புதன், 3 அக்டோபர், 2018

சென்னை மண்டல கழகக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் புதிய அறிவிப்பு

விடுதலைக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை சேகரிப்போர் பெயருக்கு முன் - முன்னொட்டாக விடுதலை என்று போட்டுக் கொள்ளலாம்

சென்னை மண்டல கழகக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் புதிய அறிவிப்பு
சென்னை, அக்.3 விடுதலை ஏட்டுக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை சேகரித்துக் கொடுப்பவர்கள் தங்கள் பெயருக்கு முன் - முன்னொட்டாக விடுதலை  என்று பொறித்துக் கொள்ளலாம் - அதற்கான சான்றினை தலைமைக் கழகம் வழங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்முடிப்பூண்டி ஆகிய கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (2.10.2018) மாலை சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

எப்பொழுதும் நடக்கும் இத்தகு கூட்டத்தை - இம்முறை ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்ற கூட்டமாக நடைபெற்றது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா. பார்த்திபன் கடவுள் மறுப்புக் கூறி,  மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் தே.செ. கோபால் வரவேற்புரையாற்றினார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன்,  செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பா.தென்னரசு, கும்முடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் ஆனந்தன், ஆவடி கழக மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் சாக்ரட்டீஸ், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், தென்சென்னை மாவட்டக் கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர்   தளபதி பாண்டியன், தோழர் க.பாலு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி, எண்ணூர் வெ.மு. மோகன், பெரியார் களம் அமைப்பின் தலைவர் இறைவி, மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவாக உரையாற்றினார்.தோழர்களின் கருத்துகள்:

(அ). விடுதலை சந்தா சேர்ப்பு (கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆகுதல்)

(ஆ). தெருமுனைக்கூட்டங்கள் நடத்துதல்.

(இ). கழகத் தலைவரை அழைத்து சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக நடத்துதல்.

(ஈ). கிளைக் கழகம் தோறும் கழகக் கொடியினை ஏற்றுதல்.

(உ) ஒவ்வொரு வட்டத்திலும் முதல் கட்டமாக ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்தல்.

கழகத் தலைவர் கூறிய திட்டங்கள்:

1. மாவட்டக் கழகக் கூட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.

2. மண்டலக் கழகக் கூட்டங்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை.

3. நகர, ஒன்றிய, கழகக் கூட்டங்கள் மாதந்தோறும்.

4. கழகக் கொடிகளை ஆண்டுக்கு இருமுறை புதுப்பித்தல், கழகக் கொடி இல்லாத இடங்களில் கொடி ஏற்றுதல்.

5.  விடுதலை சந்தாக்களை தொடர்ந்து திரட்டுதல். (வீடு தோறும் விடுதலை, கடைகள் தோறும் கழக வெளியீடுகள்)

6. தெருமுனைக் கூட்டங்கள்.

7. பொதுக்கூட்டங்கள்.

8. வட்டார மாநாடுகள்.

9. தலைமைச் செயற்குழு, பொதுக்குழுவின் முடிவுகளை தீர்மானங்களைப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரக் கூட்டங்கள் வாயிலாகப் பரப்புதல்.

10. ஆண்டுக்கு இருமுறை சுயமரியாதைக் குடும்ப விருந்துகள் நடத்துதல்.

11.  கழகம் அறிவிக்கும் போராட்டங்களில் கட்டாயமாக கலந்து கொள்ளுதல்.

12. மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணிகளைப் பலப்படுத்துதல்.

13. விடுதலை உண்மை வாசகர் வட்டங்கள் அமைத்தல்.

முக்கியமான அறிவிப்பு:

விடுதலைக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை திரட்டித் தருவோர் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக விடுதலை   என்று பொறித்துக் கொள்ளலாம்.

இதில் முதல் இடத்தைப் பெறுபவர் நமது பெரியார் மாணாக்கன் ஆவார். அதற்கான சான்றினைத் தலைமைக் கழகம் வழங்கும் என்ற  விடுதலை ஆசிரியர் - திராவிடர் கழகத் தலைவரின் அறிவிப்பினைத் தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தி.சே.கணேசன் நன்றி கூறிட கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தன் பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் மாலை விருந்தளித்து உபசரித்தார்.

வடசென்னை மாவட்டம்

கீழ்ப்பாக்கம், அயன்புரம், வில்லிவாக்கம், கொளத்தூர், செம்பியம், பெரம்பூர், வியாசர்பாடி, எருக்கமாநகர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், பாரதிநகர், ஓட்டேரி, திரு.வி.க.நகர், புரசைவாக்கம், எழும்பூர், புளியந்தோப்பு, அண்ணாநகர், அமைந்தகரை, செனாய்நகர்

தலைவர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர்: தி.செ.கணேசன்

திருவொற்றியூர் மாவட்டம்

கொருக்குப்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை, ஏழுகிணறு, துறைமுகம், இரயாபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர், எண்ணூர்

தலைவர்: வெ.மு.மோகன், செயலாளர்: பா.பாலு

தாம்பரம் மாவட்டம்

தாம்பரம் நகரம், பல்லாவரம் நகரம், ஆலந்தூர் நகரம், அனகாபுத்தூர் நகரம், குன்றத்தூர் ஒன்றியம், பரங்கிமலை ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் (மறைமறை நகர் நகரியம்)

தலைவர்: ப.முத்தையன், செயலாளர்: கோ.நாத்திகன்

திருவான்மியூர் கழக மாவட்டம்

ஈசிஆர் - திருவான்மியூர் (அடையாறு, சாஸ்திரிநகர், இந்திராநகர், கஸ்தூரிபாய் நகர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈச்சம்பாக்கம், பனையூர், உத்தண்டி, கானத்தூர், கோவளம்)

(ஓம்ஆர்) ராஜீவ்காந்தி சாலை

கந்தன் சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்க நல்லூர், செம்மஞ்சேரி, நாவலூர், படூர், கேளம்பாக்கம்

வேளச்சேரி முதல் மேடவாக்கம் சாலை

வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், விடுதலை நகர், நாராயணபுரம், பள்ளிகரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், நங்கநல்லூர்.

தலைவர்: ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர்: பி.சி.செயராமன் (விடுதலைநகர்)
-  விடுதலை நாளேடு, 3.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக