ஞாயிறு, 6 டிசம்பர், 2015

தென் சென்னை திராவிடர் கழகத்தின் துயர்துடைப்பு பணி

தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில்  துயர்துடைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

 6.12.15 அன்று மாலை பட்டிணப்பாக்கம்,நொச்சி நகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோடுக்கு வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன்,செய.குசேலன்,ச.துணைவேந்தன் ஆகியோர் உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில்,பிஸ்கேட் பொட்டலம், புடவை போன்றவற்றை வழங்கினர்.. 






வியாழன், 3 டிசம்பர், 2015

தென் சென்னை திராவிடர் கழகத்தின் துயர் துடைப்புப் பணிகள்!

தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு மயிலாப்பூர் பகுதியில் வழங்கப்பட்டது.
 
  மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை சாவித்திரி அம்மாள் மேல்நிலை பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், அங்கு3.12.15 நண்பகல் சென்று வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில் உணவு பொட்டலம், தண்ணீர் வழங்கப்பட்டது. 
















திங்கள், 30 நவம்பர், 2015

ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!
சென்னை, நவ.30_ முது பெரும் பெரியார் தொண் டர் ஆலந்தூர் செ.இராமச் சந்திரன் நேற்று (29.11.2015) தமது 95 ஆம் வயதில் கால மானார். அவருடைய மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்இன்று (30.11.2015) காலை 9.30 மணியளவில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்மற் றும் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
கழகத்தலை வருடைய இரங்கல் உரையை கூடியிருந்த தோழர்களுக்கும், பொது மக்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் வழங் கப்பட்டதோடு, அந்த உரையை கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் வாசித் தார்.
சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி அவர்களின் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற் றினார். தமதுரையில், இந்த ஆலந்தூர் பகுதியில் கட வுள் ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் காலத்தில் நடத்திக் காட் டியவர் மறைந்த ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் அவர்கள் என்றும், இறுதி நாள்களில் தன்னை வந்து சந்திக்கும்போதெல்லாம் அவர் தனது மகனின் துணையோடு வருவார்;
அப்பொழுதெல்லாம் நான் அவருடைய மகனிடம் பத் திரமாக அழைத்துச் செல் லுங்கள் என்று கூறுவேன். அந்த அளவிற்கு நம்மீதும், இயக்கத்தின்மீதும் பற்றுக் கொண்டவர். அவருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச் சியை பெரிய அளவில் மிகச் சிறப்பாக ஆலந்தூர் பகுதியில் நடத்துவோம் என்றும், அவருடைய இழப்பு அவருடைய குடும் பத்தினரைவிட கழகத்திற் குப் பெரிய இழப்பு என் றும், கழகத் தலைவர் தமது இரங்கல் உரையில் குறிப் பிட்டார்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டத் தலை வர் ப.முத்தையன், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.பி. பாலு, ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோரும் இரங்கல் உரையாற்றினர்.
பின்னர் தமிழர் தலை வர் அவரது குடும்பத்து உறுப்பின ர்களுக்கெல்லாம் தமது இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்தார்.
இறுதியாக, ஆர்.டி.வீர பத்திரன், வீர வணக்கம், வீர வணக்கம் என்று கூற, கழகத் தலைவரோடு அங் கிருந்த அனைவரும் வீர வணக்கம், வீர வணக்கம் ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு வீர வணக்கம் என்று கூறி, 95 வயதுவரை தந்தை பெரியாரையும், தமி ழர் தலைவரின் தலைமை யேற்று எந்தவித சபலத் துக்கும் ஆளாகாமல், தமது இறுதி மூச்சுவரை கழகத் துக்காகவே தன்னை அர்ப் பணித்துக் கொண்ட பெரி யார் பெருந்தொண்டர் ஆலந்  தூர் செ.இராமச்சந்திரன் இறுதிப் பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ப.முத் தையன், தி.இர.இரத்தின சாமி, ஆர்.டி.வீரபத்திரன், கோ.நாத்திகன், மடிப்பாக் கம் ஜெயராமன், எம்.பி. பாலு, தாம்பரம் மோகன், தமிழ் இனியன், வேளச்சேரி ஜீவானந்தம், விஜயநாதன், இசையின்பன், நாகரத்தி னம், இராமலிங்கம், சேது ராமன், கார்த்திகேயன், மோகன் மற்றும் அனைத் துக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி. குணாளன், தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என். சந்திரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு
நமது வீரவணக்கம்!

ஆலந்தூர் திராவிடர் கழகத்தில் மிக நீண்ட காலமாக தொண்டாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமச்சந்திரன் அவர்கள் தமது 95 ஆம் வயதில் இயற்கை எய்தினார் என்பது நமக்கு மிகுந்த துயரத்தையும் சோகத்தையும் தரும் வேதனைச் செய்தியாகும்.
அய்யா இராமச்சந்திரன் அவர்கள் இரயில் வேத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கருஞ்சட்டை வீரர் ஆவார்.
வடசென்னை புதுவண்ணையில் தோழர் பலராமன் அவர்கள் எப்படி ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுப் பணியாற்றினாரோ, அதுபோல இவர் தென்சென்னைப் பகுதியில் கழகப் பணியாற்றியவர். எந்த நிலையிலும் கட்டுப்பாடு காக்கத் தவறாத லட்சியத் தோழர் அவர்.
தமது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தவறாது பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து, கழகத்திற்கு நிதி அளித்து, நமது நலம் விசாரித்துத் திரும்புவார். அவரது மகன் அவர்கள் உதவியோடு  வந்து சந்திக்கத் தவறவேமாட்டார்.
பல ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர் புதுடில்லி பெரியார் மய்யத்  திறப்பு விழாவிற்கு (15ஆண்டுகளுக்கு முன்பு) வந்து கலந்து கொண்ட இவரிடம் டில்லி ஆங்கில ஏட்டின் செய்தியாளர் பேட்டி கண்டு கருஞ்சட்டைச் சேனை எப்படி எளிமையும், கட்டுப்பாடும் கொண்டதாக திராவிடர் கழகத்தில் உருவாகியுள்ளது என்று டில்லி நாளேட்டில் கட்டுரைகள் தீட்டப்பட்டன.
நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர் என்றாலும் ஒரு சுயமரியாதைக்காரரின் இழப்பு ஒரு விஞ்ஞானியின் இழப்புப் போன்றதல்லவா?
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
30.11.2015
-விடுதலை,30.11.15

சனி, 28 நவம்பர், 2015

வருந்துகிறோம்

வருந்துகிறோம்
தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் 26.11.2015 நண்பகல் 1 மணியவில் மாரடைப்பால் காலமானார் (வயது 63). அசோக் லைலேண்டு தொழிற் சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தார். அவரது துணைவர் ந.பத்மாவதி அவர்களும் குடும்பத்தினரும் எந்தவிதச் சடங்கும் இன்றி இறுதி நிகழ்ச்சியை நடத்தினர்.
மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மாவட்டத்தலைவர் இரா.வில்வ நாதன், தொழிலாளரணி பொறுப்பாளர் பெ.செல்வராஜ், நுங்கம்பாக்கம் பகுதி செயலாளர் க.வெற்றிவீரன், தரமணி கோ.மஞ்சநாதன், தமிழ்இனியன், மதிவாணன், பகுதி திமுக பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மா.நடராசன் அவர்கள் வீட்டிற்குச் சென்று இரங்கல் கூறினார்.
-விடுதலை,28.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!



இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மக்கள் கலையரசி மனோரமா உடலுக்குஇறுதி மரியாதை


மக்கள் கலையரசி மனோரமா உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், முரளி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
-விடுதலை,12.10.15

சனி, 14 நவம்பர், 2015

தோழர் திருமகள் மறைந்தாரே!


நமது வீர வணக்கம்!
பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலையத்தின் இயக்கு நரும், பெரியார் பேரு ரையாளர் இறையன் அவர்களது வாழ்வி ணையரும்,  கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினரும்,
திராவிடர் கழக மகளி ரணியின் மூத்த பொறுப்பாளருமான மானமிகு திருமகள் இறையன் (வயது 77) அவர்கள் இன்று விடியற்காலை (14.11.2015) 2.30 மணிக்குக் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், சொல்லொணா சோகத்தையும் இயக்கத்தவர் அனைவருக்கும், குறிப்பாக நமக்கும் அளித் துள்ள ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
திருமகள் அம்மா அவர்கள் ஆசிரியையாகப் பணியாற்றி, ஆசிரியர் இறையன் அவர்களை ஜாதி மறுப்புத் திருமணம், பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துகொண்டு, உறவினர்கள், ஜாதிக் காரர்கள் விரோதத்தினைப் பொருட்படுத்தாமல், பெரியார் தொண்டர்களாகவே இருவரும் கொள்கை வாழ்வு வாழ்ந்தனர் - இறுதிவரை!
முழுநேர இயக்கப் பணியை, பணி ஓய்வு பெற்ற பிறகும் இறையனார் அவர்கள் தொடர்ந் ததைப் போலவே, திருமகள் அம்மா அவர்களும் பணி ஓய்வுக்குப் பிறகும் அலுப்பு சலிப்பின்றி பெரியார் திடலிலேயே தங்கி, குடும்பத்துடன் இயக்கப் பணி செய்த ஓர் வீராங்கனையாவார். இயக்கம் நடத்திய அத்துணைப் போராட்டங் களிலும் முன் நிற்க, அவர்கள் தயங்கியதே இல்லை, பிள்ளைகளோடு வருவார்கள்.
அவர் இல்லத்தில் நடைபெற்ற அத்துணைத் திருமணங்களும், ஜாதி மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளாகவே நடத்தப்படுதல் வேண்டும் என்பதில் அம்மையார் மிகவும் குறியாய் இருந்தவர்.
சிறிது காலமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்த அவருக்குத் தேவையான அத்துணை சிகிச்சைகளும் தரப்பட்டன; என்றாலும், ‘இயற் கையின் கோணல் புத்தி’ அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட கொடுமைக்கு ஆளாக்கிவிட்டது!
பெரியார் திடலில் எமக்கு உதவிய முது பெரும் தோழர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றதை எண்ணும்போது நமக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதற்கு எவரே உள்ளார்?
என்றாலும், பெரியாரின் பெரும்பணி தடை யின்றி தொடர, நாம் துயரத்தை மறந்து, தொண் டூழியத்தைத் தொடர்ந்து, இறையன் களின் இதய வேட்கையைப் பூர்த்தி செய்வதே நாம் அவருக்குக் காட்டும் உண்மையான, சரியான மரியாதை ஆகும்!
வீராங்கனை திருமகளுக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கம்!
அவரது குடும்பத்தவர் அனைவருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை    தலைவர்
14.11.2015    திராவிடர் கழகம்.


கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன் அவர்களின் உடலுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மோகனா வீரமணி, வெற்றிச்செல்வி, கு.தங்கமணி, பேராசிரியை இசையமுது, டாக்டர் தேனருவி மற்றும் பலர் உள்ளனர் (சென்னை, 14.11.2015)
திருமகள் இறையன் அவர்களின் மறைவிற்காக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், கழக மகளிரணியினர், தோழர்கள் (சென்னை, 14.11.2015)

சென்னை, நவ.14_ பெரியார் பேருரையாளர் இறையனாரின் வாழ் விணையரும், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்கு நருமாகிய திருமகள் இறையன்  இன்று (14.11.2015) அதி காலை 2.30 மணி யளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது மறைவை யொட்டி, சென்னை பெரி யார் திடலில் பெரியார் நினைவிட முகப்பில் வீர வணக்க இரங்கல் கூட்டத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று இரங்கல் உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத் தணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திராவிடர் கழக வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன், தலை மைச் செயற்குழு உறுப்பி னர்கள் க.பார்வதி, சாமி. திராவிடமணி, மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் டெய்சி மணி யம்மை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண் ணன், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் முனை வர் செகதீசன், புதுமை இலக்கியத் தென்றல் வழக் குரைஞர் ஆ.வீர மர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், பாவலர் மறைமலையான், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர் செல்வம்,  உள்பட பலரும் இரங்கல் உரையாற்றி னார்கள்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  மாநில  மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார்,  ஊடகவி யலாளர் கோவி.லெனின், எழுத்தாளர் வே.மதிமாறன், திமுக மேனாள் மேயர் சா.கணேசன், மோகனா அம்மையார், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் தங்கமணி குண சீலன், சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் தமிழன் பிர சன்னா, மு.கலைவாணன்,  பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை வீரபத்திரன்,  பெரியார் புத்தக நிலைய மே லாளர் த.க.நடராசன், குஞ் சிதம் நடராசன், ச.சிங்காரம், வே.சிறீதர், திராவிடர் இயக்க எழுத் தாளர் மஞ்சை வசந்தன், வடசேரி மீரா செகதீசன், வழக்குரை ஞர் செ.துரை சாமி, அகில இந்திய பிற் படுத்தப்பட்ட வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் கோ. கருணாநிதி,   வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளி வண்ணன், வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் கோ.வி.கோபால்,  செய லாளர் ஆ.வெங்கடேசன், திருவொற்றியூர் கணேசன், சைதை மதியழகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், பொழிசை கண்ணன், புழல் ஏழுமலை, புழல் இராசேந் திரன், சா.தாமோதரன், பாலமுரளி, சைதை தென் றல், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, வழக்குரை ஞர் ம.வீ.அருள்மொழி,  திருப்பூர் ஆசிரியை பாலா மணி, ரத்தினாவதி, சந்திரா முனுசாமி, வளர்மதி, பவானி, செந்தமிழ் செல்வி, ஆவடி மோகனப்ரியா, கோ.நாத்திகன், மறை மலைநகர் துரை.முத்து, சிவக்குமார், கருணாகரன், பேராசிரியை இசையமுது, இராஜதுரை,  மருத்து வர்கள் மீனாம்பாள், தேன ருவி, யுனைடெட் இந்தியா காப்பீட்டுக்கழக இரா மலிங்கம், செங்கல்பட்டு நகர தலைவர் சுந்தரம், மஞ்சுளா, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணசிங், பெரி யார் நூலக ஆய்வக நூல கர் கோவிந்தன், செஞ்சி ந.கதிரவன், உடுமலை வடி வேல் உள்பட ஏராள மான வர்கள் பெரியார் திடலில் மறைந்த திருமகள் அமமை யாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெரியார் மணியம்மை மருத்துவ மனை, விடுதலை செய்திப் பிரிவு, அச்சகப்பிரிவு, பெரி யார் புத்தக நிலையம் உள் ளிட்ட பல்வேறு பிரிவு களில் பணியாற்றும் பெரி யார் திடல் பணி யாளர்கள் உள்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். திருமகள் இறையனார் குடும்பத்தினர் பண்பொளி கண்ணப்பன், இறைவி நயினார், மாட்சி ராம மூர்த்தி, இசையின்பன் பசும்பொன், செல்வி பெரி யார் மாணாக்கன் உள் ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலைத் தெரி வித்துக் கொண்டார்கள்.

தொலைபேசி வாயிலாக கழகப் பொருளாளர் மருத் துவர் பிறைநுதல்செல்வி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணை வேந்தர் நல்.இராமச்சந் திரன்,  மாநில மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, திராவிட தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், பெண்ணியலாளர் ஓவியா, குவைத் உலகத் தலைவர் தந்தை பெரியார் நூலகம் சார்பில் செல்லப் பெருமாள், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், வட மாவட் டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேக ரன் ஆகியோர் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.
-விடுதலை,14.11.15