைஞர்கள் இயக்கத்தில் தொடர்வதுபற்றி...


பொதுவாக இளைஞர்கள் கடைசிவரை இயக்கத்தில் தொடருவது இல்லை என்ற குறைபாடு உண்டு. அரசியல் அபிலாசைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். இலட்சியபூர்வமாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. அது காலத்தால் போற்றப்படக்கூடியது.

அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படும் நிலையில், நாம் அடுத்த தலை முறையைப்பற்றிக் கவலைப்படுகிறோம். தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடிய நிலையில், இந்தக் காலகட்டத்தில் நம் இயக்க செயல்முறைகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

தந்தை பெரியார் மறைந்தாலும் - அவர்தம் பணியை முடித்துக் காட்டியுள்ளோம்!


தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய சென்னை தியாகராயர் நகர் பொதுக்கூட்டத்தில் (19.12.1973) நம் இன இழிவைப்பற்றி எடுத்துரைத்தார். உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டு சாகப் போகிறேனே என்று சங்கநாதம் செய்தார்.

அய்யா அவர்கள் கூறிய அந்த சூத்திர இழிவு ஒழிப்புப் போராட்டத்தில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றோமா, இல்லையா?

தந்தை பெரியார் காலத்தில்கூட பிற்படுத்தப்பட்டோர் பெற்றிடாத - மத்திய அரசு துறைகளில் இட ஒதுக்கீடு என்ற உரிமையை ஈட்டியிருக்கிறோமா இல்லையா?

அன்றைக்குத் தந்தை பெரியார் கூறியபோது சீறிப் பாய்ந்த பெண்ணுரிமைக் கருத்துகளை இன்றைக்கு உச்சநீதிமன்றமே தீர்ப்பாக சொல்லும் நிலையல்லவா ஏற்பட்டுள்ளது.

நாம் பெறும் நிம்மதி!


பசி எடுத்த நிலையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது. படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கிடவேண்டும். அந்த ஆரோக்கியமும், நிம்மதியும், மனநிறைவும் இந்த இயக்கத்தின் கொள்கைகள்மூலம் நமக்குக் கிடைக்கிறது.

பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி. சிக்கனம், எளிமை, நேர்மை என்பதுதான் நமது வாழ்க்கைப் பாதை.

நம் கொள்கைகள் - விஞ்ஞானபூர்வமானவை - எனவே வெற்றி பெறும்!


விஞ்ஞானத்தின்முன் அஞ்ஞானம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. நமது கொள்கை விஞ்ஞான பார்வை கொண்டது. எனவே, வெற்றியேயன்றி நமக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை

கொள்கையும் - ஒழுக்கமும்!


கொள்கையில் எப்படி உறுதியுண்டோ, அதைப் போல ஒழுக்கத்தில் நாம்  தவறக்கூடாது. நமது மாநாடுகளில்தான் பெண்களுக்குத் தனி இடம் என்று கிடையாது. குடும்பம் குடும்பமாக அமர்ந்து மாநாட்டில் பங்கேற்கக் கூடிய ஒப்பற்ற உன்னத இயக்கம் இந்த இலட்சியப் பாசறை!

மீ டூ' இங்கே கிடையாது!


மீ டூ'' என்பதெல்லாம் இங்கு கிடையாது - அதற்கு இடமும் இல்லை.

பெண்ணைப் பாலியல் பண்டமாகப் பார்க்காதே என்ற கருத்தை மக்கள் மத்தியில் சொன்னவர் தந்தை பெரியார்!

அந்தக் கருத்து எந்த அளவுக்குப் பரவுகிறதோ - மக்கள் மத்தியில் அந்த எண்ணம் எந்த அளவுக்கு உருவாகிறதோ - அப்பொழுதுதான் மீ டூ'' கள் ஒழியும்.

இளைஞரணிக்குப் பாராட்டும் - வாழ்த்தும்!


நமது அடுத்த பயணம் மாநில மாநாட்டை நோக்கி இருக்கட்டும்! மாநாட்டுக்கு ஓர் இலச்சினையை உருவாக்கும் எண்ணம் இருக்கிறது. அதுவும் விரைவில் அறிவிக்கப்படும்.

இளைஞரணி தோழர்களுக்குப் பாராட்டும், வாழ்த்துகளும் என்று உரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

- விடுதலை நாளேடு, 4.11.18