ஞாயிறு, 8 மார்ச், 2020

சென்னை மண்டல கழக கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் முதற் பட்டியல்

மார்ச் 23இல் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்
சென்னை. மார்ச் 8- சென்னை மண்டல கழகக் கலந்துரையாடல் கூட்டம் 6.3.2020 அன்று சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர் கள் பங்கேற்க எழுச்சியோடு நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு கூட்டம்  துவங் கியது. திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் சே.மெ.மதிவதனி கடவுள் மறுப்புக் கூறினார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.
கழகத் துணைத் தலைவர் கருத்துரை
அடுத்துப் பேசிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் 10.3.2020 அன்று அன்னை மணியம்மையார் நூற் றாண்டு விழா குறித்தும், மார்ச் 23இல் தமிழர் தலைவர் அறிவித்துள்ளபடி மத் திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடை பெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்பதற்கு அனைத்து கழகப் பொறுப்பாளர்களும் முனைப்பா கப்  பணியாற்ற வேண்டுமெனக் கேட்டும், "விடுதலை" சந்தா சேர்ப்பு குறித்தும் விளக்கமாக தமது உரையில் குறிப்பிட்டார்.
போராட்ட வீரர்கள் - முதற்கட்டப் பட்டியல்
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், கும்மிடிப் பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந் தன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் தங்களது மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த கழகப் பணிகள் பற்றியும், எதிர் காலப் பணிகள் குறித்தும் விளக்கமாகக் குறிப்பிட்டனர். அனைத்து மாவட்டத் தலைவர்களும் மார்ச் 23இல் மத்திய அரசு அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்ட வீரர்களது முதற்கட்டப் பெயர் பட்டியலை தமிழர் தலைவரிடம் அளித்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி கழக மகளிரணிப் பணிகள் குறித்தும், சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி கழக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது அனைத்து கழகத் தோழர்களும் பெரும் அளவில் பங்கேற்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுப் பேசினர்.
ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் துரை.முத்துக்கிருட்டிணன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம் ஆகியோர் அம்பத்தூர் பகுதி கழக வளர்ச்சிப் பற்றி எடுத்துக் கூறினர்
கழகத் தலைவர் தலைமையுரை நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
சென்னை மண்டல கழகக் கலந்துரை யாடல் கூட்டத்தில் பெருமளவில் தோழர் கள் வந்து கலந்து கொண்டுள்ளது மகிழ்ச் சியளிப்பதாகக் குறிப்பிட்டார். முக்கிய மான பிரச்சினை களைப் பற்றி தெளிவான விளக்கங்களைத் தரும் சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டங்களிலும் அதே போன்று தோழர் கள் அனைவரும் கலந்து கொண்டு - கருத்துக்களை செவிமடுத்து - பிறரைத் தெளிவுப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இடையறாத முயற்சி - அதன் அடிப்படையிலான இடைவிடாதப் போராட்டம் வெற்றியே தரும் என்பதைக் குறிப்பிட்டு - நீட் எதிர்ப்புப் பிரச்சார தொடர் பயணம் மூலமாக தெளிவு பெற் றுள்ள பொதுமக்களும், கழகத் தோழர்க ளும் மார்ச் 23இல் பெருமளவில் முற்று கைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். சென்னை மண்டல கழகப் பிரச்சாரப் பணிகள் பற் றிக் குறிப்பிட்டும், கழகத்தின் கட்டுப்பாடு கள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார்.
அம்பத்தூர் கழகத் தோழர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருட் டிணன் 'விடுதலை' வளர்ச்சிநிதி - நீட் எதிர்ப்பு முற்றுகைப் போராட்ட நிதியாக ரூ. 3000த்தை தமிழர் தலைவரிடம் மகிழ்ச் சியுடன் வழங்கினார். ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன் 'விடுதலை' 2 ஆண்டு சந்தாக்குரிய தொகை ரூ. 3600யும், மேடவாக்கம் கழகத் தோழர் கே.அப்துல் சத்தார் ஒரு ஆண்டு 'உண்மை' சந்தா தொகை ரூ. 350யும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். ஆவடி மாவட்டத்தில் கழகத் தில் இணைந்த புதிய தோழர்களான இரத் தினம் - காயத்திரி இணையர் தமிழர் தலை வரிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமி ழர் தலைவர் அவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டினார். ஆவடி மாவட்டம் - அம்பத்தூர் நகர தலைவராக சரவணன், நகரச் செயலாள ராக கண்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட் டனர்.
சிறப்பாக நடைபெற்ற இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞ ரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசே கரன், மாநில கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, த.க.நடராசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சமூகக் காப்பணி மாநில அமைப்பாளர் சோ. சுரேசு மற்றும் சென்னை மண்டல கழகத் தின் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளை ஞரணி, மகளிரணி, மாணவர் கழகம்  சார்ந்த அனைத்துத் தோழர்களும் திரளா கக் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன் எற்பாட்டில் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழ் சாக்ரட்டீஸ் கழகத்திலிருந்து நீக்கம்
சென்னை- தமிழ் சாக்ரட்டீஸ் கழகக் கட்டுப் பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகை யிலும், கழகத் தோழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் தன்மையிலும் தொடர்ந்து நடந்து கொண்டு வருவதாலும், இது குறித்து கழகத் தோழர்கள் பலரும் ஆதாரங்களோடு புகார் கூறியதன் அடிப்படையில், அடுத்த அறிவிப்பு தலைமைக் கழகத்தின் சார்பில் வெளி வரும் வரை திராவிடர் கழ கத்திலிருந்து உறுப்பினர் உட்பட அவர் நீக்கி வைக் கப்படுகிறார்.
கழகத் தோழர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
6.3.2020 அன்று மாலை சென் னைப் பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் நடை பெற்ற சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையா டலில் நடவடிக்கை எடுத்து அறிவிக்கப் பட்டது.
- தலைமை நிலையம்
- விடுதலை நாளேடு, 8.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக