முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!
ஆலந்தூர் இராமச்சந்திரனுக்கு வீர வணக்கம்!
சென்னை, நவ.30_ முது பெரும் பெரியார் தொண் டர் ஆலந்தூர் செ.இராமச் சந்திரன் நேற்று (29.11.2015) தமது 95 ஆம் வயதில் கால மானார். அவருடைய மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்இன்று (30.11.2015) காலை 9.30 மணியளவில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்மற் றும் கழகத் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
கழகத்தலை வருடைய இரங்கல் உரையை கூடியிருந்த தோழர்களுக்கும், பொது மக்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் வழங் கப்பட்டதோடு, அந்த உரையை கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் வாசித் தார்.
சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தின சாமி அவர்களின் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற் றினார். தமதுரையில், இந்த ஆலந்தூர் பகுதியில் கட வுள் ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் காலத்தில் நடத்திக் காட் டியவர் மறைந்த ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் அவர்கள் என்றும், இறுதி நாள்களில் தன்னை வந்து சந்திக்கும்போதெல்லாம் அவர் தனது மகனின் துணையோடு வருவார்;
அப்பொழுதெல்லாம் நான் அவருடைய மகனிடம் பத் திரமாக அழைத்துச் செல் லுங்கள் என்று கூறுவேன். அந்த அளவிற்கு நம்மீதும், இயக்கத்தின்மீதும் பற்றுக் கொண்டவர். அவருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச் சியை பெரிய அளவில் மிகச் சிறப்பாக ஆலந்தூர் பகுதியில் நடத்துவோம் என்றும், அவருடைய இழப்பு அவருடைய குடும் பத்தினரைவிட கழகத்திற் குப் பெரிய இழப்பு என் றும், கழகத் தலைவர் தமது இரங்கல் உரையில் குறிப் பிட்டார்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டலத் தலை வர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டத் தலை வர் ப.முத்தையன், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.பி. பாலு, ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோரும் இரங்கல் உரையாற்றினர்.
பின்னர் தமிழர் தலை வர் அவரது குடும்பத்து உறுப்பின ர்களுக்கெல்லாம் தமது இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்தார்.
இறுதியாக, ஆர்.டி.வீர பத்திரன், வீர வணக்கம், வீர வணக்கம் என்று கூற, கழகத் தலைவரோடு அங் கிருந்த அனைவரும் வீர வணக்கம், வீர வணக்கம் ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு வீர வணக்கம் என்று கூறி, 95 வயதுவரை தந்தை பெரியாரையும், தமி ழர் தலைவரின் தலைமை யேற்று எந்தவித சபலத் துக்கும் ஆளாகாமல், தமது இறுதி மூச்சுவரை கழகத் துக்காகவே தன்னை அர்ப் பணித்துக் கொண்ட பெரி யார் பெருந்தொண்டர் ஆலந் தூர் செ.இராமச்சந்திரன் இறுதிப் பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ப.முத் தையன், தி.இர.இரத்தின சாமி, ஆர்.டி.வீரபத்திரன், கோ.நாத்திகன், மடிப்பாக் கம் ஜெயராமன், எம்.பி. பாலு, தாம்பரம் மோகன், தமிழ் இனியன், வேளச்சேரி ஜீவானந்தம், விஜயநாதன், இசையின்பன், நாகரத்தி னம், இராமலிங்கம், சேது ராமன், கார்த்திகேயன், மோகன் மற்றும் அனைத் துக் கட்சித் தோழர்களும் கலந்துகொண்டனர்.
முன்னதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி. குணாளன், தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என். சந்திரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஆலந்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு
நமது வீரவணக்கம்!
ஆலந்தூர் திராவிடர் கழகத்தில் மிக நீண்ட காலமாக தொண்டாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமச்சந்திரன் அவர்கள் தமது 95 ஆம் வயதில் இயற்கை எய்தினார் என்பது நமக்கு மிகுந்த துயரத்தையும் சோகத்தையும் தரும் வேதனைச் செய்தியாகும்.
அய்யா இராமச்சந்திரன் அவர்கள் இரயில் வேத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கருஞ்சட்டை வீரர் ஆவார்.
வடசென்னை புதுவண்ணையில் தோழர் பலராமன் அவர்கள் எப்படி ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுப் பணியாற்றினாரோ, அதுபோல இவர் தென்சென்னைப் பகுதியில் கழகப் பணியாற்றியவர். எந்த நிலையிலும் கட்டுப்பாடு காக்கத் தவறாத லட்சியத் தோழர் அவர்.
தமது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தவறாது பெரியார் திடலுக்கு வந்து நம்மைச் சந்தித்து, கழகத்திற்கு நிதி அளித்து, நமது நலம் விசாரித்துத் திரும்புவார். அவரது மகன் அவர்கள் உதவியோடு வந்து சந்திக்கத் தவறவேமாட்டார்.
பல ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர் புதுடில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவிற்கு (15ஆண்டுகளுக்கு முன்பு) வந்து கலந்து கொண்ட இவரிடம் டில்லி ஆங்கில ஏட்டின் செய்தியாளர் பேட்டி கண்டு கருஞ்சட்டைச் சேனை எப்படி எளிமையும், கட்டுப்பாடும் கொண்டதாக திராவிடர் கழகத்தில் உருவாகியுள்ளது என்று டில்லி நாளேட்டில் கட்டுரைகள் தீட்டப்பட்டன.
நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர் என்றாலும் ஒரு சுயமரியாதைக்காரரின் இழப்பு ஒரு விஞ்ஞானியின் இழப்புப் போன்றதல்லவா?
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீரவணக்கம்!
அம்முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.11.2015
30.11.2015
-விடுதலை,30.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக