திங்கள், 17 ஜூன், 2024

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவர்கள் போராட்டம் பல்வேறு மாணவர் அமைப்பின் தலைவர்கள் கண்டன உரை!



Published June 17, 2024,  விடுதலை நாளேடு 

சென்னை, ஜூன் 17- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வில் குளறுபடி நடக்க காரணமான தேசிய தேர்வு முகமையிடம் விசாரணை நடத்த கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வடக்கு மண்டல குழுவின் சார்பில் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பா. தினேஷ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 14.6.2024 அன்று காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொருளாளர் பி.கணே சன், துணைத்தலைவர் ஆ.பிரகாஷ், துணைச் செயலாளர் இரா.ராமசாமி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜெ.அஜித், வேலூர் மாவட்ட செயலாளர் கார்த்தி, தென் சென்னை மாவட்ட குழு உறுப்பினர் வி.அகிலா, வடசென்னை அருண், வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திமுக மாணவர் அணி இணைச் செயலாளர் அன்பகம் மோகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில தலைவர் த.கு.வெங்கடேசன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், இந்திய மாணவர் சங்க தேசிய குழு உறுப்பினர் மிருதுளா, திராவிட மாணவர் கழக மாநிலச் செய லாளர் இரா.செந்தூரபாண்டியன், மதிமுக மாணவரணி மாநிலச் செயலாளர் பால.சசிகுமார், முற்போக்கு மாணவ கழக மாநில இணைச்செயலாளர் தயா.நெப்போலியன், இஸ்லாமிய மாணவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஆர். நூர்முகமது மற்றும் மருத்துவர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் நிறைவுரையாற்றினார். தொடர்ந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தென் சென்னை மாநிலச் செயலாளர் ஆ.மணிகண்டன் நன்றியுரை கூறினார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக