Published April 29, 2024, விடுதலை நாளேடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.
ஒரு காலகட்டத்தில் ‘சுப்பிரமணிய துதி’ பாடிய புரட்சிக் கவிஞர், மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டு, மறுமலர்ச்சிப் பெற்று, ‘‘புரட்சிக்கவிஞராக” அவர் மாறினார் என்பது முக்கியமான வரலாறாகும்.
புரட்சிக்கவிஞரின் படைப்புகள்
காலத்தை வென்று நிற்கக்கூடியவை!
அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தை வென்று நிற்கக்கூடியன.
‘‘நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கை நதி
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கைவளங்கள் செறிந்தென்ன?
மூடப்பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம்
ஓடுவதன்றோ? உயர்வதென்றோ? நானறியேன்”
என்று எதை எடுத்தாலும், புரட்சிக்கவிஞர் அவர்கள், தந்தை பெரியார் சிந்தனையோடு அளித்திருக்கிறார்.
புரட்சிக்கவிஞரின்
வரிக்கு ஈடாகாது!
தந்தை பெரியாரைப்பற்றி சொல்லு கின்றபொழுது,
‘‘தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக