கடைசிவரை கருப்புச் சட்டையுடன் கொள்கை உறுதியுடன் தீவிரமாக பணியாற்றிய சென்னை தரமணி பெரியார் பெருந்தொண்டர் ஜாபர் (வயது-83) அவர்கள் 10.10.21 காலை 6.00 மணி அளவில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தரமணி அக்பர் தெருவில் உள்ள அவருடைய இல்லம் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, தரமணி கோ. மஞ்சுநாதன் ஆகியோர் சென்றிருந்தனர். மாலை 6 மணி அளவில் உடல் அடக்கம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக